Powered By Blogger

Oct 11, 2015

எனக்கு பிடித்த நிஜ மனிதர்கள்.- சாந்தி சோஷியல் சர்வீஸ்

எனக்கு பிடித்த நிஜ மனிதர்கள்.-
சாந்தி சோஷியல் சர்வீஸ்

Sri.B.சுப்ரமணியம்.

கோவை சிங்கநல்லூரில் ஒரு
அரசாங்கம்
செய்யாததை ஒரு தனி மனிதர்
செய்து வருகிறார். அவர்
உருவாக்கி நடத்திவரும் "சாந்தி
சோஷியல் சர்வீஸ்"
என்கிற ட்ரஸ்ட் செய்து
வருகிறது. புகழை சிறிதும்
விரும்பாத இந்த மனிதர் ஒரு
பெரும்
புரட்சியை செய்து வருகிறார்.
. கொலை, கடத்தல், கற்பழிப்பு
செய்திகளை தினமும் போடும்
தினசரிகள் இதைப் போன்ற நல்ல
செய்திகளை போடாதது ஏன்
என்று புரியவில்லை.
நான் சிங்கநல்லூர் பகுதிக்கு
செல்லும் போதெல்லாம்
இங்கு பல முறை சென்றதுண்டு.
எப்போது சென்றாலும் அங்கு
குழந்தைகளின்
விளையாட்டு குதூலகம்,
குறைந்த விலையில் நல்ல
ருசியாக உணவை உண்ட பல
வாடிக்கையாளர்களின்
நன்றிகள், பல வயோதிகர்கள்
மற்றும் நோயாளிகளின்
வாழ்த்துக்கள் என்று
ஒவ்வொரு தினத்தையும்
கழிக்கிறது "சாந்தி சோஷியல்
சர்வீஸ்". நான் பல
முறை அங்கு
பணியாற்றுபவர்களிடம்
விவரங்கள்
கேட்பதுண்டு. ஆனால் "பி
சுப்ரமணியம்" அவர்களின்
பெயரை கூட எந்த தொழிலாளரோ,
அலுவுலரோ குறிப்பிட
மாட்டார்கள்.
ஏனென்றால் புகழை
வெறுக்கும் எதிர்ப்பாற்ற
சேவையே இவரின்
குறிக்கோள். தன் பெயரை
யாரும் முன்நிறுத்த
கூடாது என்பதுதான் இவரின்
கட்டளை. இவரின்
பெயரைக் கூட நான்
வலைமனைகளில் தேடித்தான்
பிடிக்க வேண்டியதாயிற்று.
இவர் சாந்தி கியர் எனும்
கியர் பாக்ஸ் தயாரிக்கும்
மிகப்பெரும்
குழுமத்தை நடத்தி வருகையில்
இரண்டு கோடி ரூபாய் மதிப்பு
மிக்க
கம்பெனி பங்குகளை
தொழிலாளர்களுக்கு இலவசமாக
கொடுத்தது இவரின் தாராள
குணத்திற்கு ஒரு சிறு
உதாரணம்.
சென்ற தீபாவளிக்கு முன்பு
காண்டீனில் பணிபுரியும்
சில தொழிளாலர்களிடம் பேசிய
போது, அவர்கள்
கை நிறைய போனஸ்
கிடைத்துள்ளதை
குறிப்பிட்டார்க
ள். யாருக்கும் எந்த குறையும்
இல்லாமல் மிகச் சிறந்த
முறையில் நிர்வாகம் செய்யப்
படுகிறது இந்த ட்ர்ஸ்ட்.
யாரிடமும் ஒரு பைசா
நன்கொடை வாங்குவதில்லை
இவர்.
கோவை திருச்சி ரோட்டின்
மேல் அமைந்திருக்கும்
இந்த மிகப்பெரிய பகுதி வேறு
யாரிடமாவது இருந்திருந்தால்
இதை வைத்து பல கோடிகள்
சம்பாதிக்க முடியும்.
திரு சுப்ரமணியம்
அவர்களுக்கு, "மக்கள்
சேவையே மகேசன் சேவை"
என்பதே தாரக மந்திரம்.
சாந்தி சோஷியல் சர்வீஸின்
சேவைகள் பல, அவற்றில்
ஒரு சில விபரங்கள் வருமாறு.
அரசாங்க பள்ளிக்
குழந்தைகளுக்கு பலவிதமான
உதவிகள்.
குழந்தைகள் காப்பகங்கள்.
மிகக் குறைந்த விலையில்
அற்புதமான, சுகாதாரமான
சாப்பாடு மற்றும் சிற்றுண்டி
வகைகள். ஆதரவற்ற
வயோதிகர்கள் மற்றும்
ஊனமுற்றோருக்கு இலவசமாக
தரமான, சுகாதாரமான உணவு.
மிகக் குறைந்த விலையில்
மருந்துகள், மருத்துவ
சிகிச்சைகள், மிக அதி நவீன
பரிசோதனை மையம் மற்றும் ரத்த
வங்கி.
இலவசமான ஆம்புலன்ஸ் வசதி.
குழந்தைகள் குதூலகமாக
விளையாட பல விதமான
விளையாட்டு கருவிகள்
அனைத்தும் இலவசமாக.
குறைவான விலையில் தரமான
காய்கறிகள்.
சரியான அளவு மற்றும் சரியான
தரத்தோடு எரிபொருள்
வழங்கும் பெட்ரோல் பங்க்
(விலை ஏற்றத்தின் போது கூட
ஸ்டாக் உள்ள வரை பழைய
விலையிலேயே கொடுப்பது
இவர்களின் வழக்கம்)
எரி வாயு உதவி கொண்டு
குறைந்த
கட்டணத்தோடு கூடிய உடல்
எரியூட்டு மையம்
இப்படி மனிதனின் பிறப்பு
முதல் இறப்பு வரை பல
சேவைகள் செய்கிறது "சாந்தி
சோஷியல் சர்வீஸ்"
இந்தியாவில் எத்தனையோ
கோடீஸ்வரர்கள்
இருக்கிறார்கள்.
ஆனால் எத்தனை பேருக்கு
பிறருக்கு சேவை செய்யும்
மனம் இருக்கிறது ?
இவரை நாம் வாழ்த்த ஒன்றுமே
இல்லை.
இறைவன் இவருக்கு என்று
தனியாக ஒரு சுவர்கம்
கட்டி வைத்தாலும் கூட அது
ஈடாகாது. பல தொழில்
அதிபர்களுக்கு இவர் ஒரு
அற்புதமான உதாரணம்.
இவர்களை போன்றவர்கள்
இருப்பதால்தான் இந்த
பூமி இன்னும் நிலைப்பெற்று
இருக்கிறது.

No comments:

Post a Comment