Powered By Blogger

Sep 27, 2015

Try to ஒன்பதின் தத்துவம்,என்ன என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்

Try to ஒன்பதின் தத்துவம்,என்ன என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்
**************************************************
9ன் சிறப்பு தெரியுமா?
எண்களில் விசேஷமான
எண்ணாக கருதப்படுவது
ஒன்பது.
அந்த எண்ணில்
நீண்ட வாழ்வு எனும்
அர்த்தம் பொதிந்திருப்பதாகச்
சொல்கின்றனர்,

சீனர்களின் சொர்க்க கோபுரம்,
ஒன்பது வளையங்களால்
சூழப்பட்டுள்ளது.
எகிப்து, ஐரோப்பா, கிரீக்
முதலான நாடுகளும்
9-ஆம் எண்ணை
விசேஷமாகப் பயன்படுத்திப்
போற்றுகின்றன.
புத்த மதத்தில்,
மிக முக்கியமான
சடங்குகள் யாவும்
ஒன்பது துறவிகளைக் கொண்டே
நடைபெறும்.
தங்கம், வெள்ளி மற்றும்
பிளாட்டினத்தின்
சுத்தத்தை 999 என்று
மதிப்பிடுவார்கள்.

பெண்களின் கர்ப்பம்,
பூரணமாவது ஒன்பதாம் மாத
நிறைவில்தான்!
ஒன்பது எனும் எண்
இன்னும் மகத்துவங்கள்
கொண்டது.
ஒன்பது என்ற எண்ணுக்கு
வடமொழியில் நவம்
என்று பெயர்.
நவ என்ற சொல்
புதிய, புதுமை எனும்
பொருள் உடையது.

நவ சக்திகள்:
1,வாமை,
2,ஜேஷ்டை,
3,ரவுத்ரி,
4,காளி,
5,கலவிகரணி,
6,பலவிகரணி,
7,பலப்பிரமதனி,
8,சர்வபூததமனி,
9,மனோன்மணி,

நவ தீர்த்தங்கள்:
1,கங்கை,
2,யமுனை,
3,சரஸ்வதி,
4,கோதாவரி,
5,சரயு,
6.நர்மதை,
7,காவிரி,
8,பாலாறு,
9,குமரி

நவ வீரர்கள்:
1,வீரவாகுதேவர்,
2,வீரகேசரி,
3,வீரமகேந்திரன்,
4,வீரமகேசன்,
5,வீரபுரந்திரன்,
6,வீரராக்ஷசன்,
7,வீரமார்த்தாண்டன்,
8,வீரராந்தகன்,
9,வீரதீரன்

நவ அபிஷேகங்கள்:
1,மஞ்சள்,
2,பஞ்சாமிர்தம்,
3,பால்,
4,நெய்,
5,தேன்,
6,தயிர்,
7,சர்க்கரை,
8,சந்தனம்,
9,விபூதி.

நவ ரசம்:
1,இன்பம்,
2,நகை,
3,கருணை,
4,கோபம்,
5,வீரம்,
6,பயம்,
7,அருவருப்பு,
8,அற்புதம்,
9,சாந்தம் ,
ஆகியன நவரசங்கள் ஆகும்.

நவக்கிரகங்கள்:
1,சூரியன்,
2,சந்திரன்,
3,செவ்வாய்,
4,புதன்,
5,குரு,
6,சுக்கிரன்,
7,சனி,
8,ராகு,
9.கேது

நவமணிகள்:-

நவரத்தினங்கள்:
1,கோமேதகம்,
2,நீலம்,
3,வைரம்,
4,பவளம்,
5,புஸ்பராகம்,
6,மரகதம்,
7,மாணிக்கம்,
8,முத்து,
9,வைடூரியம்

நவ திரவியங்கள்:
1,பிருதிவி,
2,அப்பு,
3,தேயு,
4,வாயு,
5,ஆகாயம்,
6,காலம்,
7, திக்கு,
8,ஆன்மா,
9,மனம்

நவலோகம் (தாது):
1,பொன்,
2,வெள்ளி,
3,செம்பு,
4,பித்தளை,
5,ஈயம்,
6,வெண்கலம்,
7,இரும்பு,
8,தரா,
9,துத்தநாகம்

நவ தானியங்கள்:
1,நெல்,
2,கோதுமை,
3,பாசிப்பயறு,
4,துவரை,
5,மொச்சை,
6,எள்,
7,கொள்ளு,
8,உளுந்து,
9,வேர்க்கடலை

சிவ விரதங்கள் ஒன்பது:
1,சோமவார விரதம்,
2,திருவாதிரை விரதம்,
3,உமாகேச்வர விரதம்,
4,சிவராத்ரி விரதம்,
5,பிரதோஷ விரதம்,
6,கேதார விரதம்,
7,ரிஷப விரதம்,
8,கல்யாணசுந்தர விரதம்,
9,சூல விரதம்

நவசந்தி தாளங்கள்:
1,அரிதாளம்,
2,அருமதாளம்,
3,சமதாளம்,
4,சயதாளம்,
5,சித்திரதாளம்,
6,துருவதாளம்,
7,நிவர்த்திதாளம்,
8,படிமதாளம்,
9,விடதாளம்

அடியார்களின் பண்புகள்:
1,எதிர்கொள்ளல்,
2,பணிதல்,
3,ஆசனம் (இருக்கை) தருதல்,
4,கால் கழுவுதல்,
5,அருச்சித்தல்,
6,தூபம் இடல்,
7,தீபம் சாட்டல்,
8,புகழ்தல்,
9,அமுது அளித்தல்,

(விக்ரமார்க்கனின்
சபையிலிருந்த 9 புலவர்கள்; நவரத்னங்கள் எனச் சிறப்பிக்கப்படுவர்)
1,நவரத்னங்கள் (முனிவர்கள்)தன்வந்த்ரி,
2,க்ஷணபகர்,
3,அமரஸிம்ஹர்,
4,சங்கு,
5,வேதாலபட்டர்,
6,கடகர்ப்பரர்,
7,காளிதாசர்,
8,வராகமிஹிரர்,
9,வரருசி

அடியார்களின் நவகுணங்கள்:
1,அன்பு,
2,இனிமை,
3,உண்மை,
4,நன்மை,
5,மென்மை,
6,சிந்தனை,
7,காலம்,
8,சபை,
9,மவுனம்.

நவ நிதிகள்:
1,சங்கம்,
2,பதுமம்,
3,மகாபதுமம்,
4,மகரம்,
5,கச்சபம்,
6,முகுந்தம்,
7,குந்தம்,
8.நீலம்,
9.வரம்

நவ குண்டங்கள்:
யாகசாலையில் அமைக்கப்படும்
ஒன்பது வகையிலான
யாக குண்ட அமைப்புக்கள்:
1,சதுரம்,
2,யோனி,
3,அர்த்த சந்திரன்,
4,திரிகோணம்,
5,விருத்தம் (வட்டம்),
6.அறுகோணம்,
பத்மம்,
எண்கோணம்,

பிரதான விருத்தம்.
1,நவவித பக்தி :
2,சிரவணம்,
3,கீர்த்தனம்,
4,ஸ்மரணம்,
5,பாத சேவனம்அர்ச்சனம்,
6,வந்தனம்,
7,தாஸ்யம்,
8,சக்கியம்,
9,ஆத்ம நிவேதனம்

நவ பிரம்மாக்கள் :
1,குமார பிரம்மன்,
2,அர்க்க பிரம்மன்,
3,வீர பிரம்மன்,
4,பால பிரம்மன்,
5,சுவர்க்க பிரம்மன்,
6,கருட பிரம்மன்,
7,விஸ்வ பிரம்மன்,
8,பத்ம பிரம்மன்,
9,தராக பிரம்மன்

நவக்கிரக தலங்கள் -
1,சூரியனார் கோயிவில்,
2,திங்களூர்,
3,வைத்தீஸ்வரன் கோவில்,
4,திருவெண்காடு,
5,ஆலங்குடி,
6,கஞ்சனூர்,
7,திருநள்ளாறு,
8,திருநாகேஸ்வரம், 9,கீழ்ப்பெரும்பள்ளம்

நவபாஷாணம் -
1,வீரம்,
2, பூரம்,
3, ரசம்,
4,ஜாதிலிங்கம்,
5,கண்டகம்,
6,கவுரி பாஷாணம்,
7,வெள்ளை பாஷாணம்,
8,ம்ருதர்சிங்,
9,சிலாஷத்

நவதுர்க்கா -
1,ஸித்திதத்ரி,
2,கஷ்முந்தா,
3,பிரம்மாச்சாரினி,
5,ஷைலபுத்ரி,
7,மகா கவுரி,
8,சந்திரகாந்தா,
9,ஸ்கந்தமாதா,
6.மகிஷாசுரமர்த்தினி, -,காளராத்ரி

நவ சக்கரங்கள் -
1,த்ரைலோக்ய மோகன சக்கரம்,
2,சர்வசாபுரக சக்கரம்,
3,சர்வ சம்மோகன சக்கரம்,
4,சர்வ சவுபாக்ய சக்கரம்,
5,சர்வார்த்த சாதக சக்கரம்,
6,சர்வ ரக்ஷõகர சக்கரம்,
7,சர்வ ரோஹ ஹர சக்கரம்,
8,சர்வ ஸித்தி ப்ரத சக்கரம்,
9,சர்வனந்தமைய சக்கரம்.

நவநாதர்கள் -
1,ஆதிநாதர்,
2,உதய நாதர்,
3,சத்ய நாதர்,
4,சந்தோஷ நாதர்,
5,ஆச்சாள் அசாம்பயநாதர்,
6,கஜ்வேலி கஜ்கண்டர் நாதர்,
7,சித்த சொவ்றங்கி
8,நாதர், மச்சேந்திர நாதர்,
9,குரு கோரக்க நாதர்

உடலின் நவ துவாரங்கள் :
இரண்டு கண்கள்,
இரண்டு காதுகள்,
இரண்டு மூக்குத் துவாரங்கள்,
ஒரு வாய்,
இரண்டு மலஜல துவாரங்கள்

உடலின் ஒன்பது சக்கரங்கள் :
1,தோல்,
2,ரத்தம்,
3,மாமிசம்,
4,மேதஸ்,
5,எலும்பு,
6,மஜ்ஜை,
7,சுக்கிலம்,
8,தேஜஸ்,
9,ரோமம்

18 புராணங்கள்,
18 படிகள் என அனைத்தும்
9-ன் மூலமாக தான் உள்ளன.

காயத்ரி மந்திரத்தை
108 முறை ஜபிக்க வேண்டும்.
எல்லா தெய்வத்தின்
நாமாவளியும் ஜப மாலையின்
எண்ணிக்கையும்
இதை அடிப்படையாகக் கொண்டதுதான்!
புத்த மதத்தினர்
108 முறை மணியடித்து,
புது வருடத்தை வரவேற்றுக்
கொண்டாடுகின்றனர்.
சீனாவில்,
36 மணிகளை
மூன்று பிரிவாகக் கொண்டு,
சு ஸூ எனப்படும்
மாலையைக் கொண்டு
ஜபம் செய்வார்கள்.

ஸ்ரீகிருஷ்ணருக்குப்
பிரியமான மாதம்... மார்கழி.
இது வருடத்தின் 9-வது மாதம்!
மனிதராகப் பிறந்தவன்
எப்படி வாழ வேண்டும் என
வாழ்ந்து காட்டிய
ஸ்ரீராமபிரான் பிறந்தது,
9-ஆம் திதியான
நவமி நாளில்தான்.
9 என்ற எண்ணை
கேளிக்கையாக எண்ணாமல்
புராணங்களிலும்,
நடைமுறையிலும் சிறப்பிடம் பெற்றுள்ளது என்பதை
போற்றுவோம்.

வறுமையை உணர்ந்த, பகிர்ந்த தலைவர்கள

பெருந்தலைவர் காமராஜர், முதல்வராக
இருந்த போது,  சென்னை தாம்பரம்
குடிசைவாசிகளுக்கு  பட்டா வேண்டும்
என்று ஜீவா போராடினார்.

அப்போது,  தாம்பரத்தில் ஓர்
ஆரம்பப்பள்ளியை திறந்து வைக்கச் சென்றார் காமராஜர்.
போகும் வழியில் தான் ஜீவாவின் வீடு இருந்தது.

அந்தப் பள்ளிக்கு அடிக்கல் நாட்டியவர்
ஜீவா என்பதால், அவரையும் அழைத்துச்
செல்வது தான் சரியாக இருக்கும்
என்று நினைத்து,
காரை ஜீவாவின் வீட்டுக்கு விடச்
சொன்னார்.

ஒழுகும் கூரை வீடு ஒன்றில் குடியிருந்தார் ஜீவா.

திடீரென தன்னுடைய
வீட்டுக்கு காமராஜர்
வந்ததைக் கண்டு ஆச்சர்யப்பட்டு "என்ன காமராஜ்"
என்று கேட்டார்" ஜீவா.
"என்ன நீங்க இந்த வீட்டுல இருக்கீங்க..?"
என்று கேட்டு  ஆதங்கப்பட்டார் காமராஜர்.
உடனே ஜீவா,
"நான் மட்டுமா..?
இங்கே இருக்கிற
எல்லோரையும் போலத்தான் நானும்
இருக்கேன், என்று சர்வ சாதாரணமாக சொன்னார்.

காமராஜரை,
உட்கார வைக்க,
ஒரு நாற்காலி கூட
இல்லாததால், இருவரும், நின்று கொண்டே பேசினார்கள்.

"நீ அடிக்கல் நாட்டிய,
பள்ளிக் கூடத்தைத் திறக்கணும்.
அதான் உன்னையும் கூப்பிட்டுப் போக
வந்தேன்"
என்றார் காமராஜர்.

"காமராஜ்,
நீ முதலமைச்சர்,
நீ திறந்தா போதும்"
என்று ஜீவா மறுக்க,
"அட... ஆரம்பிச்ச
நீ இல்லாம,
நான் எப்படிப் போக,
கிளம்பு போகலாம்" என்று அழைத்தார்,  காமராஜர்,

"அப்படின்னா,
நீ முன்னால போ. நான் அரை மணி நேரத்துல வந்துடுறேன் "
என்று அனுப்பி வைத்தார்.
"கண்டிப்பாக வரணும்"
என்றார் காமராஜர்.

விழாவுக்கு, அரை மணிக்கு மேல்
தாமதமாகவே வந்தார் ஜீவா.

"என்ன ஜீவா, இப்படி லேட் பண்ணிட்டியே...? "
என்று காமராஜர் உரிமையுடன்
கடிந்து கொண்டார்.

உடனே ஜீவா, "நல்ல
வேட்டி ஒண்ணுதாம்பா இருக்கு.
அதை உடனே துவைச்சு,
காய வைச்சு,
கட்டிட்டு வர்றேன். அதான் தாமதம்.
தப்பா நினைச்சுக்காதே"... என்றார்.
உடனே கண் கலங்கி விட்டார் காமராஜர்.

விழா நல்ல படியாக முடிந்தது. ஆனால்
ஜீவாவின் வறுமை,  காமராஜரை மிகவும் வாட்டியது.
அதனால் ஜீவாவுக்கு தெரியாமல், அவரது கம்யூனிஸ்ட் நண்பர்களை அழைத்துப் பேசினார்.
"ஜீவாவுக்கு வீடு கொடுத்தா போக
மாட்டான்.
காரு கொடுத்தாலும் வாங்க மாட்டான்.
ஆனா,
அவனைப் போல தியாகிகள் எல்லாம்
இத்தனை கஷ்டப் படக்கூடாது என்ன
செய்யலாம்"....? என்றார்.
கூட்டத்தில் இருந்த ஒருவர்,
"ஜீவாவின்
மனைவி படித்தவர். அதனால்
அவருக்கு ஏதாவது பள்ளியில் அரசு வேலை கொடுத்தா, அந்த குடும்பம்
நிம்மதியாக இருக்கும்" என்றார்.

உடனே காமராஜர், "ரொம்ப நல்ல யோசனை.

ஆனா,

நான் கொடுத்தா,  அவன்
பொண்டாட்டியை வேலை செய்ய விட
மாட்டான்.

அதனால நீங்களா ஜீவா மனைவியிடம்
பேசி,

"வீட்டுக்குப் பக்கத்துல
பள்ளிக்கூடத்துல
ஒரு வேலை காலியாக இருக்குன்னு சொல்லி மனு போடச் சொல்லுங்க.

உடனே, 
நான் வேலை
போட்டுத் தர்றேன்...

ஆனா,
இந்த விஷயம்
வேறு யாருக்கும்
தெரியக்கூடாது

அவன் முரடன்,
உடனே வேலையை
விட வைச்சுடுவான்

என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

அதன்படியே
ஜீவாவுக்குத்
தெரியாமல்,
அவருடைய
மனைவிக்கு
அரசு வேலை
கொடுத்தார்
காமராஜர்.

அதற்குப்
பின்னரே
ஜீவாவின்
வாழ்க்கையில்
வறுமை ஒழிந்தது.

காமராஜர், ஜீவா
இருவருடைய நட்பும்
வார்த்தைகளால்
வடிக்க முடியாதது.

நோய் வாய்ப்பட்டு
சென்னை அரசு பொது
மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டார் ஜீவா.

தனக்கு முடிவு வந்து விட்டதைத் தெரிந்து கொண்டவர்,
கடைசியாக உதிர்த்த வார்த்தைகள்..."
காமராஜருக்கு போன் பண்ணுங்கள்"...
என்பது தான்.

இனி எங்கே
காணமுடியம்

இது போன்ற
தலைவர்களை.

அடித்தட்டு
மக்களோடு மக்களாக,

வறுமையை உணர்ந்த,
பகிர்ந்த தலைவர்கள்,

கர்மவீரர் 
காமராஜர்,
ஜீவா,
கக்கன்
போன்ற தலைவர்கள்.

இதை பகிரலாம்
என்று நின

Sep 26, 2015

அதிக பணம் சம்பாதிக்க மிக எளிய வழி.....!

அதிக பணம் சம்பாதிக்க மிக எளிய
வழி.....!
------------------------------------------------------
குப்பனுக்கும்சுப்பனுக்கும் தெரிந்த
ஸ்டாக் மார்க்கெட்
பற்றி உங்களுக்கு தெரியவில்லையா?
அப்ப படியுங்கள் இதை...
ஒரு பெரிய பணக்காரன்
ஒரு கிராமத்திற்கு வந்து சொன்னான்...
நீங்கள் என்னிடம்
பாம்பை பிடித்து தந்தால்
ஒரு பாம்புக்கு 10 ரூபாய் தருகிறேன்
என்றான்.
உடனே கிராம மக்கள் ஊரில் உள்ள
பாம்புக்களை எல்லாம்
பிடித்து கொடுத்து 10
ரூபாயை வாங்கி கொண்டார்கள்.
ஊரில் உள்ள எல்லாப் பாம்புகளையும்
பிடித்துவிட்டதால் அதன்
எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது.
அதனால் மக்களுக்கு அதில் இருந்த
ஆர்வம் குறைந்து போய்விட்டது.
உடனே அந்த பணக்காரர்
அறிவித்தார் .... இப்போதும்
பாம்பை பிடித்து கொடுப்பவர்களுக்
கு 25 ரூபாய் தருவதாக சொன்னார்.
அவர்கள் மீண்டும்
உற்சாகமாகி தேடி தேடிபாம்பை பிடித்து கொடுத்தார்கள் .
ஊரில் ஒன்று கூட மிச்சம்வைக்காமல்
எல்லாப் பாம்புகளையும்
பிடித்துவிட்டதால் அதன்
எண்ணிக்கை மிக மிக மிக குறைய
ஆரம்பித்து பாம்பை பார்பதேமிக
அறியதாகி விட்டதால் அதில் இருந்த
ஆர்வம் குறைந்துபோய்விட்டது.
அந்த பணக்காரர் விடவில்லை.
மீண்டும் அறிவித்தார் இப்போது 50
ரூபாய் தருவதாக ....உடனே ஊரில்
உள்ள மக்கள் அருகில் இருந்த
காடு மலை சென்று ஒன்று விடாமல்
பிடித்துகொடுத்தார்கள்.
இப்போது பாம்பை காண்பதே அறிதாகிவிட்டது.
அவர் இப்போதும் விடவில்லை.எனக்கு இன்னும் அதிகபாம்புகள் தேவை.
மேலும்பாம்பு கிடைப்பது அரிதாகிவிட்டதால்
200 ரூபாய் தருவதாக அறிவித்தார்.
அதுமட்டுமல்லாமல் தான்அவசர
அவசரமாக இன்னொரு பிஸினஸ்
விஷயமாகமற்றொரு ஊர் செல்ல
வேண்டுமென்பதால் ஒரு வாரத்தில்
வந்து வாங்கி கொள்கிறேன் அதனால்
உங்களால் முடிந்த
அளவுபிடித்து கொண்டுவாருங்கள்
என்று சொல்லி நான்
வரும்வரைக்கு என் உதவியாளர்
இங்கு இருப்பார்
என்று சொல்லிஎன்றுவிட்டார்.
அடுத்த நாள் அந்த உதவியாளர் ஊர்
மக்களை கூப்பிட்டுமக்களே "இங்கே பாருங்கள்
அனைத்து பாம்புகளும் இந்த
கூண்டில் உள்ளது. நிச்சயமாக
சொல்லுகிறேன் இந்த
ஊரிலும்அதற்கு அருகில் எங்கேயும்
பாம்புகளே இருக்காது. அதனால்நான்
ஒரு ஐடியா வைத்து இருக்கிறேன்.
இந்த பாம்புக்களை எல்லாம் நான்
உங்களுக்கு 75 ரூபாய்க்கு விற்கிறேன்.
அதன்பின் முதலாளி வருவதற்கு முதல்
நாள் நான் அவசர அவசரமாக
வெளியூர் செல்ல
வேண்டி இருக்கிறது என்றுஅவருக்கு போன்
மூலம் சொல்லி சென்று விடுகிறேன்.
அவர்வந்ததும் இதே பாம்பை நீங்கள்
அவரிடம் 200
ரூபாய்க்கு விற்றுவிடுங்கள்"
என்று சொன்னார்.
உடனே மக்கள் தங்கள் சேமிப்பில்
இருந்த பணத்தையும் இருந்த
நகைகளையும் விற்று அந்தபணத்தில்
பாம்பை போட்டி போட்டுக்
கொண்டு வாங்கிகுவித்தார்கள்.
எல்லாப் பாம்பையும் விற்ற அந்த
உதவியாளர்
முதலாளி நாளைவருகிறார் அதனால்
நான் இன்று போகிறேன்
என்று சொல்லி போய்விட்டார். அந்த
நாளில் இருந்து இந்த நாள் வரை அந்த
ஊர் மக்கள் அந்த முதலாளியையும்
பார்க்கவில்லை அந்த
உதவியாளனையும் பார்க்கவில்லை....
இப்போது அவர்களிடம் இருப்பது அந்த
பாம்பு மட்டும்தான்.
அன்பு நண்பர்களே.
இப்போது உங்களுக்கு புரிந்து இருக்கும்
ஸ்டாக்மார்க்கெட்
எப்படி செயல்படுகிறது என்று.

உறவு முறைகள் ....பற்றி .... மிகவும் சிந்திக்கவேண்டிய one of the BEST பதிவ

உறவு முறைகள் ....பற்றி ....
மிகவும் சிந்திக்கவேண்டிய
one of the BEST பதிவு
----------------------------------
அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, சின்ன அண்ணன், பெரிய அண்ணன், சின்ன அக்கா,
பெரிய அக்கா, சித்தப்பா, பெரியப்பா, அத்தை, மாமா, மச்சான், மச்சினி, அண்ணி, கொழுந்தனார், நாத்தனார்,
தாய்மாமன், சித்தப்பா பையன், சித்தப்பா பொண்ணு,
பெரியப்பா பையன்,
பெரியப்பா பொண்ணு,
அத்தை பையன்,
அத்தை பொண்ணு, மாமன் பொண்ணு, மாமன் பையன், இது போன்ற வார்த்தைகள் எல்லாம் 2050 மேல் யாருடைய காதிலும் விழாது, யாரும் கூப்பிடவும் மாட்டார்கள், அகராதியில் இருந்து கூட கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவிடும்
காரணம்,
ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு என்று ஒரே ஒரு குழந்தை மட்டும் போதும் என்று முடிவெடுக்க ஆரம்பித்ததுதான்!
அப்படி இருக்கும் போது இந்த உறவுகள் எல்லாம் எப்படி வரும்?
பெண்கள் வயதுக்கு வந்ததும் சீர்வரிசை செய்யவோ, பந்தல் போடவோ, முதல் புடவை எடுத்துத்தரவோ, எந்த தாய்மாமனும் இருக்கப்போவது இல்லை!
திருமணத்தின் போது அரசாணைக்கால் நட
எந்த அண்ணனும் இருக்கப்போவதில்லை மாப்பிள்ளைக்கு மோதிரம் போட எந்த தம்பியும் இருக்கப்போவதில்லை, குழந்தைக்கு மோட்டை போட யார் மடியில் உட்கார வைப்பார்கள்?
கட்டிக்கொடுத்த பெண்ணுக்கு எதாவது பிரச்சனை என்றால் அண்ணனும் தம்பியும் பறந்து செல்வார்கள்,
இனி யார் போவார்?
ஒவ்வொரு பெண்ணும், சொந்தபந்தம் ஏதுமின்றி
ஆறுதலுக்கு ஆள் இன்றி தவிக்க போகிறார்கள்
ஒவ்வொரு ஆணும்
தன் கஷ்டநஷ்டங்களில் பங்குகொள்ள அண்ணன் தம்பி யாருமின்றி அவதிப்பட போகிறார்கள்
அப்பா அம்மாவை தவிர எந்த உறவுகளும் இருக்கப்போவதில்லை,
அந்த ஒரு குழந்தையும்
வெளியூருக்கோ
இல்லை தனிக்குடித்தனமோ சென்றுவிட்டால்
ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்று வளர்த்தவர்கள் எல்லாம் வயதான காலத்தில், ஏனென்று கேட்க நாதியற்று முதியோர் இல்லத்திலோ இல்லை அந்த ஒரு குழந்தைக்காக கட்டிய வசதியான வீட்டிலோ அனாதையாக கிடந்து சாவார்கள்!
உறவுகளின் உன்னத மதிப்பை உணராமல் பொருளாதார முன்னேற்றத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு
ஒரு குழந்தைக்கு மேல் வேண்டாம் என சோம்பேறித்தனப்பட்டு
எந்திர வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கும் அத்தனைபேருக்கும்
இதே நிலைதான் !
உடல்நிலை சரியில்லாமல் ஆஸ்பிடலில் சேர்க்கப்பட்டால் ஓடோடி வந்து பார்க்க உறவுகள் வேண்டாமா?!
சின்னச்சின்ன விஷயங்களுக்கெல்லாம்
எனக்கு உனக்கு என்று சண்டைபோடும் அதே குழந்தைகள் தான் வயதான காலத்தில் அப்பா அம்மாவுக்கு எதாவது ஒன்று என்றால் நான் நீ என்று ஓடிவருவார்கள்!
கணவன் குடும்பம் குழந்தை என்று உயிரைவிட்ட பெண்கள் கூட பெற்றோருக்கு
ஒன்று என்றால் அத்தனையும் தூக்கியெறிந்துவிட்டு முதலில் வந்து நிற்பார்கள்!
ஒரே ஒரு முறை உங்கள் கடைசி காலத்தை நினைத்துபாருங்கள்!
பணமில்லாத ஒருவனை அனாதை என்று யாரும் சொல்வதில்லை!
ஆனால் உறவுகள் இல்லாத ஒருவன் எத்தனை கோடி வைத்திருந்தாலும் அனாதைதான் என்பதை மறந்துவிடக்கூடது!
கார் பங்களா வசதி வாய்ப்புகளுடன்
ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்ற பெயரில் உறவுகளற்ற ஒரு அனாதையை வளர்ப்பதற்கும்,
வயதான காலத்தில் நாதியற்று சாவதற்குமா இவ்வளவு பாடுபட்டு
ஓடி ஓடி சம்பாதிக்கிறீர்கள்?

அறிவுரை சொல்லி உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்,

�� கோயிலை இடித்துவிட்டு பள்ளிக்கூடம் அமைப்போம் என்றார்கள்... ஆனால் உண்டியலை அகற்ற மறந்துவிட்டார்கள்...!!!

������������������

��எனக்கு அறிவுரை சொல்லி உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள், என் எந்தத் தவறும் எனக்குத் தெரியாமல் செய்யப்பட்டதல்ல...!!!

������������������

��ஓடும் ஓட்டமெல்லாம் மரணத்துக்காத்தான் எனும் போது, கொஞ்சம் நிதானமாகவும் நடக்கலாம்...!!!

������������������

��நான் உங்களை பற்றி நினைப்பதை எல்லாம் சொல்லி விட வேண்டுமானால், நீங்கள் என் எதிரியாக இருக்க வேண்டும்...!!!

������������������

��ஏசி என்பது நாம் இருக்கும் சின்ன அறையை குளிராகவும் இந்த பெரிய பூமியை சூடாகவும் மாற்றுகிறது...!!!

������������������

��முடி வளர்க்கிறதுக்கு எடுக்குற முயற்சி, செடி வளர்ப்பதற்கு யாரும் எடுக்கிறதில்லை...!!!

������������������

��அனைவரும் ஆவேசத்துடன், முன்னேறிச் சென்று கொண்டு இருக்கிறார்கள். கொஞ்சம் அசந்தால், நம்மையும் மிதித்துத் தாண்டிச் சென்று விடுவார்கள்...!!!

������������������

��தன்னைப் புலி என்று நினைக்கும் எல்லா ஆண்களும் தம் மனைவியிடம்"மியாவ்" என்றே கர்ஜிக்கிறார்கள்...!!!

������������������

��எல்லோரையும் திட்டிக்கொண்டே இருப்பவனுக்கு நிஜ வாழ்வில் நண்பர்கள் இல்லாமல் இருப்பதும் இணைய வாழ்வில் நிறைந்து இருப்பதும் விசித்திர முரண்...!!!

������������������

��அம்மா சமைத்த அமுதை விஷமாக்கினேன் பிளாஸ்டிக் டப்பாக்குள் அடைத்து...!!!

������������������

��கடவுளுக்கு நீங்களாகவே ஒரு உருவம் கொடுத்து விட்ட படியால்.. கடவுள் உங்கள் எதிரில் இருந்தாலும் தெரிவதில்லை...!!!

������������������

��மரங்கள் மட்டும் "WIFI" சிக்னல் தருமானால் மரங்களாக நட்டுத் தள்ளியிருப்போம்... ஆனால் பாவம், மரங்களால் சுவாசிக்க "ஆக்சிஜன்" மட்டுமே தர முடிகிறது...!!!

������������������

��துரோகத்துக்கும், அவமானத்திற்கும் பிறகும் வாழ்ந்து காட்டுவதே ஆகச்சிறந்த பழிவாங்குதல்...!!!

������������������

��அனைத்து அன்னையும் உயர்ந்தவர்கள் அல்ல... ஏனெனில்... சில குழந்தைகள் குப்பை தொட்டியிலும் கிடைக்கின்றன...!!!

������������������

10950 எண் பற்றி தெரியுமா

ரிடையர்மெண்ட் கான்சப்ட்!
10950 எண் பற்றி தெரியுமா ?

உதாரணம்:
உங்க வயது 45
உங்க ரிடையர்மெண்ட் வயது 65
உங்க 65 வயது முதல் 75 வயது வரை உள்ள வருடங்கள் 10.
10 வருடங்களுக்கு மொத்த நாட்கள் 3650 (10*365=3650).
1 நாளுக்கு 3 வேைள சாப்பிடவேண்டும் என்றால், 3650 நாளுக்கு 10950 வேைள நீங்கள் ஓய்வுகாலத்தில் சாப்பிட வேண்டும் (3650*3=10950).
1 வேைளக்கு தோராயமாக ரூபாய் 25 என்றால் 10950 வேைளக்கு ரூ 273750=
(10950*25=273750).
உங்க வருமானம் குறைய ஆரம்பிக்கும்  உங்கள் ஓய்வு காலத்தில் 10 வருடங்கள் 3 வேைள வீட்டு உணவிற்கு மட்டும் ஆகும் செலவு இது.
உங்கள் துணைக்கும் சேர்த்தால் 2 மடங்கு தேவை.
மற்றும் ரூ 25 என்பது இன்றைய விலை, உங்க 65 வயதில் ????

அதனால் இப்போது முதல் ஒவ்வொரு 3 மாதத்திற்கு ஒரு முறை ரூ2695 என்று LIC-ல் சேர்த்து வையுங்கள் உங்க 65-வது வயதில் ரூ288000 ஓய்வூதியமாக கிடைக்கும்.
மற்றும் ரூ 150000 உங்களுக்கு பின் உங்கள் துணைக்கு கிடைக்கும்.
--------------------------------

குழந்தைகளின் கல்வி:நீங்க சிறு வயதில் என்ன படிக்க ஆசைப்பட்டீங்க ?
ஏன் முடியல?
பணம், வசதி காரணம் எதுவோ இருக்கட்டும்..
இப்ப உங்க குழந்தை என்ன படிக்க ஆசை கனவு வச்சிருக்காங்க ??
உங்க ஆசை மாதிரி உங்க குழந்தைகளின் கல்வி நிராசை ஆகாமல் இருக்க வேண்டுமா??
(நீங்கள் இருந்தாலும் ,இல்லாவிட்டாலும்).

அதனால், இப்ப முதல் உங்க குழந்தைகளின் ஸ்கூல் ஃபீஸ் கட்டுவது மாதிரி ஒரு  பாலிசி எடுத்து சேர்த்து வந்தால் உங்கள் அன்பு குழந்தைகளின் கல்வி கனவு நனவாக உதவும்!!!
........................................

LIC GOLDEN JUBILEE SCHOLARSHIP SCHEME

LIC GOLDEN JUBILEE SCHOLARSHIP SCHEME:

LIC Golden Jubilee Foundation is pleased to announce scholarships for the students belonging to weaker families for pursuing higher studies.

Who Can Apply?

Candidates who have passed XII exam or equivalent in the Academic Year 2014--15 with at least 60% marks or equivalent grade &

Annual Income of whose parents/guardian from all sources doesn't exceed Rs. 1,00,000/-

Under this Scheme, 10,000/- per year is payable to the student for completing graduation.

Online Registration started.

To apply Online, please visit

www.licindia.in

Last Date: 15.09.2015.
Please inform the needy families/students.

LIC OF INDIA