Powered By Blogger

Sep 26, 2015

சீரியச மறந்து கொஞ்சம் "சிரிங்க பாஸ்"

சீரியச  மறந்து கொஞ்சம்  "சிரிங்க பாஸ்"
--------------------------

ஒருவர் : சார், எம் பேர் கந்தசாமி, சொந்த ஊரு பழநி.

மற்றவர் : அதுக்கென்ன இப்போ?

ஒருவர் : 1000 ரூபாய் கடன் வேண்டும், ஊர், பேர் தெரியாதவங்களுக்கு கடன் கொடுக்க முடியாதுன்னு சொன்னீங்களே, அதான் அறிமுகம் படுத்திக்கிட்டேன.

மற்றவர் : ��

�� �� �� �� �� �� ��

ஒருவன் : முக்கால் சோம்பேறி முழுச்சோம்பேறியா மாற  பல காலம் ஆகும்.

மற்றவன் : ஏன் ?

ஒருவன் : அப்படி ஒரு சோம்பேறித்தனம்தான் காரணம்.

�� �� �� �� �� �� ��

ஒருவன் : நான் பரீட்சையில பெயிலாயிட்டா எங்க அப்பா பினனாடி போய் நின்னுடுவேன்.

மற்றவன் : ஏன், அவ்வளவு பயமா ?

ஒருவன் : இல்லடா, பெயிலாயிட்டா என் முன்னாடி நிக்காதேன்னு எங்க அப்பா சொல்லியிருக்காரு.

மற்றவன் : ��

������������������

ஒருவர் : பொண்ணு குயில் போல பாடுவான்னு சொன்னது தப்பா போச்சு.

மற்றவர் : ஏன் ? என்ன ஆச்ச?

ஒருவர் : பாதி பாட்டுல பறந்து போய்டமான்னு கேக்குறாங்க.

�� �� �� �� �� �� ��

தொண்டன் 1 : தலைவர் மதுவை ஊக்கத்திற்காக குடிப்பதாக சொல்லி அதை கைவிட மாட்டேங்கிறார்.

தொண்டன் 2 : ஊக்கம் "மது கைவிடேல்" என்று தவறாக புரிந்து கொண்டார் போலிருக்கு.

�� �� �� �� �� �� ��

ஒருவர் : ஃபிளைட் லேண்ட் ஆக லேட் ஆகுதே ஏன் ?

மற்றவர் : ஃபைலட் தனக்கு கடன் கொடுத்தர் கீழே நிற்பதை பார்த்து தொலைச்சுட்டார்

��  ��  ����          ��  ��  ��

No comments:

Post a Comment