Powered By Blogger

Apr 27, 2016

கை தட்டினால் இவ்ளோ பலன்களா?.. கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்!...

கை தட்டி ரசித்து சிரிப்பதன் மூலம் எந்த நோயும் அண்டாமல் நம்மை பாதுகாக்க முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதய நோய் உள்பட எல்லா நோய்களுக்கும் காரணமாக இருப்பது நம் மனம் தான். அதனால் தான் எண்ணம் போல் வாழ்வு அமையும் என்று கூறியுள்ளனர்.
எதற்கும் உணர்ச்சி வசப்படாமல் அனைத்தையும் சாதாரணமாக எடுத்துக்கிற நிலை வந்தால் உடம்பை எந்த நோயும் நெருங்காது என்கின்றனர் மருத்துவர்கள்.
வெற்றி தான் மகிழ்ச்சியின் திறவுகோல் என்பதை விட மகிழ்ச்சியாக இருப்பது தான் வெற்றி என்று எண்ண வேண்டும். இதற்கு நன்றாக மனது விட்டு சிரிப்பதும், கை தட்டி ரசிப்பதும் அவசியம் என்கின்றனர் உளவியல் மருத்துவர்கள்.
கை தட்டுவதே ஒரு சிகிச்சை தான். கை தட்டும் போது அக்குபிரஷர் ட்ரீட்மென்ட் நடக்கிறது. மூளையும் பிற உறுப்புகளும் உற்சாகமா இயங்குகிறது என்கிறனர் மருத்துவர்கள்.
மனிதர்களின் கைகளில் உள்ள நரம்புகள், இதயம், சிறுநீரகம், லிவர், நுரையீரல் போன்றவற்றுடன் தொடர்பு கொண்டுள்ளது. இரண்டு கைகளையும் இணைத்து தட்டுவதன் மூலம் நரம்புகள் தூண்டப்படுகின்றன. இதனால் பல வித நோய்கள் ஏற்படுவது கட்டுப்படுத்தப்படுகிறது.
நம் உடம்பில் உள்ள ரத்த நாளங்கள் வெறும் 2 மில்லிமீட்டர் குறுக்களவு கொண்டவை. டென்ஷன் ஆகும்போது அட்ரினலின், கார்ட்டிசால் ஹார்மோன்கள் அதிகமா சுரந்து அந்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்திடும். இந்த சுரப்பை கட்டுப்படுத்தும் சக்தி இயல்பாவே நம் உடலில் இருக்கிறது.
சீரான உணவு, முறையான உடற்பயிற்சி, கெட்ட பழக்கங்கள் இல்லாத நல்ல வாழ்க்கை முறை தேவை. மனசு மகிழ்ச்சியா இருந்தா, என்டார்பின், மெலட்டோனின், செரட்டோனின் ஹார்மோன்களும், ஹெச்.டி.எல்ங்கிற நல்ல கொழுப்புகளும் உருவாகும்.
99 சதவீதம் அடைப்பு இருந்தாக்கூட தானா கரைஞ்சிடும். இது கற்பனையில்லை. மருத்துவ உண்மை என்று உறுதியாகச் சொல்கின்றனர் மருத்துவர்கள்.
தினசரி காலையில் 20 நிமிடங்களுக்கு கை தட்டுங்கள் உங்களுக்கு எந்த நோய் இருந்தாலும் குணமாகும் என்று உறுதியாகச் சொல்கின்றனர் மருத்துவர்கள்.

Apr 19, 2016

பாறங்கல்லும் ஓர் அற்புத சிற்பியும்!

ஓர் அற்புதமான சிற்பி, ஒருநாள் தெருவில் போய் கொண்டிருந்தவர் ஒரு கடையருகே கனத்த பாறாங்கல் ஒன்றைப் பார்த்தார். ஏதோ பெரிய புதையலைப் பார்த்த மகிழ்ச்சி, அதன் பின் அந்தக் கடைக்காரரிடம், ஐயா இந்தப் பாறாங்கல் தங்களுக்குத் தேவையா அல்லது இதை நான் எடுத்துச் செல்லலாமா? என்று கேட்டார். தாராளமாய் எடுத்துச் செல்லுங்கள். இது இந்த இடத்தில் பெரிய இடையூறாய்க் கிடக்கிறது. போவோர் வருவோரெல்லாம் இடறி விழுகின்றனர்! என்றார் கடைக்காரர். பாறாங்கல்லை உருட்டிச் சென்ற அந்த சிற்பி, அதை நுட்பமாகச் செதுக்கி அற்புதமான கடவுள் சிலை ஒன்றை உருவாக்கினார். அந்தச் சிலை கடைத்தெருவில் விலைக்கு வந்தது. போட்டி போட்டுக் கொண்டு மக்கள் அதை விலைக்குக் கேட்டார். அப்படிக் கேட்டவர்களுள் கல்லைக் கொடுத்த கடைக்காரரும் ஒருவர். முடிவில் அந்தக் கடைக்காரரே அதிக விலை கொடுத்து அந்தச் சிலையைப் பெற்றுக் கொண்டார். அந்த சிற்பியை மறந்துவிட்ட அந்தக் கடைக்காரர், இந்த அற்புதமான சிலைக்குரிய கல்லை எந்த மலையிலிருந்து எடுத்து வந்தீர்கள்?... என்று கேட்டார். அதற்கு சிற்பி, வேறு எங்கிருந்தும் இல்லை. தங்கள் கடை வாசலில் தான் இதைக் கண்டெடுத்தேன். என்னை நினைவில்லையா தங்களுக்கு? ஆறு மாதங்களுக்கு முன் இடையூறாய்க் கிடக்கிறது என்று சொல்லி என்னிடம் நீங்கள் கொடுத்த கல் தான் இது என்றார். கடைக்காரர் வியந்தார். ஆம். தங்கள் பார்வையில் இது தடைக் கல்லாய்த் தெரிந்தது. என் பார்வையில் கடவுளை பொதிந்து வைத்திருக்கும் சிற்பக் கல்லாய்த் தெரிந்தது. வேண்டாத பகுதியையெல்லாம் செதுக்கி எடுத்தேன். உள்ளே இருந்த கடவுளின் உருவம் வெளிப்பட்டது! என்றார். தேவையற்ற வார்த்தைகளை வாழ்வில் நீக்கினால் நாமும் விலைமதிப்பற்ற மனிதனாய், ஒவொருவரும் நம்மை போற்றும் வகையில் வாழ்ந்து காண்பிக்கலாம்.....

Apr 5, 2016

பெண் + Sun = Pension

யாருக்காக LIC

Income Replacement plan

heart touching poem

Johny johny..
                Yes papa!
Private job.
                Yes papa!
Lot of tension..
                Yes papa!
Too much work..
                Yes papa!
Family life..
                 No papa!
Bp-sugar..
                High papa!
Yearly bonus..
              Joke papa!
Monthly pay..
               Low papa!
Personal life..
               Lost papa!

Weekly off!
      Ha Ha Ha������

Its really heart touching poem

விடுமுறையில் நீங்கள் உங்கள் குழந்தைகளுக்காக செய்யவேண்டியது

பெற்றோர்கள் கவனத்திற்கு-:

விடுமுறையில் நீங்கள் உங்கள் குழந்தைகளுக்காக செய்யவேண்டியது இதுதான்,

1) உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு வங்கிக்கு உங்கள் குழந்தைகளை அழைத்தச்செல்லுங்கள், வங்கியில் உள்ள அனைத்து செல்லான்களையும் நிரப்புவது எப்படி என்பதை கற்றுக்கொடுங்கள், A.T.M ல் எவ்வாறு பணமெடுப்பது என்பதையும், சேமிப்பின் அவசியத்தையும் அக்கறையுடன் சொல்லிக்கொடுங்கள்.

2) அதுபோல அருகில் உள்ள அனாதை ஆசிரமங்களுக்கும், முதியோர் இல்லத்திற்கும், மனநல காப்பகத்திற்கும் அழைத்து சென்று, அவர்கள் ஏன் இவ்வாறு ஆளாக்கப்பட்டார்கள்? என்பதை அருகிலிருந்து எடுத்துக்கூறுங்கள், அவர்கள் படும் துன்பங்களையும், ஏக்கங்களையும் அவர்களாகவே புரிந்து கொள்ள வழிவகை செய்து கொடுங்கள்.

3) அருகில் இருக்கும் குளங்கள், ஆறுகள், கடல்கள் ஆகிய இடங்களுக்கு கூட்டிச் சென்று நீச்சலடிக்க அதுவும் நீங்களே கற்றுக் கொடுங்கள்.

4) அவர்களுக்கு இரண்டு மரக்கன்றுகளை பரிசாக அளித்து, அதை அவர்களை வைத்தே தண்ணீர் ஊற்றி வளர்க்க சொல்லுங்கள், மரம் வளர வளர சிறு சிறு பரிசு கொடுத்து அசத்துங்கள்.

5) இந்த இரண்டு மாதங்களில் ஒருமுறையேனும் நீங்கள் இரத்ததானம் செய்யுங்கள், அதுவும் உங்கள் குழந்தைகள் முன் செய்யுங்கள், இரத்ததானத்தின் அவசியத்தை அவர்கள் கண்டிப்பாக உணர்வார்கள்.(என் பெற்றோகள் எப்போதும் எனக்கு ஹீரோ தான் என்று அவர்கள் கண்டிப்பாக பெருமை கொள்வார்கள்)

6) மிக முக்கியமாக அரசாங்க மருத்துவமனைக்கு அழைத்து சென்று, அங்கு நோயாளிகள் படும் கஷ்டத்தை அவர்கள் கண்முன் கொண்டுவாருங்கள், விபத்தினால் அடிபட்ட சிகிச்சை பெற்றுவருபவரை காணச்செய்தாலே போதும் அவர்கள் எவ்வாறு வாகனத்தை ஓட்ட வேண்டுமென்று முடிவெடுத்துகொள்வார்கள்.

7) ஒவ்வொருவருக்கும் சொந்த கிராமம் உண்டு, அங்கு உங்கள் குழந்தைகளை அழைத்து சென்று நம் தாத்தா பாட்டி மற்றும் நம் சொந்தங்களை அறிமுகப்படுத்தி அன்பு செலுத்த வழிவகை செய்யுங்கள், நம் முன்னோர்களின் "விவசாய" முறைகளையும், வாழ்க்கையையும், அவர்களின் பெருமைகளையும், அதற்காக பட்ட கஷ்டங்களையும் கூறுங்கள்.

8) அதுபோல அருகில் உள்ள நீதிமன்றம், காவல் நிலையம், அரசு அலுவலகங்கள் போன்ற இடங்களுக்கு கூட்டிச் சென்று, எவ்வாறு அரசாங்கமும் அது செயல்படும் விதங்களையும் எடுத்துக் கூறுங்கள், அவர்கள் எந்த துறைக்கு வேலைக்கு எதிர்காலத்தில் செல்லலாம் என்பதற்கு சின்ன பொறி தட்டி விடுங்கள், அதன் பின் அவர்களாகளே எந்த துறையில் காலூன்ற வேண்டுமென்று தீர்மானித்து அதற்காக செயல்பட ஆரம்பித்துவிடுவார்கள்.

9) உங்கள் குழந்தைகளை அருகில் அழைத்து அவர்களின் சின்ன சின்ன ஆசைகளை கேட்டறிந்து அதற்காகவே நாங்கள் இருக்கிறோம் என்பதை மனதில் ஆழமாக பதிய வையுங்கள், அவர்களுக்காக சிறு விளையாட்டு பொருட்களை நீங்களே செய்து, அதை அவர்களுக்கு கற்றுக்கொடுத்து, அவர்களையும் செய்யச்சொல்லி அவர்களின் நண்பர்களுக்கு பரிசளிக்கச் சொல்லுங்கள்.

10) அனைத்து மத கோவில்களுக்கும் அழைத்து சென்று, எல்லோருடைய வழிபாட்டு முறைகளையும் காணச் செய்யுங்கள், அனைத்து மதமும் "அன்பை" மட்டுமே போதிக்கிறது என்ற உண்மையை அவர்களை உணரச் செய்யுங்கள். அன்பால் அனைத்தையும் பெறமுடியும் என்பதை உணர்த்துங்கள்.
இந்தப்பதிவில் உள்ள சிலவற்றை நீங்கள் செய்ய முயற்சித்தாலே உங்கள் குழந்தையின் மீதுள்ள அக்கறையை உங்கள் குழந்தைகளே உணர்ந்துகொள்வார்கள்..

மனிதனை நேசிப்போம்

ஒரு அப்பாவும், 4 வயது மகனும் அவர்களுடைய புதிய காரை துடைத்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது அந்த சிறுவன் ஒரு சிறிய கல்லை எடுத்து காரின் கதவு பக்கத்தில் சுரண்டி கொண்டிருந்தான். சத்தத்தை கேட்ட அப்பாவுக்கு கோபம் தலைகேறியது..கடுப்பில் மகனுடைய கையை பிடித்து, நான்கு முறை உள்ளங்கையில் விளாசிவிட்டார். அப்பொழுதுதான் கவனித்தார் அவர் அடித்தது ஸ்பேனரை (Spanner) கொண்டு என்பதை.
வலியில் துடித்த மகனை மருத்துவ மனைக்கு தூக்கி கொண்டு ஓடினார். "பல எலும்புகள் முறிந்துவிட்டதால், இனி விரல்களை குணமாக்க முடியாது" என்று மருத்துவர்கள் கைவிரித்தனர்.
மகன் வலி நிறைந்த கண்களுடன் அப்பாவை பார்த்து “அப்பா.. என்னோட விரல்ளுங்க திரும்ப வளர்ந்துடும் இல்லப்பா?” என்று கேட்டவுடன், கண்ணீருடன் மவுனமாக வெளியே வந்தார்.
வெளியில் நின்றிருந்த தன் காரை பல தடவைகள் எட்டி, எட்டி உதைத்தார். கண்ணீருடன் தலையில் கையை வைத்துக் கொண்டு காரின் முன்பு உக்கார்ந்துவிட்டார்
அப்பொழுதுதான் தன் மகன் கீரிய அந்த கீரல்களை கவனித்தார் என்ன எழுதியிருகிறது என்று.. அந்த வாசகம்
” ஐ லவ் யூ அப்பா”.
மனிதர்களை பயன்படுத்துகிறோம்! பொருட்களை நேசிக்கிறோம்!!
எப்பொழுதுதான் மனிதனை நேசித்து, பொருட்களை பயன்படுத்த போகின்றோம்?

ஆயுள் காப்பீட்டின் அவசியம்

எமனே எமனே

எல் ஐ சி

LIC Children's plans