Powered By Blogger

Apr 4, 2016

அதிகாலையில் எழுவதால் ஏற்படும் நன்மைகள்

 அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுவதால் பல நன்மைகளைத் தரும் என்று சாஸ்திரங்களும், விஞ்ஞானமும் கூறுகின்றன. பிரம்ம முகூர்த்தம் என்பது காலை 3 மணி முதல் 5 மணிவரை. வைகறைப் பொழுதில் சூரியனிடம் இருந்து பூமியை வந்தடையும் ஒளிக் கதிர்கள் சக்தி வாய்ந்தவை. எனவேதான் சூரிய நமஸ்காரம் செய்வது மிகச் சிறந்த வழிபாடு என்று நம் முன்னோர்கள் கூறினார்கள். இவை நம் உடலில் படும்போது நரம்புகளுக்கு புதுத்தெம்பையும், உற்சாகத்தையும் கொடுக்கின்றன. மேலும், தேவர்களும், பித்ருக்களும் ஒன்றுகூடும் நேரம் இது. எனவே காலையில் அவர்களை நினைத்தால் செய்யும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிட்டும் என்பது நம்பிக்கை.

அதிகாலையில் எழுவதால் ஏற்படும் நன்மைகள் : நீங்கள் அதிகாலை எழுவதனால், நாளும், உடலும் மிகவும் புத்துணர்ச்சியாக தொடங்கும்.
அதிகாலையே எழுந்து உங்கள் நாளை துவக்குவதனால், அவசரம் இன்றி வேலைகளை பார்க்க முடியும். அதனால், உங்களுக்கு மன அழுத்தம் குறையும்.
பெரும்பாலும் காலை எழும்போது உங்கள் மூளையும், உடலும் அமைதியான சூழலில் இருந்தால், செயல்திறன் அதிகரிக்கும். எனவே, அதிகாலை எழும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வது உங்கள் உடலுக்கும், மனதிற்கும் நன்மை விளைவிக்கும்.
அதிகாலை எழுந்து படிப்பதனால் உங்கள் நினைவாற்றல் அதிகரிக்கிறது. மாணவர்கள் மட்டுமல்ல வேலைக்கு செல்வோர்கள் கூட உங்கள் வேலையை அதிகாலை தொடங்கினால், உங்கள் வேலையில் நல்ல பலனை பெற முடியும்.
அதிகாலை எழும் பழக்கம் உங்களுக்கு இரவில் நல்ல உறக்கைத்தை தரவல்லது. எனவே, முடிந்த வரை அதிகாலையில் எழுந்து இரவு பத்து மணிக்குள் உறங்கும்படி உங்கள் நாளை வகுத்துக் கொள்ளுங்கள். எழுந்தவுடன் உள்ளங்கையில் விழிப்பது ஏன்?

காலையில் கண்விழித்தவுடன்

No comments:

Post a Comment