Powered By Blogger

Jan 27, 2011

ஆளுக்கொரு அளவுகோல்

ஆளுக்கொரு அளவுகோல்

உலகத்தில் பெரும்பாலானோர் தங்களை மிக நியாயமானவர்களாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய பெரிய வருத்தமே அடுத்தவர்கள் அவர்களிடம் நியாயமாக நடந்து கொள்வதில்லை என்பது தான.

அவர்கள் நியாயமாக நடந்து கொள்ளாதவர்கள் என்று யாரை நினைக்கிறார்களோ அவர்களும் தங்களை மிக நியாயமானவர்களாகவே
நினைத்து மற்றவர்கள் தங்களிடம் அப்படி இல்லை என்று வருந்துவது தான் ஆச்சரியம்
.
“நல்லதிற்குக் காலம் இல்லை”, “எல்லோரும் நம்மைப் போலவே நல்லவர்களாகவே இருப்பார்கள் என்று நினைப்பது நம் தவறு தான்” என்ற வசனங்கள் பலர் வாயிலிருந்தும் வருகின்றன. அவை வெறும் வாய் வார்த்தைகள் அல்ல. மனப்பூர்வமாக அப்படி பெரும்பாலானோர் நினைக்கிறார்கள்.

இது எப்படி சாத்தியம்? இது முரண்பாடல்லவா? இதில் யார் சரி, யார் தவறு? என்பது போன்ற கேள்விகள் சமூக அக்கறை உள்ளவர்கள் மனதில் எழாமல் இருக்க முடியாது. பிரச்னை எங்கே இருக்கிறது என்று ஆராய்ந்தால் ஒவ்வொருவரும் வைத்திருக்கும் மாறுபட்ட அளவுகோலில் தான் என்பது புரியும்.

குடும்பத்தில் மகள் சொற்படி மருமகன் கேட்பாரானால் மாப்பிள்ளை சொக்கத் தங்கம். மகன் மருமகள் சொற்படி நடந்தால் அவன் பெண்டாட்டி தாசன்.
நம் மொழி, இனம், மதம், நாடு ஆகியவற்றின் மீது நமக்கு இருக்கும் அபரிமிதமான பற்றிற்குப் பெயர் பக்தி. அதுவே மற்றவர் அவர் மொழி, இனம், மதம், நாடு ஆகியவற்றில் வைக்கும் அபரிமிதமான பற்றிற்கு நாம் வைக்கும் பெயர் வெறி.

நம் வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரி வேலையில் சிறிது அலட்சியம் செய்தாலும், ஓய்வு எடுத்துக் கொண்டாலும், விடுப்பு எடுத்துக் கொண்டாலும் குமுறுகிறோம். நாம் அலுவலகத்தில் வேலை செய்யும் போது நம் அளவுகோல் முழுவதுமாக மாறிவிடுகிறது. அதையே நாம் நம் அலுவலகத்தில் செய்யும் போது சிறிதும் உறுத்தல் இல்லாமல் இருக்கிறோம்.

நம்முடைய வெற்றிகள், நல்ல குணங்கள், புத்திசாலித்தனம் எல்லாவற்றையும் அடுத்தவர்களுக்கு பறைசாற்றத் துடிக்கிறோம். அடுத்தவர்கள் புரிந்து கொண்டு பாராட்ட வேண்டுமென்று எதிர்பார்க்கிறோம். ஆனால் அடுத்தவர்கள் நம்மிடம் அதையே செய்தால் அது தற்புகழ்ச்சியாகத் தெரிகிறது. மற்றவர்கள் நம் அருமை பெருமைகளை அறிய மறுத்தால் அது சின்ன புத்தியாகவோ, பொறாமையாகவோ தெரிகிறது. ஆனால் அடுத்தவர்களுடைய அருமை பெருமைகளை அறிய நமக்கு சுத்தமாக ஆர்வமிருப்பதில்லை.

நம் வெற்றிகளுக்குக் காரணம் நம் புத்திசாலித்தனமும், உழைப்பும் தான். மற்றவர்களுடைய வெற்றிகளுக்குக் காரணமாக நாம் காண்பது அவர்களது அதிர்ஷ்டத்தையும், அவர்களுக்குக் கிடைத்த ஆதரவையும் தான். அதுவே தோல்வியானால் அந்த அளவுகோல்கள் உடனடியாக பரிமாற்றம் செய்யப்படுகின்றன.
 நம் தோல்விக்குக் காரணம் துரதிர்ஷ்டமும் சூழ்நிலையும். மற்றவர் தோல்விக்குக் காரணம் முட்டாள்தனமும், முயற்சிகளில் உள்ள குறைபாடுகளும் என்று எடுத்துக் கொள்ளப்படுகிறது.

நம் வீட்டு ரகசியங்களை மூடி வைக்க நாம் படாத பாடு படுகிறோம். மற்றவர்கள் அறிந்து விடக்கூடாதென்று மிகவும் கவனமாக இருக்கிறோம். ஆனால் அடுத்த வீட்டு ரகசியங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வர நாம் நாம் தயங்குவதேயில்லை.
 அடுத்தவர்கள் அதை மறைக்கச் செய்யும் முயற்சிகளைப் பெரிய குற்றமாக நாம் விமரிசிப்பதும் உண்டு.
மற்றவர்கள் உதவ முடிந்த நிலையில் இருந்தாலும் நமக்கு உதவுவதில்லை என்று மனம் குமுறும் நாம் அடுத்தவர்களுக்கு உதவ முடியும் நிலையில் இருக்கும் போது கண்டும் காணாமல் போய் விடுகிறோம்.
அந்த நேரத்தில் நாம் அதைப் பற்றி சிந்திப்பதேயில்லை.
தங்கள் பெற்றோரை அலட்சியம் செய்தும், புறக்கணித்தும் சிறிதும் மன உறுத்தல் இல்லாமல் இருக்கும் மனிதர்கள் தங்கள் குழந்தைகள் அதையே தங்களுக்குச் செய்தால் தாங்க முடியாத துக்கத்தில் ஆழ்ந்து விடுகிறதை நாம் பல இடங்களில் காண்கிறோம்.
 எனக்குத் தெரிந்த மூதாட்டி ஒருவர் தன் மூத்த மகனால் பல விதங்களில் புறக்கணிக்கப்பட்டவர். சிறு உதவிகள் கூட அவனிடம் இருந்து அவருக்கு கிடைத்ததில்லை.
ஒரு முறை அவர் அவன் வீட்டுக்குச் சென்றிருந்த போது டிவியில் மன்னன் திரைப்படத்தின் பாடல் “அம்மா என்றழைக்காத உயிரில்லையே….” என்ற பாடல் ஒளிபரப்பாகியதாம். அதைப் பார்த்து அவர் மகன் தன் மகனிடம் சொன்னானாம். “பாருடா தாய்ப் பாசம் என்பது இது தான். நீயும் உன் அம்மாவிடம் இந்த பாசத்தை வயதான காலத்தில் காட்ட வேண்டும்”
அந்த மூதாட்டி என்னிடம் பின்னொரு நாள் அதைச் சொல்லி விட்டு வேடிக்கையாகச் சொன்னார். “எனக்கு ஆச்சரியம் என்னவென்றால் அவனுக்கு என்னை அருகில் உட்கார வைத்துக் கொண்டே அதைச் சொல்லும் போது சிறிது கூட உறுத்தலோ, வெட்கமோ இல்லாமல் இருந்தது தான்.”
அவர் சொன்னது வியக்கத்தக்க சம்பவம் இல்லை. இது போன்ற நிகழ்வுகள் தான் இன்றைய யதார்த்தம். நமக்குத் தகுந்தாற்போல் எல்லாவற்றையும் அளப்பதும் எடைபோடுவதும் நம்மிடம் ஆழமாக வேரூன்றி இருக்கிறது.
உலகில் உள்ள பல பிரச்னைகளுக்குக் காரணம் இந்த அளவுகோல் வித்தியாசங்களே.
 சுயநலம் மிக்க உலகாய் நாம் இந்த உலகத்தைக் காண்கிறோம். ஆனால் சின்னச் சின்ன விஷயங்களில் கூட நாமும் அதே போல் இருக்க முற்படுகிறோம் என்பதை உணரத் தவறுகிறோம். அதனால் தான் தவறுகள் செய்தாலும் அந்த உணர்வே இல்லாமல், அந்த உண்மையே நமக்கு உறைக்காமல் இருக்கக் காரணம் இந்த இரண்டு விதமான அளப்பீடுகளை நாம் நமக்குள் வைத்திருப்பது தான்.

உலகம் பெரும்பாலான சமயங்களில் நமது பிரதிபிம்பமாகவே இருக்கிறது. குற்றம் சாட்டி சுட்டிக் காட்டும் சமயங்களில் மற்ற மூன்று விரல்கள் நம்மையே காட்டிக் கொண்டிருக்கின்றன என்பதை நாம் உணர வேண்டும்.

 ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒருவரைப் பற்றி குறை கூறும் முன் அவர் இடத்தில் நாம் இருந்திருந்தால் என்ன செய்திருப்போம் என்று நேர்மையாக யோசிக்க முடிந்தால், ஆளுக்கொரு அளவுகோல் வைத்து அளக்காமல் நாம் நமக்கும் அடுத்தவருக்கும் ஒரே அளவுகோல் வைத்திருந்தால் மட்டுமே நாம் நியாயமாய் நடந்து கொள்பவர்களாவோம்.
அப்போது மட்டுமே சகோதரத்துவம் உண்மையாக நம்மிடையே மலரும். விமரிசனங்கள் குறைந்து ஒருவரை ஒருவர் புரிந்து கொள்தல் வளரும்.

Jan 19, 2011

Ksb share holding details

Ksb share holding details
1.Relaince Capital Trustee Company Limited-1458815-8.38%

2.Thyssenkurpp Industries India Private Ltdk.540000.k3.10%

3.Uti Under Various Accounts 359955 2.07%

4.M3 Investment Pvt Ltd=313718.1.80
Total=2672488~15.36%

Jan 15, 2011

Jan 7, 2011

ஷேர் மார்க்கெட்- புதிய விளக்கம்

http://dilleepworld.blogspot.com/2010/06/blog-post_8220.html
1. என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை என்னிடம் இருக்கிறது.
2. எத்தனையோ இடர்ப்பாடுகளை மீறி, நான் இது வரை சாதித்தவைகளை ஒவ்வொன்றாக நினைவு படுத்திப் பார்க்கிறேன்.
3. என்னை விட வயதிலோ, தகுதியியோ, பணபலத்திலோ குறைந்தவர்கள் செய்த சாதனைகளை எண்ணிப் பார்க்கிறேன்.
4. நான் மிக மிகக் கடுமையாக வெறுக்கும் என் எதிரி ஒருவன், இதே காரியத்தை வெகு சுலபமாக செய்து முடித்துவிட்டான் என்று நினைத்துப் பார்க்கிறேன்.
5. நான் இதை வெற்றிகரமாக முடித்து விட்டால், எனக்குக் கிடைக்கும் புகழ், பாராட்டு, லாபம், அங்கீகாரம், புதிய வாய்ப்புகள் ஆகியவற்றை கற்பனை செய்து பார்க்கிறேன்.
6. நான் இதைச் செய்ய முடியாமல் போனால், எனக்குக் கிடைக்கும், இகழ்ச்சி, நஷ்டம், ஏமாற்றம், நழுவும் வாய்ப்புகள் ஆகிய வற்றை கற்பனை செய்து பார்க்கிறேன்.
7. நான் இதை சாதித்துவிட்டால், என் தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அடையப் போகும் மகிழ்ச்சி, பெருமை ஆகியவற்றை நினைத்துப் பார்க்கிறேன்.
8. ஏற்கனவே பலர் இதை வெற்றிகரமாக செய்துவிட்டார்கள்; பலர் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன்.
9. இதைச் சாதிப்பதற்கான எல்லாத் தகுதிகளும், திறமைகளும் என்னிடம் இருக்கின்றன என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன்.
10. இதைத்தவிர, மற்ற எந்த வேலைகளும் இப்போது எனக்கு முக்கியமில்லை என்று முடிவெடுத்து விட்டேன்.
11. எனது எல்லாச் சக்திகளையும் முழுவதுமாக இதில் ஈடுபடுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
12. இடையில், வேறெந்த விஷயத்திலும், கவனத்தையும், நேரத்தையும் சிதறவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறேன்.
13. எனது ஊக்கத்தைக் குலைக்கும் விமர்சனங்களை லட்சியம் செய்ய மாட்டேன்.
14. இடையில் எதிர்ப்படும் இடையூறுகளைக் கண்டு தளர்ந்து விடாத மன உறுதி என்னிடம் இருக்கிறது.
1 5. இதைவிடப் பெரிய விஷயங்களை எல்லாம் சாதிக்கப் பிறந்தவன் நான் என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை.
16. முடித்துக் காட்டுகிறேன் பார் என்று இதை ஒரு சவாலாக எடுத்துக்கொள்கிறேன்

Total loss of Pvt.Cos

Total loss of Pvt.Cos

Total loss of Pvt.Cos
31/03/2009=Rs.17,304 crs
31/03/2010=Rs.20,143 crs

LIC TOTAL INCOME
31/03/2010=2,98,721 crs.

LIC's New Business details

LIC's New Business details

LIC's New Business details
up to 15/ 12/2010
2,04,82,745 policies
29,823 crs premium

LIC's New Business details

LIC's New Business details

LIC's New Business details
up to 15/ 12/2010
2,04,82,745 policies
29,823 crs premium

Jan 6, 2011

Loan under Jeevan Anand Plan 149-

On and after premium paying term

It has been clarified that on and after premium paying term under the above

plan,

loan up to 85% of the surrender value can be granted.

For calculation of guaranteed surrender value, kindly refer to circular

dated 2/4/2005 ref: co/act/2009.

Please note that if the loan interest is not paid for two half-yearly installments

excluding broken period,

then policy will be foreclosed and cannot be reinstated

on and after premium paying term is over.

This article has been prepared by Datacomp Training Academy for private circulation and quick reference.

For complete details please refer to circular CO/CRM/751/23 dated 10th June 2009 issued by the LIC of

India.

Posted by selvanlic at 5:58 AM

Jan 3, 2011

ஸ்வரூப் கமிட்டி-ஓர் அலசல்

31000 புள்ளிகளை நோக்கி சென்செக்ஸ் !!!!!

தலைப்பை பார்த்தவுடனே அடேங்கப்பா !!!!!


என்று பெருமூச்சு விடுகிறீர்களா ?.

ஆம், சென்செக்ஸ் 31000 புள்ளிகளை தொட வாய்ப்புள்ளது என்கிறார்கள்

சில பங்குசந்தை ஜாம்பவான்கள்.

31000 புள்ளிகளை சென்செக்ஸ் தொடும் என்றால் நாம் சும்மா காதுல பூ சுத்தாதீங்க என்றுதான் நி்னைப்போம். நீங்கள் நினைப்பது தவறு, சென்செக்ஸ் 31000 புள்ளிகள் தொடுவதற்கான காரணங்கள் இதோ என்று நிபுணர்கள் எடுத்து வைத்து வாதம் வருமாறு.......



இந்திய பங்குச்சந்தை வலுவான நிலையில் இருக்கிறது.

சென்செக்ஸ் நிறுவனங்களின் வருமான வளர்ச்சி இந்த நிதியாண்டில் குறைந்தபட்சம் 23% சதவிகிதமான இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே வளர்ச்சி அடுத்த நிதியாண்டில் 20% ஆக இருக்கும். நாட்டின் ஜி.டி.பி (GDP) வளர்ச்சி இந்த நிதியாண்டில் 9% ஆகவும் , அடுத்த நிதியாண்டில் 8.6% ஆகவும் இருக்கும் என மதிப்பிட்ப்பட்டுள்ளது.

மேலும் இந்தியாவின் நிதி பற்றாக்குறை 3-G ஏலத்தின் மூலம் அரசு எளிதில் சமாளித்து வருகிறது. இது போன்ற காரணங்களால் பங்குசந்தை 2011 மார்ச் மாதத்துக்குள் புதிய உச்சமான 22000 புள்ளிகளை தொடும்.



இன்னும் சில நிபுணர்கள்.....சென்செக்ஸ் 2012 மார்ச் மாதத்தில் 31000 புள்ளிகளை தாண்டும் என்று கணக்கிட்டுள்ளனர். இதற்கான காரணங்களையும் அவர்கள் கூறாமலில்லை....



* இந்த வருடத்தில் சிறப்பான பருவமழை இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

* பணவீக்க விகிதம் கட்டுக்குள் இருப்பது.

* அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பொருளாதார வளர்ச்சி காரணமாக...

* கடனுக்கான வட்டி விகிதம் குறைதல்.

* எஃப்.ஐ.ஐ முதலீடு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

* ரூபாயின் மதிப்பு கூடும் என்ற எதிர்பார்ப்பு

* 25% மேல் இருக்கும் நிறுவனங்களின் வளர்ச்சி விகிதம்.



இது போன்ற காரங்களால் சென்செக்ஸ் 31000 புள்ளிகள் என்ற மைல்கல்லை தொடும் என்பதே பங்குசந்தை பழம் தின்று கொட்டை போட்ட சில நிபுணர்களின் கணிப்பு. இது எவ்வாறு சாத்தியமாகும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்