Powered By Blogger

Nov 21, 2015

More Knowledge + More Confuse=No work [No Result]

யோசிக்க மட்டுமே !

More Knowledge + More Confuse=No work [No Result]

Example:
ஒரு மாணவன் தனது தேர்வு ஒன்றில்..
முட்டை மதிப்பெண் கிடைத்ததால்
பெரும் அதிர்ச்சி ஆனான்..! காரணம்
அவன் அனைத்து கேள்விகளுக்கும்..
சரியாக பதிலளித்திருப்ப
தாகவே நம்பினான்..!

சரியான பதிலை எழுதியதாகவே.. அந்த மாணவன்
தொடர்ந்து பள்ளி நிர்வாகத்திடம்..
வாதாடினான்..!
சரி.. அப்படி என்ன தான்
கேள்விகளுக்கு பதில் அளித்தான்.. என பார்ப்போம்..!

��கேள்வி;- எந்த போரில் திப்பு சுல்தான்
உயிரிழந்தார்..?
பதில்;- அவரது கடைசி போரில்..!

��கேள்வி;- இந்திய சுதந்திரத்திற்கான..
பிரமாணம் எங்கே கையெழுத்திடப்பட
்டது..?
பதில்;- காகிதத்தின் அடிப் பகுதியில்..!

��கேள்வி;- சுப நிகழ்ச்சிகளில்..
வாழை மரங்கள் எதற்காக
கட்டப்படுகிறது..?
பதில்;- அவைகள் கீழே விழாமல்
இருப்பதற்காக.. கட்டப்படுகிறது..!

��கேள்வி;- விவாகரத்திற்கான.. முக்கிய
காரணம் என்ன..?
பதில்;- திருமணம் தான்..!

��கேள்வி;- இரவு- பகல்..
எவ்வாறு ஏற்படுகிறது..?
பதில்;- கிழக்கே உதித்த சூரியன்..
மேற்கில் மறைவதாலும்.. மேற்கில்
மறைந்த சூரியன் மீண்டும் கிழக்கில்..
உதிப்பதாலும் இரவு- பகல்
ஏற்படுகிறது..!

��கேள்வி;- மகாத்மா காந்தி..
எப்போது பிறந்தார்..?
பதில்;- அவரது பிறந்த நாளன்று..!

��கேள்வி;- திருமணங்கள் சொர்க்கத்தில்
நிச்சயிக்கப்படுகிறதா..?
பதில்;- இல்லை.. திருமணங்கள்
செய்யும் அவரவர் வீட்டில்..!

��கேள்வி;- தாஜ்மகால் யாருக்காக.. யார்
கட்டினார்..?
பதில்;- சுற்றுலா பயணிகளுக்காக..
கொத்தனார்களால் கட்டப்பட்டது..!

��கேள்வி;- 8மாம்பழங்களை.. 6
பேருக்கு எப்படி சரியாக
பிரித்து கொடுப்பது..?
பதில்;- ஜூஸ் போட்டு.. 6 டம்ளர்களில்
சரியான அளவாக ஊற்றி கொடுக்கலாம்..!

பயபுள்ள சரியாக
தானே சொல்லிருக்கான்..???

More Knowledge+
One Plan [ திட்டம் ]
More Action
= You Can Win
ALL THE BEST

D.SELVAN
Chief Advisor-LIC

யார் தேவதை?

பிரசவிக்கப் போகும் ஒரு பெண்ணின் பிரசவத்திற்கான ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருந்தன.

உறவினர்கள் எல்லாம் காத்திருக்க அந்த தாய் வலியில் கதறிக் கொண்டிருந்தாள்.

வயிற்றிலிருக்கும் குழந்தைக்கு வழக்கத்திற்கு மாறன சத்தம் ஏதேதோ கேட்டது நமக்கு என்ன நடக்கப் போகிறதோ என்ற குழப்பம் குழந்தையின் மனதில் ஊசாடியது,

அமைதியாக ஆனந்தமாக மிதந்துக் கொண்டிருந்த நமக்கு என்ன ஆகப்போகிறது,

வழக்கமாக நாம் பேசும் கடவுளையே கேட்டு விடலாம் என்று குழந்தை கடவுளை அழைத்தது.

குழந்தை :
இறைவனே என்னை எங்கு அனுப்பப் போகிறாய் வழக்கத்துக் மாறான ஏதேதோ சத்தம் கேட்கிறதே எனக்கு ஒன்றும் புரியவில்லையே.

கடவுள் :
குழந்தாய் இனி நீ மனிதர்களுடன் வசிக்கப் போகிறாய்

குழந்தை :
நான் இங்கு சந்தோசமாகத் தானே இருக்கிறேன் நான் ஏன் அங்கு போக வேண்டும்

கடவுள் :
இல்லை குழந்தாய் நீ இங்கிருப்பது போலவே அங்கும் இருப்பாய் சென்று வா

குழந்தை :
என்னை நீ இங்கு பாத்துக் கொள்வது போல் யார் என்னை அங்கு பார்த்துக் கொள்வார்.

கடவுள் :
கவலைப் படாதே குழந்தாய் அங்கு உன்னைப் பார்த்துக் கொள்ள ஒரு தேவதையை ஏற்பாடு செய்திருக்கிறேன், அந்த தேவதை உனக்காக பாடும் உன் மீது அன்பு செழுத்தும் அந்த அன்பை நீ உணர்வாய்.

குழந்தை :
மனிதர்களிடம் என்னை தனியாக அனுப்புகிறாய் நான் மிகச் சிறியவன் என்னால் நடக்க முடியாது என்னால் பேச முடியாது, இன்னும் அவர்கள் மொழியைக் கூட புரிந்துக் கொள்ள முடியாது.

கடவுள் :
அது மிகவும் சுலபம் உனக்காக நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதை எல்லாவற்றையும் கவனித்துக் கொள்ளும் உனக்கு பேசக் கற்றுக் கொடுக்கும், உனக்கு நடக்க கற்றுக் கொடுக்கும் நீ பயப்படத்ப் தேவையில்லை.

குழந்தை :
(அடுத்து என்ன கேட்பது என்று தெரியாமல் கடவுளையே பார்த்தது) ம்ம்ம்;;…. நான் உன்னோடு பேச வேண்டும் என்றால் என்ன செய்வேன்.

கடவுள் :
(மென்மையாக சிரித்து) நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதை இதையும் உனக்கு சொல்லிக் கொடுக்கும்.

குழந்தை :
உலகில் கெட்ட மனிதர்கள் இருப்பார்கள் என்று இங்குள்ள தேவதைகள் பேசிக் கொள்கிறார்களே அவர்களிடமிருந்து என்னை யார் காப்பற்றுவார்.

கடவுள் :
வாஞ்சையுடன் குழந்தையை தடவி) உனக்கு நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதை தன்னுயிர் போனாலும் உன்னை பாதுகாக்கும்.

குழந்தை:
(மிகவும் சோகமான முகத்துடன்) இனி நான் உன்னை பார்க்கவோ பேசவோ முடியாதா.

கடவுள் :
(குழந்தையை அன்பாக அணைத்து) உனக்காக நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதையிடம் நீ போனதுமே என் பெயர் உனக்கு சொல்லும் சதா என்னைப் பற்றி உன்னிடம் பேசும், என்னிடம் திருப்பி வரும் வழியையும் உனக்கு சொல்லித் தரும், நான் உன்னோடு தான் இருப்பேன் ஆனால் நீ என்னைப் பார்க்க மாட்டாய்.
உலகின் சத்தங்கள் அதிகமாக குழந்தைக்கு கேட்க தொடங்கின

குழந்தை :
(மிகவும் கடவுளைப் பிரியும் சோகத்துடன்) இறைவனே இன்னும் கொஞ்ச நேரத்தில் உன்னை விட்டு பிரியப் போகிறேன் நீ எனக்காக ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதையின் பெயரையாவது சொல்

கடவுள் :
குழந்தாய் தைரியமாக சென்று வா உனக்காக நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதையின் பெயர் முக்கியமில்லை அவளை
நீ
அம்மா
என்று
அழைப்பாய்.

கடைசியாக உனக்கு ஒரு அறிவுரை நீ வளர்ந்து பெரியவனானதும் அந்த தேவதையின் மனம் புண்படும் படி எதுவும் பேசி விடாதே.

குழந்தை வீறிட்டு அழுதபடி உலகில் பிறந்தது….

தாய்மையை போற்றுவோம்

Nov 20, 2015

என் மகன் நல்லவன்…!!!

நெஞ்சை தொட்ட கவிதை

முதியோர் இல்லத்து முதியவரின் முற்றிய வலிகள்…!!!

தவமிருந்துதான் பெற்றோம்
உன்னை,
தடுமாறி வாழ்கை நடத்தியபோதும்
தனித்தன்மையாய் வளர்த்தோம்,

உன் எச்சில் பட்ட
என் கண்ணங்கள்
இன்னும் குளிருதாடா..!மகனே…

உன் மழலை புன்னகையை
பிச்சை கேட்டு
பல நாட்கள் உன்னிடம்
மண்டியிட்டிருக்கிறேன் ,
என் செல்ல மகனே…,

உன் பால் வாசத்தில்
என் பாசம் உணர்ந்தேன்,

நீ கடித்து காயபடுத்திய
என் கன்னத்து தழும்பை
இன்னமும் முத்தமிடுகிறாள்
உன் அம்மா…!

என் கிழிந்த வேட்டியை
மறைத்து,மடித்து கட்டி
வேட்டி வாங்கும்
பணத்தில் வாங்கியதுதான்
உன் வெள்ளி பாலாடை…!
என் அன்பு மகனே..!

முதல் முறை
நீ பள்ளி செல்லும்போது
உன்னை மருத்துவனாகதான்
பார்த்தேன் இந்த பாவி..,

கல்லூரி செல்லும்போது
கர்வத்தோடு பார்த்தேன்…,

மணக்கோலத்தில் உன்னை
பார்த்தபோதுதான்,
உயிருடன் மோட்சமான
முதல் மனிதனானேன்..,

என் கடமை முடிந்தது
என் அன்பு மகனே…!

ஓர் இரவு,
வீட்டில் படுத்துவிட்டு
விழித்து பார்த்தால்,
நானும் உன் தாயும்
கிடந்தது
“முதியோர் இல்ல” வாசலில்…,

பேர பிள்ளைகள்
உதைக்க காத்திருந்த
மார்பில்,
நீ உதைத்ததெப்படி..?
என் செல்ல மகனே..!
என் மகன் இப்படி ஆனதெப்படி..?

உன் தாய்
கொடுத்த பால்
விஷமானதெப்படி..?

என் மேல் சிந்திய
உன் எச்சில்
அமிலம் ஆனதெப்படி..?

போதும் மகனே போதும்..!

உயிரை கொல்பவன் மட்டும்
கொலைகாரன் அல்ல…
உணர்வை கொல்பவனும்தான்..,

நீ கொலைகாரன் ஆனதெப்படி…?

நீ செய்ததை
என் உடல் தாங்கும்…
என் உள்ளம் தாங்காது..

நான் தாங்குவேன்
உன் தாய்
தாங்கமாட்டாள்…!
பாலூட்டியவளாயிற்றே…!!!

மகனே..!
வாரம் ஒருமுறை
என் பேரப்பிள்ளைகளை
கூட்டி வா..,
இவர்கள்தான் “தாத்தா பாட்டி”என்று
அறிமுகம் செய்,

“தாத்தா பாட்டி சாமிகிட்ட போய்டாங்க”,
என்று கூறி எங்களை
உயிரோடு எரிக்காதே…!

எங்கள் நிலை பார்த்து
உன் பிள்ளைகள்
வளர்ந்தால்தான்,
நீ எங்கள் நிலைக்கு
வராமல் இருப்பாய்..!!!

நீ மிகவும் நல்லவன்
என் செல்ல மகனே..!!!
அனாதையாக எங்களை
விட்டுவிடாமல்,
முதியோர் இல்லத்தில்…
சேர்த்தாயே…!!!

நன்றி மகனே

என் மகன் நல்லவன்…!!!

LIC 60

என்ர ஊரு கோயமுத்தூருங்கோ

#‎என்னதான்‬ இருக்கிறது இந்த‪#‎கோவையில்‬...?.

கோவையை பற்றிய தகவல்கள்....!!!!

தலைநகர் அந்தஸ்தில் இருக்கிறது சென்னை;

மதுரையைக் கடக்கிறது வைகை;

நெல்லையை தழுவிச் செல்கிறது தாமிரபரணி;

தூத்துக்குடியிலே துறைமுகம் இருக்கிறது;

திருச்சியிலே "பெல்' (பாரத் ஹெவி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம்) இருக்கிறது; என்.ஐ.டி., இருக்கிறது;

#என்னதான் இருக்கிறது இந்த கோவையில்...?.

வற்றாத ஒரு நதியுமில்லை;

வானளாவிய ஒரு கோவிலுமில்லை;

இதிகாசத்திலே இடமுமில்லை;

எந்த அரசும் இந்நகரைக் கவனிப்பதுமில்லை;

இன்னும் சொல்வதானால், 1927ம் ஆண்டு ஆங்கிலேயரின் ஆவணப்படி, "குடிநீரும், சுகாதாரமும் இல்லாத இந்த ஊரில்', மக்கள் வாழத்தகுதியே இல்லை....

அப்புறம் எப்படி இந்த ஊரிலே குடியேறினார்கள் இத்தனை லட்சம் பேர்?.

தலைவர்கள் இருப்பதால், தலைநகருக்குக் கவனிப்பு அதிகம்; மற்ற ஊர்களுக்காக பரிந்து பேச, ஆங்காங்கே ஒரு தலைவர் இருக்கிறார்.

இந்த கோவை மண்ணுக்காக குரல் கொடுக்க, இன்று வரை ஒரு நல்ல அரசியல் தலைவர் இங்கே இல்லை;

ஆனாலும், இந்த நகரம் இத்தனை கம்பீரமாய் வளர்ந்து நிற்கிறதே...எப்படி?

விரக்திகளும், வேதனைக்குரிய கேள்விகளும் நிறைய இருந்தன; இப்போதும் இருக்கின்றன;

ஆனால், எல்லாவற்றையும் வெற்றிச்சரித்திரமாக்குவதுதான் இந்த கோவை மண்ணின் மகத்துவம்.

இருநூறு ஆண்டுகளுக்கு முன்னால் இது ஒரு நகரமில்லை; இன்றைக்கு இந்த நகரைத் தவிர்த்து, தமிழக வரலாறே இல்லை.

சென்னையிலே பிழைப்பது எளிது; வாழ்வது கடினம்.

மதுரையிலே வாழ்வது எளிது; பிழைப்பது கடினம்.

கோவையில் எளிதாய்ப் பிழைக்கலாம்; உழைத்தால் செழிக்கலாம்.

வந்தாரை மட்டுமல்ல; வாழ்வில் நொந்தாரையும் தந்தையாய் அரவணைத்து, வாழ வழி கொடுக்கும் உழைப்பின் பூமி இது.

எந்த அரசின் ஆதரவுமின்றி, இந்த நகரம் இத்தனை பெரிதாய் வளர்ந்ததன் ரகசியமும் இதுவே.

பஞ்சாலை நகரம் என்ற பெயரையும் கொஞ்சம் கொஞ்சமாய் இழந்து வந்தாலும், இந்த "டெக்ஸ் சிட்டி', சமீபகாலமாய் "ஹை-டெக் சிட்டி'யாய் மாறி வருகிறது என்பதுதான் உண்மை.

உயர் கல்விச் சாலைகள், தகவல் தொழில் நுட்பப் பூங்காக்கள், அதிநவீன மருத்துவமனைகள், அகில உலகிற்கும் சவால் விடும் ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள்...

அரசு அமைத்து சோபிக்காமல் போன "டைடல் பார்க்' தவிர, இந்த நகருக்கு இத்தனை பெரிய வளர்ச்சியை வாரிக்கொடுத்தது இங்குள்ள தனியார் தொழில் முனைவோர்தான்.

எத்தனை வேகமாய் வளர்ந்தாலும், இன்னும் கட்டமைப்பு வசதிக்காகப் போராடுகிற நிலைதான் இங்கே. ஆனாலும், சோதனைகளைக் கடந்து சாதனை படைக்கிறது கோயம்புத்தூர் நகரம்.

இடையிலே ஒரு சங்கடம் வந்தாலும், அதிலும் "பீனிக்ஸ்' பறவையாய் மீண்டெழுந்து, இன்று "ஒற்றுமையின் ஊராக' பெயர் பெற்றிருக்கிறது கோவை.

அன்னா ஹசாரேக்கு ஆதரவு தெரிவித்து, கூடுகிறார்கள் ஐயாயிரம் பேர்;

குளங்களைக் காக்க குரல் கொடுக்கிறது "சிறுதுளி';

மரங்களை வெட்டினால், ஓடோடி வருகிறது "ஓசை';

ரயில் சேவைக்காக போராடுகிறது "ராக்'.

மரியாதைக்குரிய கொங்குத் தமிழ்,

அத்துப்படியான ஆங்கிலம்,

இதமான காலநிலை,

சுவையான சிறுவாணி,

அதிரடியில்லாத அரசியல்...

இவற்றையெல்லாம் தாண்டி,

அமைதியை விரும்பும் மக்கள் இங்கே இருக்கிறார்கள். சாதி, மதங்களைக் கடந்து, உழைப்பால் ஒன்று பட்டு நிற்கும் கோவையின் மண்ணின் மைந்தர்களே, ஆலமரமாய் எழுந்து நிற்கும் இந்த நகரத்தின் ஆணிவேர்கள்.

புதுப்புது நுட்பங்களால் கண்டு பிடிப்புகளில் கலக்கும் தொழில் முனைவோராலும், சமூக அக்கறையும், சமத்துவ நேசமும் கொண்ட மனிதர்களாலும், கோயம்புத்தூர் நகரம் தினமும் புத்துணர்வோடு புகழின் சிகரம் நோக்கி நடை போடுகிறது.....

அந்த பெருமையுடன் எல்லா கோவை நட்புகளும் இறுமாப்பாய் சொல்லுங்க ...

என்ர ஊரு கோயமுத்தூருங்கோ.....!!!!!

மழை நீர் பிராணன்

மழை நீரில் குளிக்கும் ஒருவனுக்கு ஒருவேளை சளிபிடித்து, காய்ச்சல் வந்தால், அவன் ஆரோக்கியமாக இல்லை, எனவே அவை ஆரோக்கியத்தை ஏற்ப்படுத்துகிறது என்று அர்த்தம். சுத்தமான மழை தண்ணீரில் அளவுக்கு அதிகமாக பிராணன் இருக்கிறது. மழைநீரில் நனையும்போது பலருக்கும் சளி பிடிக்கிறது. தும்மல் வருகிறது, காய்ச்சல் வருகிறது. இது ஏன் வருகிறது அதாவது மழைநீரில் அளவுக்கு அதிகமான பிராணன் இருப்பதால் நமது உடலில் உள்ள அனைத்து செல்களும் அந்த பிராணனை உறிய ஆரம்பிக்கிறது. உடலில் பல நாட்களாக, பல வருடங்களாக தேங்கிக்கிடக்கும் கழிவுகளைத் தும்மல் வழியாகவும், சளியாகவும், மூக்கு ஒழுகுதல் வழியாகவும் வெளியேற்றுகிறது. ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ்கிறானா, இல்லையா என்பதை எப்படி கண்டுபிடிப்பது என்றால், மழையில் நனைந்தால் அவனுக்கு சலிபிடிக்காமல்,காய்ச்சல் வராமல் இருந்தால் அவன் ஆரோக்கியமாக இருக்கிறான் என்று பொருள். 

எனவே, மழையில் நனைந்து காய்ச்சல் வந்தால் அதைப்பாரத்து பயப்படவேண்டிய அவசியம் இல்லை. தைரியமாக இருங்கள். நமது உடல் நன்மை செய்கிறது. அது ஒரு மருத்துவம். எனவே யாருக்கு எந்த நோய் இருந்தாலும் மழையில் நனைவதன் மூலம் உடலை குணப்படுத்த மூடியும். மழைநீரை குடிப்பதின் மூலமாகவும் நமது உடலில் பிராண சக்தியை அதிகப்படுத்த மூடியும். 

மழை வரும்போது முதலில் ஒரு ஐந்து நிமிடம் அந்த நீரை குடிக்கக்கூடாது. ஏனென்றால் காற்றில் தூசுகளும், குப்பைகளும், வாகனங்களிலிருந்து வரும் கழிவுப்பொருள்களும் வானத்தில் இருக்கும். முதல் 5 நிமிடத்தில் மழைநீர் அந்த தூசுகள், குப்பைகளை எடித்துக்கொண்டு பூமியை நோக்கி வரும் எனவே முதல் 5 நிமிடத்தில் வரும் மழைநீரை நாம் குடிக்கக்கூடாது, 5 நிமிடத்திற்கு பின் வரும் மழைநீரை நேரடியாக பாத்திரத்தில் மூலமாகவோ, ஒரு கலனை பயன்படுத்தி அந்த நீரை பிடிக்கவேண்டும். ஒருவேளை நமது வீட்டின் கூரை சுத்தமாக இருந்தால் கூரையிலிருந்து வரும் மழைநீரையும் பிடிக்கலாம். இந்த நீர் உலகிலேயே மிகவும் சுத்தமான தூய்மையான நீர். இதில் பிராணன் அதிகமாக இருக்கும். இந்த தண்ணீரை ஒரு பாத்திரத்திலோ, ஒரு பாட்டிலிலோ காற்று புகாமல் அடைத்து சூரிய வெளிச்சம் படாமல் வீட்டில் ஏதாவது ஒரு இடத்தில் வைத்துவிட்டால் அந்தத் தண்ணீர் ஆறு வருடங்களுக்கு கெட்டுபோகாமல் இருக்கும். ஆனால் அந்த தண்ணீரில் சூரிய வெளிச்சம் பட்டுவிட்டால், 24 மணிநேரத்தில் அதில் புழு, புச்சிகள் வந்து அந்த நீர் கெட்டுவிடும். எனவே மழைநீரை சூரிய வெளிச்சம் படாமல் பாதுகாத்து அதை நாம் குடிக்கும்போது.நமது உடலுக்கு தேவையான அனைத்து பிராணனும் கிடைத்து, நமது உடலிலுள்ள அனைத்து நோய்களும் குணமாகி, நமது உடல் ஆரோக்கியம் அடைகிறது. எனவே, மழைநீர் பிராணனை நாம் பயன்படுத்துவோம். 

குழந்தைகள் மலையில் நனைவதை நாம் குற்றம் என்று கூறி விரட்டி அடிக்கவேண்டாம். மழையில் நனைவது மிகவும் அற்புதமான, அருமையான, சந்தோஷமான மனதிற்கு பிடித்தமான, பெரு நிகழ்ச்சி. மேலும் ஆரோக்கியமானதும் கூட. எனவே இனிமேல் மழை வரும்போது நம்மை ஒரு சினிமா நடிகைபோல் நினைத்துக்கொண்டு, அதில் ஆட்டம் போடலாம். நல்லது. மழைநீரை குடிக்கலாம் நல்லது. மழைநீர் பிராணன் ஒரு அற்புதமான மருந்து. 

எனவே இனி நம் வாழ்வில் நீர் பிராணனை சேர்த்துக் கொள்வோம். நீர் என்பது சாதாரணம் கிடையாது. உயிர்சக்தி, நீர் பிராணன், நீரில் உள்ள பிராணனை நாம் சரியான முறையில் பயன்படுத்தி ஆரோக்கியமாக, அமைதியாக நிம்மதியாக வாழ்வோம்.
வாழ்வோம் ஆரோக்கியமாக.

நன்றி - ஹீலர் பாஸ்கர் (அமைதியும்
ஆரோக்கியமும்)

100% Furmula

ஒரு குட்டி பெண்ணும்
குட்டி பையணும்
விளையாடிக் கொண்டு
இருந்தார்கள். அந்த பையன்
கைகளில் நிறைய
பொம்மைகளும் அந்த
குட்டிப்பெண் கையில்
நிறைய இனிப்புகளும்
இருந்தது.
அந்த பையன் சொன்னான்
என்கிட்ட இருக்கிற
பொம்மைகள் எல்லாத்தையும்
உன்கிட்ட தர்ரேன் நீ வச்சு
இருக்கிற இனிப்புகள்
எல்லாத்தையும் எனக்கு
தர்ரியா என்று கேட்டான்.
குட்டி பெண்ணும் அதற்கு
சம்மதம் தெரிவித்தாள்.
அந்த பையன் தன்னிடம் உள்ள
நல்ல பொம்மையை ஒளித்து
வைத்துவிட்டு அந்த குட்டி
பெண்ணிடம் இனிப்புகளை
கேட்டான்.குட்டி பெண்
எல்லா இனிப்புகளையும்
கொடுத்து விட்டு
பொம்மைகளை
வாங்கிகொண்டாள்.
அன்று இரவு அந்த குட்டி
பெண் நிம்மதியாக
உறங்கினாள். அந்த
பையனுக்கு உறக்கமே
வரவில்லை. அவள் எல்லா
இனிப்புகளையும் நம்மிடம்
தந்திருப்பாளா இல்லை நாம்
ஒளித்து வைத்தது போல்
அவளும் ஏமாற்றி இருப்பாளா
என்று நினைத்துக் கொண்டே
உறக்கம் இல்லாமல்
அவஸ்த்தைப்பட்டான்.
நீங்கள் 100 சதவீதம் அடுத்தவர்
மேல் நம்பிக்கை
வைக்கவில்லை என்றால்
அடுத்தவர் உங்களிடம் காட்டும்
அன்பின் மீது சந்தேகம்
இருந்து கொண்டே
இருக்கும்.
இது
நட்புக்கும்,வேலை செய்யும்
இடத்தில் இருக்கும்
முதலாளி தொழிலாளி
உறவுக்கும் பொருந்தும்.
எப்போதும் எல்லோரிடமும்
100 சதவீத அன்பை
காட்டுங்கள்....!!!!
எதை
செலுத்துகிறோமோ
அது தான் திரும்ப
கிடைக்கும் என்பதை
அழகான கதை மூலம்
விளங்குகிறது!

Nov 10, 2015

ஆணும் பெண்ணும் சமமா?

ஆணும் பெண்ணும் சமம் அல்ல...

பெண்களின் மூளை ஒரே நேரத்தில் பலபணிகளை செய்யக்கூடியவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது!
உதாரணாமக ஆணும் பெண்ணும் சமம் அல்ல...

பெண்களின் மூளை ஒரே நேரத்தில் பலபணிகளை செய்யக்கூடியவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது!
உதாரணாமக பெண்ணால், தொலைக்காட்ச்சி பார்த்துக்கொண்டே தொலைபேசியில் பேசவும் சமையல் செய்யவும், பிள்ளைகளுக்கு தேவையான பணிவிடையையும் செய்ய முடியும். ( உங்கள் வீடுகளிலும் பார்த்திருப்பீர்கள்.)

ஆண்களின் மூளை ஒரு நேரத்தில் ஒரு பணியை செய்யக்கூடியவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக, ஆண்களால் தொலைக்காட்ச்சியைப பார்த்துக்கொண்டே தொலைபேசியில் பேச முடியாது!
(அவர்களின் கவனம் தொலைக்காட்சியில் இருக்கும்
அல்லது தொலை பேசியில் இருக்கும். இரண்டிலும் இருக்காது!)

மொழி;
பெண்களால் இலகுவாக பல மொழிகளைக்கற்றுக்கொள்ள
முடியும்! அதனால் தான் சிறந்த மொழி பெயர்ப்பாளர்கள் பலர் பெண்களாக இருக்கின்றார்கள். 3 வயது ஆண்குழந்தையுடன் ஒப்பிடும் போது அதே வயது பெண்குழந்தை அதிகபடியான சொற்களை தெரிந்து வைத்திருப்பதற்கும் மூளையின் இந்த அமைப்பே காரணம்.

பகுத்துணரும் திறன் (ANALYTICAL SKILLS);
ஒரு பிரச்சனையை அல்லது பல பிரச்சனைகளை பகுப்பாய்வு செய்து தீர்மானத்திற்குரிய படிகளை தீர்மானிப்பதற்கு ஆண்களின் மூளையில் பெரும்பாலான இடம் ஒதுக்கப்படுகிறது. அதனால், எந்த பிரச்சனைக்கும் ஒரு தீர்க்கமான தீர்மானத்திற்குரிய வரைபடத்தை ஆணகளின் மூளையால் இலகுவாக ஏற்படுத்திக்கொள்ள முடியும். ஆனால், பெண்களின் மூளையால் இதை செய்ய முடியாது. அது மட்டுமல்லாது பெண்களால் ஆண்கள் வைக்கும் தீர்மானத்தையும் உணர்ந்துகொள்ள முடியாது.

வாகனம் ஓட்டுதல்;
வாகனத்தை ஓட்டிக்கொண்டு இருக்கும் போது,
தூரத்தில் வரும் ஒரு வாகனத்தின் வேகம், பயணிக்கும் திசை, வாகனத்தின் போக்கில் ஏற்பட இருக்கும் மாற்றங்களை (சிக்னல்ஸ்) முன் கூட்டியே விரைவாக கணித்து அதற்கு ஏற்றபோல் நடத்தையை வெளிப்படுத்த ஆண்களின் மூளையால் முடியும்.

ஆனால், பெண்களின் மூளை தாமதமாகவே இந்த
கணிப்புக்களை மேற்கொள்ளும். இதற்கு காரணம், ஆண்களின் “ஒரு பணியை செய்யக்கூடிய மூளைத்திறன்” ஆகும்.
உதாரணமாக வாகனம் செலுத்தும் போதுஇசையைக் கேட்டுக் கொண்டிருந்தாலும் ஆண்களின் கவணம் வாகனம்
செலுத்துவதில் தான் இருக்கும். பெண்களின் கவனம் இரண்டிலும் இருக்கும். அதனால் வாகனங்களை செலுத்துவதில் பெண்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றார்கள். (ஹெட் போனில் பாட்டு கேட்டுக் கொண்டு scooty ஓட்டும் பெண்கள் ஜாக்கிரதை).

பொய்ப்பேச்சு;
ஆண்கள் பெண்களின் முகத்திற்கு நேராக பொய் பேசும் போது, பெண்கள் இலகுவாக பொய் என்பதை அறிந்துகொள்வார்கள்! ஆனால், பெண்கள் ஆண்களிடம் பொய் பேசும் போது ஆண்களால் அதை உணரமுடிவதி.  காரணம் பெண்கள் பேசும் போது 70% ஆன முக மொழியையும் 20% உடல் மொழிகளையும் 10% ஆன வாய் மொழியையும் உணர்கின்றனர். ஆண்களின் மூளை அவ்வாறானதில்லை!

பிரச்சனைக்கான தீர்வுகள்:
பல பிரச்சனைகள் இருக்கும் ஒரு ஆணின் மூளையானது ஒவ்வொரு பிரச்சனையையும் தனித்தனியாக பிரித்து ஒவ்வொன்றிற்கும் தனித்தனி தீர்வை படிப்படியாக இனங்காணும்.

இதனால் பிரச்சணையுள்ள ஆண்கள் தனிமையில்
தமது தீர்வுகளை கண்டுகொள்வார்கள்.
ஆனால், இதே அளவு பிரச்சனையுள்ள ஒரு பெண்னின்
மூளையானது பிரச்சனைகளை தனித்தனியாக பிரித்தறியாது…. யாராவது ஒருவரிடம் தமது முழுப்பிரச்சனைகளையும் வாய்மூலமாக
சொல்வதனூடாக திருப்தியடைந்துகொள்ளும்.
சொன்னதன் பின்னர், பிரச்சனை தீர்ந்தாலும் தீராவிட்டாலும் அவர்கள் நின்மதியாக படுத்துறங்குவார்கள்.

தேவைகள்:
மதிப்பு, வெற்றி, தீர்வுகள், பெரிய செயலாக்கங்கள் என்ற ரீதியில் ஆண்களின் தேவைகள் அமைந்திருக்கும்.
ஆனால், உறவுகள், நட்பு, குடும்பம் என்ற ரீதியில்
பெண்களின் தேவைகள் அமைந்திருக்கும்.

மகிழ்ச்சியின்மை:
ஒரு பெண்ணிற்கு தனது காதல்/ உறவுகளிடையே பிரச்சனை அல்லது திருப்தியின்மை இருந்தால்…
அவர்களால், அவர்களின் வேலையில் கவணம்
செலுத்த முடியாது. ஆனால், ஒரு ஆணிற்கு தனது வேலையில் பிரச்சனை இருப்பின் அவர்கள் காதல்/ உறவுகளில் கவணம் செலுத்த முடியாது.

உரையாடல்;
பெண்கள் உரையாடும் போது மறைமுக மொழிகளை அதிகம் பயன்படுத்துவார்கள். ஆனால், ஆண்கள் நேரடி மொழியையே பயன்படுத்துவார்கள்.

எண்களை ஆண்கள் அதிகம் நினைவில் வைத்து கொள்ள முடியாது. மனைவியின் பிள்ளைகளின் பிறந்த நாளை நினைவு வைத்து கொள்ள ஆண் சிரமம் படுவான். (காதலன் அல்லது கணவன் பிறந்த நாளை மறந்து விட்டால் பெண்கள் ஈசி யாக எடுத்து கொள்ள வேண்டும். ஏன் மறந்தாய என் டார்சர் தர கூடாது. ) பெண்கள் தனது அம்மா அப்பா அண்ணன் தம்பி தங்கை பிள்ளைகள் என்று எல்லார் பிறந்த தினமும் மனதில வைத்துக்கொண்டு இருப்பாள். அது அவளுக்கு சுலபமானது.

நடவடிக்கை;
பெண்கள் சிந்திக்காமல் அதிகம் பேசுவார்கள். ஆண்கள் சிந்திக்காமல் அதிகம் செய்வார்கள்!
ஆண்கள், பெண்களிடையேயான உறவுகளில்
ஏற்படும் பிரச்சனைக்கான உண்மையான அறிவியல்
காரணத்தை தற்போது உணர்ந்திருப்பீர்கள். , தொலைக்காட்ச்சி பார்த்துக்கொண்டே தொலைபேசியில் பேசவும் சமையல் செய்யவும், பிள்ளைகளுக்கு தேவையான பணிவிடையையும் செய்ய முடியும். ( உங்கள் வீடுகளிலும் பார்த்திருப்பீர்கள்.)

காரணத்தை தற்போது உணர்ந்திருப்பீர்கள்.