Powered By Blogger

Oct 31, 2016

ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாபின் இறுதி வரிகள்.

நான் வணிக உலகில் வெற்றியின் உச்சத்தை அடைந்திருக்கிறேன். பிறரின் பார்வையில் என் வாழ்க்கை வெற்றிகரமானது.

எப்படியிருந்தாலும் என் பணிச்சுமைகள்  எல்லாம் தாண்டி நானும் வாழ்க்கையில் சிறிது சந்தோசங்களை அனுபவித்திருக்கிறேன்.

பணமும் வசதிகளும் மட்டுமே வாழ்க்கையில்லை என்பதை இறுதியில் தான் அறிந்து கொண்டேன்.

இதோ இந்த மரணத்தருவாயில், நோய் படுக்கையில் படுத்து கொண்டு என் முழு வாழ்க்கையையும் திரும்பி பார்க்கும் இந்த தருணத்தில் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த அங்கீகாரங்கள், பணம் , புகழ் எல்லாம் செல்லா காசாக , அர்தமற்றதாக மரணத்தின் முன் தோற்று போய் நிற்பதை உணர்கிறேன்.

இந்த இருளில் என் உயிரை தக்க வைக்க போராடிக்கொண்டிருக்கும் மருத்துவ இயந்திரங்களின் மெல்லிய சத்தங்கள் மட்டுமே காதுகளில் ரீங்கரிக்கிறது. கடவுளின் மூச்சுக்காற்றையும் மரணத்தையும் மிக அருகில் உணர்கிறேன்.

வாழ்க்கையில் நாம் வாழ்வதற்கு போதுமான பணம் சம்பாரித்த பின், பணத்திற்கு சம்மந்தமில்லாத விஷயங்களையும் சம்பாரிக்க தொடங்க வேண்டும் என்பது இப்போது புரிகிறது. அது உறவாகவோ, இல்லை எதாவது கலை வடிவமாகமாவோ , நம் இளமையின் கனவாகவோ இருக்கலாம். அது தான் வாழ்வில் மிக முக்கியமானது.

அதைவிட்டு பணத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு ஓடும் மனிதனின் வாழ்க்கை முற்றிலும் வேறு திசையில் திரும்பிவிடுகிறது என் வாழ்க்கையை போல.

கடவுள் நம் புலன்களின் மூலம் அனைவரின் மனதில் இருக்கும் அன்பை உணரசெய்யும் சக்தியை கொடுத்திருக்கிறார், பணத்தால் நாம் உண்டாக்கியிருக்கும் எல்லா சந்தோசங்களும் வெறும் பிரமைகள் தான்.

நான் சம்பாரித்த பணம் எதையும் இங்கு கொண்டுவர முடியாது. நான் மகிழ்ந்திருந்த என் நினைவுகள் மட்டுமே இப்போது என்னுடன் இருக்கிறது.

அன்பும் காதலும் பல மைல்கள் உங்களுடன் பயணிக்கும். வாழ்க்கைக்கு எந்த எல்லைகளுமில்லை. எங்கு செல்ல ஆசைப்படுகிறீர்களோ அங்கு செல்லுங்கள். தொட நினைக்கும் உயரத்தை தொட முயற்சியுங்கள். நீங்கள் வெற்றியடைவது உங்கள் எண்ணத்திலும் கைகளிலும் தான் உள்ளது.

உங்கள் பணத்தை வைத்து நீங்கள் என்ன வேண்டுமானாலும் வாங்கலாம், ஆனால் அந்த பணத்தின் மூலம் உங்கள் வலியை, உங்கள் துயரை யாரும் வாங்கிகொள்ளுமாறு செய்ய முடியாது.

பணத்தின் மூலம் வாங்கும் பொருட்கள் தொலைந்துவிட்டால் மீண்டும் வாங்கிவிடலாம். ஆனால் நீங்கள் தொலைத்து அதை பணத்தால் வாங்க முடியாது என்ற ஒன்று உண்டென்றால் அது உங்கள் வாழ்க்கை தான்.

வாழ்க்கையில் எந்த கட்டத்தில் நீங்கள் இருந்தாலும் பரவாயில்லை , இப்போது வாழ்க்கையை வாழ ஆரம்பியுங்கள். நாம் நடித்து கொண்டிருக்கும் வாழ்க்கை எனும் நாடகத்தின் திரை எப்போது வேண்டுமானாலும் இறக்கப்படலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

உங்கள் குடும்பத்தினருக்கு, மனைவிக்கு, நண்பர்களுக்கு, அன்பை வாரி வழங்குங்கள்.

உங்களை நீங்கள் சந்தோசமாக வைத்து கொள்ளுங்கள். அனைவரையும் மனமார நேசியுங்கள்.

மரணப்படுக்கையில் ஸ்டீவ்..

Oct 18, 2016

மகளைப் பெற்ற ஒவ்வொரு தந்தைக்கும் அர்ப்பணிக்கிறேன்.

பெண்களுக்கு மட்டுமே இது நடக்கிறது.

பிறப்பதற்கு ஒரு வீடு, திருமணத்துக்கு பின் புகுந்துகொள்ள ஒரு வீடு.

ஒவ்வொரு பெண்ணுக்கும் அத்தகைய இடம்பெயரும் தருணம் உணர்வுப்பூர்வமானது.

அந்தவேளையில், பெண்ணைவிட பெண்ணைப் பெற்றவர்களுக்கு குறிப்பாக தந்தைக்கு நேரும் உணர்வுப் போராட்டம் சொற்களில் அடங்காதது.

அவ்வாறாக உணர்ச்சிவசப்பட்ட ஒரு தந்தை தனது மகளின் திருமண விழாவில் ஆற்றிய உரையை ஃபேஸ்புக் பகிர்வில் படிக்க நேர்ந்தது.

மிகவும் உருக்கமான, யதார்த்தமான, இயல்பான அந்த பதிவு இதோ:

எங்கள் மகளை திருமணம் செய்து கொடுத்துவிட்டோம். இனி, இளைப்பாற விரும்புகிறோம். அதை அனுபவிக்க தயாராகிவிட்டோம். ஆனால், அதற்கு நீங்கள் அவளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

நான் எதிர்பார்ப்பதைவிட நீங்கள் அவளை மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்வீர்கள் என நான் நம்புகிறேன்.

அவள் என் வீட்டில் துள்ளித் திரிந்ததைவிட உங்கள் வீட்டில் மகிழ்ச்சி துள்ளளோடு இருப்பாள் என நம்புகிறேன்.

இருந்தாலும், எல்லா சராசரி தந்தையைப் போலவும் நான் இதை திரும்பத் திரும்ப சொல்கிறேன் "தயவு செய்து அவள் மகிழ்ச்சிக்கு குறை ஏதும் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்"

அவள் எப்போதுமே எனக்கு பாரமாக இருந்ததில்லை. இனியும் ஒருபோதும் பாரமாக கருத மாட்டேன்.

ஏனெனில், என் சுவாசம் இயல்பாக இருப்பதற்கும், என் இதழ்களில் புன்னகை பூப்பதற்கும் காரணம் அவளே. இருந்தும் அவளை நான் திருமணம் செய்து கொடுக்கிறேன்.

ஏனென்றால் அது ஓர் இயற்கை நியதியாக இருக்கிறது. கலாச்சாரத்துக்கு கட்டுப்பட்டுமட்டுமே அவளை உங்கள் வீட்டுக்கு அனுப்பிவைக்கிறேன். என் வீட்டின் மகிழ்ச்சிப் பேழை உங்கள் வீட்டில் ஒளி வீச வருகிறது.

எனது உலகத்தை உங்களுக்கு தாரை வார்த்துத் தருகிறேன். அந்த உலகம் என்றென்றைக்கும் அழகாக இருப்பதை நீங்களே உறுதி செய்ய வேண்டும்.

எனது இளவரசியை உங்களிடம் அனுப்புகிறேன். அவள் உங்கள் வீட்டின் ராணியாக திகழ வழிவகை செய்யுங்கள். எனது ரத்தமும், வியர்வையும் அவளை ஆளாக்கியிருக்கிறது. இப்போது அவள் மாசறு பொன்னாக இருக்கிறாள்.

அவள் உங்கள் வீட்டுக்கு கொண்டு வரும் அன்பு, அக்கறை, அரவணைப்பு, அழகு, இதம் என எல்லாப் பண்புகளுக்கும் பரிசாக அவளுக்கு மகிழ்ச்சியைத் தாருங்கள்.

ஆம், அவளை தயவுசெய்து மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்ளுங்கள்.

எப்போதாவது அவள் சிறு தவறு செய்துவிட்டாள் என நினைத்தால் அவளை தாராளமாக திட்டுங்கள் ஆனால் அதேவேளையில், அவள் மேல் செலுத்தும் அன்பில் குறைவைக்காதீர்கள்.

அவள் மிகவும் நளினமானவள். அவள் எப்போதாவது துவண்டு போய் இருந்தால் அவளுடன் இருங்கள்.

உங்களது சிறு கவனம் அவளுக்கு போதும், ஆறுதல் தர. அவள் உடல்நலன் பாதிக்கப்பட்டால் அவள் மீது அக்கறை காட்டுங்கள். அதுவே அவளுக்கு அருமருந்து.

அவளது பொறுப்புகளில் எப்போதாவது விலகிவிட்டால் அதைச் சுட்டிக்காட்டுங்கள்.

அதேவேளையில், 'நீ இன்னும் வாழ்க்கையை கற்றுக் கொண்டிருக்கிறாய் என நாங்கள் நம்புகிறோம்' என அவள் உணரும்படி நடந்து கொள்ளுங்கள்.

அவளைப் புரிந்து கொள்ளுங்கள். தயவு செய்து அவளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்.

அவளை மாதக் கணக்கில் காண முடியவில்லை என்றாலும் பரவாயில்லை, அவள் குரலை தினம் தினம் கேட்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. உங்கள் வீட்டுக்கு வந்தபிறகு அவளுக்கு என் நினைவே வரவில்லை என்றால் நான் மிகுந்த மகிழ்ச்சியடைவேன்.

என் மகளின் மகிழ்ச்சி மட்டுமே என் வாழ்நாள் லட்சியம். எனவே, தயவு செய்து அவளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்.

அன்பிற்குரிய மருமகனே!

இந்த வார்த்தைகளின் அர்த்தம் இப்பொழுது உங்களுக்கு புரியாமல் போகலாம். ஆனால், நாளை நீங்கள் ஒரு மகளைப் பெற்றெடுக்கும் பாக்கியவான் ஆகும்போது எனது வார்த்தைகளின் அர்த்தம் புரியும்.

அப்பொழுது உங்கள் இதயத்தின் ஒவ்வொரு துடிப்பும் 'என் மகள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்' என்று சொல்லும். எனவே, தயவு செய்து எனது மகளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த உரையை மகளைப் பெற்ற ஒவ்வொரு தந்தைக்கும் அர்ப்பணிக்கிறேன்.

Oct 4, 2016

ஆயுள் காப்பீடு

எதுவெல்லாம் அவசியமோ
அதையெல்லாம் எதுக்கு!
என்ற கேள்வி?

ஹெல்மெட்
நம் தலைக்கு!

பயன்-

நம்மைக் காக்கும்
நம் குடும்பத்தை காக்கும்.

கார் சீட் பெல்ட்

நம்மை காக்கும்
நம் குடும்பத்தை காக்கும்.

ஆயுள் காப்பீடு

நம் குடும்பத்தைக் காக்கும்.

இந்த மூன்றின் அருமை
இருக்கும்போது தெரியாது.

இந்த மூன்றும்
நமக்காக நாம் செய்வது.

கேட்டால்தான் செய்வேன்
என்று அடம் பிடிக்கக் கூடாது.

கேட்காமலேயே செய்து
பிறர் மனதில் இடம் பிடிக்க வேண்டும்.

Oct 3, 2016

மற்றவை நடந்தே தீரும்..

ஒரு கருவுற்ற மான் தன் மகவை ஈயும் ஒரு நிலை..
அது ஒரு அடர்ந்த புல் வெளியை கண்டது,
அதன் அருகே ஒரு பொங்கும் ஆறு.
இதுவே சரியான இடம் என்று அது சென்றது அங்கு.
அப்போது கருமேகங்ள் சூழ்ந்தன.
மின்னலும் இடியும் இசையாட்சி செய்ய ஆரம்பித்தன.
மான் தன் இடப்பக்கம் பார்த்தது.. அங்கே ஒரு வேடன் தன் அம்பை மானை நோக்கி குறி பார்த்து நின்று கொண்டிருந்தான்.
மானின் வலப்பக்கமோ பசியுடனான ஒரு புலி மானை நோக்கி வந்து கொண்டிருந்தது.
ஒரு கருவுற்ற மான் பாவம் என்ன செய்யும்? அதற்கு வலியும் வந்து விட்டது.மேலும் காட்டு தீயும் எரிய ஆரம்பித்து விட்டது.
என்ன நடக்கும்.?
மான் பிழைக்குமா?
மகவை ஈனுமா?
மகவும் பிழைக்குமா?
இல்லை காட்டு தீ எல்லாவற்றையும் அழித்து விடுமா?
வேடனின் அம்புக்கு இரையாகுமா?
புலியின் பசிக்கு புசியாகுமா?
மான், தீ ஒரு புறமும், பொங்கும் காட்டாறு மறு புறமும், மற்ற இருவரும் எதிர் புறமும்..
மான் என்ன செய்யும்?
மான் தன் கவனம் முழுதும், தன் மகவை ஈவதிலேயே செலுத்தியது.. ஒரு உயிரை விதைப்பதிலேயே தன் கவனம் இருக்க, மற்ற சூழல் அதன் கண்களில் இல்லை.
அப்போது நடந்த நிகழ்வுகள்.......
மின்னல் தாக்கியதால் வேடன் கண் இழந்தான்.
எய்தப்பட்ட அம்பு புலியை தாக்கி அது இறக்கிறது.
தீவிர மழை காட்டு தீயை அழித்து விடுகிறது..
அந்த மான் அழகான குட்டி மானை பெற்றெடுக்கிறது.
நம் வாழ்விலும் இப்படிபட்ட சந்தர்ப்பங்கள் நிறைய வந்திருக்கிறது.. வரும்..அச்சூழ்லில் பல எதிர்மறை சிந்தனைகள் நம்மை சுற்றி நின்று அச்சுறுத்தும்..
சில எண்ணங்களின் பலம் நம்மை வீழ்த்தி அவை வெற்றி பெற்று நம்மை வெற்றிடமாக்கும்..
நாம் இம்மானிடம் இருந்து மானிடம் கற்றுக்கொள்வோம்..
அந்த மானின் முக்கியத்துவம் முழுதும், மகவை பெற்றிடுவதிலேயே இருந்தது..மற்ற எதுவும் அதன் கை வசம் இல்லை..மற்றவற்றிற்கு அது கவனம் கொடுத்து இருந்தால் மகவும் மானும் மடிந்து இருக்கும்.
இப்போது உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்..
எதில் என் கவனம்?
எதில் என் நம்பிக்கையும் முயற்ச்சியும் இருக்க வேண்டும்?
வாழ்வின் ஒரு பெரும் புயலில், எதில் கவனம் செலுத்த வேண்டுமோ அதில் செலுத்தி மற்றதை இறைவனிடம் விட்டு விடுங்கள்..
அவர் எப்போதும் எதிலும் நம்மை வருத்த செய்ய மாட்டார்.
கடவுள் தூங்குவதும் இல்லை..
துயரப்படுத்துபவரும் இல்லை.. உன் செயலில் நீ கவனம் செலுத்து..
மற்றவை நடந்தே தீரும்..
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻