Powered By Blogger

Jul 17, 2014

ஒரு வெற்றியாளனின் அட்வைஸ்.

ஒரு வெற்றியாளனின் அட்வைஸ்.
சென்னையில் திரு. பிரவீன் குமார் என்ற ஒரு LIC முகவரின் சிறப்புரைய கேட்கும் வாய்ப்பு கிடைத்தது.

33 வயது, 10 வருடங்களுக்கு முன்னால் LIC முகவரான இவர் சென்ற வருடம் மட்டும் சம்பாதித்தது 50 லட்சங்கள். அவருடைய மொத்த வருடத்தில் காலாவதி பாலிசிகள் 1%-ற்கும் குறைவு.

தற்பொழுது இவர் தமிழகத்தின் MDRT நிறுவனத்திற்கான சேர் பெர்சனாக உள்ளார்.

மிகவும் எளிமையாக தோற்றத்திலும் பேச்சிலும் ஒரு வெற்றியாளனின் அமைதி.

இவருடைய பேச்சில் இருந்து நான் எடுத்துக்கொண்ட குறிப்புகள் (பாடங்கள்).

1. 300 பாலிஸிகளுக்கு மேல் விற்றிருந்தால் ஒரு நபரை வேலைக்கு அமர்த்துங்கள். ஒரு தனி அலுவலகமும் தேவை.

2. தற்போதுள்ள அறிவியல் முன்னேற்ற சாதனங்களை கற்றுக்கொண்டு பயன்படுத்துங்கள். (சாப்ட்வேர், லாப்டாப், மொபைல் முதலியன)

3. மறக்காமல் உங்கள் வாடிக்கையாளருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லுங்கள்.

4. புது வாடிக்கையாளர் கிடைப்பதற்கு தொடர்ந்து ஒரு வணிகச் செயலை (Activity) விடாமல் செய்துகொண்டே இருங்கள். இவர் தொடர்ந்து பேப்பரில் விளம்பர நோட்டிசுகளை வைக்கும் முறையையும், பாலிசி சேவை முகாம் நடத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

5. உங்கள் இலக்கை தீர்மானியுங்கள். அதை அடைந்ததும் பெரிய ஒரு இலக்கை தீர்மானியுங்கள். 5 வருடங்கள் முன் MDRT ஆக வேண்டும் என்று இலக்கு. தற்போது சென்ற இரண்டு வருடங்களாக COT. ஆனால் இப்போது தான் TOT ஆகாமல் இருப்பதை நினைத்து வெட்கப்படுகிறார்.

காப்பீட்டு தொழிலைப் பற்றி தெரியாதவர்களுக்கு: MDRT என்றால், வருடம் சுமார் 35 லட்சம் பிரிமியம் புதிதாக வசூலிக்கவேண்டும். COT = 3 x MDRT, TOT = 2 x COT. அதாவது COT என்றால் சுமார் 2 கோடிகள் புது வணிக பிரிமியம் வசூலிக்க வேண்டும். இதில் ரெனிவல் பிரிமியம் கணக்கில் சேராது.

6. உங்களிடம் வந்த ஒரு வாடிக்கையாளருக்கு எல்லா பொருளாதார திட்டச் சேவைகளையும் நீங்களே செய்யுங்கள். நீங்கள் விற்பதைத் தவிர மற்றவற்றை நேரடியாக நீங்கள் செய்யக்கூடாது. அவற்றைச் செய்பவர்களை நியமித்து சேவையை நீங்களே வழங்குங்கள்.

7. நேர்மையாக வெளிப்படையாக உண்மையை மட்டும் சொல்லுங்கள். பொய் சொல்வது கூடவே கூடாது.

8. நம்பிக்கை இருந்தால், நீங்கள் தைரியமாக உண்மை சொல்லலாம்.

9. கால தாமதம் - கூடவே கூடாது.

10. தைரியமாக வாடிக்கையாளரிடம் சிபாரிசு கேளுங்கள். (சிபாரிசு வாங்காமல் ஒரு விற்பனையாளரும் முன்னணிக்கு செல்வதும் இல்லை அங்கு நிலைப்பதும் இல்லை)

11. உங்கள் வணிகத்தில் மற்ற சேவைகளைச் உங்கள் ஊழியர் மூலம் செய்யுங்கள். நீங்கள் விற்பதில் மட்டும் கவனம் செலுத்தவேண்டும். அதே நேரம் சேவைகள் தடை பெறாமல் வாடிக்கையாளருக்கு கிடைக்க வேண்டும்.

12. உங்கள் வாடிக்கையாளர் எதிர்பார்க்கும் முன்னரே அதை செய்துவிடுங்கள். அவர் உங்களிடம் கேட்கும் நிலை உருவாகவே கூடாது.

என்ன இந்த பனிரெண்டும் முத்துக்கள் தானே..!