Powered By Blogger

Jun 30, 2015

கோயம்புத்தூரின் பல இடங்களின் பெயர் எப்படி வந்தது என்ற சுவாரசியமான தகவல்களை காண்போம்.

கோயம்புத்தூரின் பல இடங்களின் பெயர் எப்படி வந்தது என்ற சுவாரசியமான தகவல்களை காண்போம்.

ஒப்பணக்கார வீதி :

விஜயநகர பேரரசில் சேனைகளில் வேலை பார்த்த பலிஜா சமூகத்தினர் பணம் ஒப்புவிக்கும் ( பணம் பட்டுவாடா) பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.அவர்கள்தான் இந்த பெயருக்கு காரணமான ஒப்பணக்காரனர்கள். பணத்தை ஒப்புவிக்கும் பலிஜா சமூகத்தினர் குடியேறியதால் ஒப்பணக்கார வீதி என்ற பெயர் வந்தது.

R.S புறம்:

1903ல் கோவையில் வேகமாகப் பரவிய பிளேக் நோயால் ஏரளமான உயிர்பலிகள் நிகழ்தன. எண்ணற்றோர் தங்கள் இருப்பிடங்களை காலி செய்து இடம் மாறினர்.மேலும்,மக்கள் நெருக்கம் மிகுந்த நகரில் சுகாதாரக் குறைபாடுகள் அதிகம் இருந்தது.எனவே நகரை விரிவுபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது.அப்போது மேட்டுபாளையம் ரோடு மற்றும் தடாகம் ரோடுக்கு இடையே இருந்த பல நூறு ஏக்கர் நிலத்தை வாங்கிய நகரசபை நிர்வாகம் அதை மனைகளாகப் பிரித்தது.பின் அப்பகுதிக்கு கோவை நகராட்சி மன்றத் தலைவராக இருந்த இரத்தினசபாபதி முதலியாரின் பெயர் வைக் கபட்டது.ரத்தின சபாபதிபுரம் என்னும் பெயர் சுருங்கி ஆர்.எஸ்.புறம் என்று ஆயிற்று.

சபர்பன் ஸ்கூல்:

பிளேக் நோய் காரணமாக நகரம் விரிவாக்கப்பட்டபோது ஆர்.எஸ்.புறம்,கெம்பட்டி காலனி,தேவாங்கப் பேட்டை உள்ளிட்ட புற நகரங்கள் உருவாக்கப் பட்டன.அந்த நாளில் பிராமணர்களுக்காக உருவாகப்பட்ட ராம்நகரும் கூட ஒரு புறநகரமே. அந்த புற நகரில் ஏற்படுத்தபட்ட பள்ளி என்பதால் சப்-அர்பன் பள்ளி என்று அழைக்கபட்டது.அது மருவி சபர்பன் பள்ளியாயிற்று.

சுக்கிரவார் பேட்டை& தேவாங்க பேட்டை:

கன்னடம் மற்றும் தெலுங்கில் "சுக்கிர வராம்" என்றால் வெள்ளிக்கிழமை என்று பொருள்.கடைகள் நிறைந்த வியாபாரப் பகுதியை "பேட்டை" என்பார்கள். அன்றைய நாளில் வெள்ளிக்கிழமை தோறும் சந்தை கூடிய இடத்திருக்கு பெயர்தான் சுக்கிரவார் பேட்டை. தேவாங்க செட்டியார் அதிகம் வசித்த பகுதியில் நெசவுத் தொழிலும் புகழ் பெற்று விளங்கியதால் தேவாங்கப் பேட்டை ஆயிற்று.

டவுன்ஹால் :

விக்டோரியா ராணி பதவியேற்று 50 ஆண்டுகள் ஆனதை நினைவூட்டும் வகையில் 1887ல் கோவை நகராட்சியின் மையப்பகுதியில் நகர மண்டபம் ஓன்று கட்டப்பட்டது. 1892 இல் திறக்கப்பட்ட அந்த மண்டபம் இருந்த இடம்தான் டவுன்ஹால் என்று அழைக்கப்பட்டது.

கோட்டை மேடு :

டவுன்ஹால்க்கு பின்புறம் கோட்டை இருந்தது.பிரிட்டிஷ் மற்றும் மைசூர் படைகளுக்கு இடையே நடந்த யுத்தத்தில் சிக்கி அந்தக் கோட்டை சின்னபின்னமானது.1792 ல் திப்புவின் உத்தரவின் பேரில் இந்த கோட்டை தரைமட்டமாக்கப்பட்டது.அந்த கோட்டை இருந்த இடம்தான் இன்றைய கோட்டை மேடு.

ராஜா வீதி :

ஆசிரியர்ப் பயிற்சி பள்ளியும்,பெண்கள் மேல்நிலைப் பள்ளியும் இயங்கும் கட்டடம்தான் அன்றைய மதோராஜா மஹால்.மைசூர் அரசின் அதிகாரியான அந்த மதோராஜா,அந்த வீதியில் குடியிருந்து ஆட்சி செலுத்தியதால் அந்த வீதிக்கு ராஜாவீதி என்று பெயர்.

காட்டூர் :

அவினாசி ரோடு மேம்பாலம் முதல் வட கோவை சிந்தாமணி வரையில் முன்பொரு காலத்தில் பனங்காட்டுக் குளம் என்ற குளம் இருந்தது.நாளிடைவில் அந்த குளம் அழிய,குளமிருந்த இடத்தில் பனை மரங்கள் வளர்க்கப்பட்டன.நாளிடைவில் பனை மரங்கள் நிறைந்த காடாக மாறியதால் பனங்காட்டூர் என்றாயிற்று. நாளிடைவில் அது மருவி காட்டூர் என்றாயிற்று

D. Selvan
Chief Advisor-LIC

⭐தமிழகத்தின் பெருமை ⭐ ⚡ஈரோடு மாவட்டம் ⚡

⭐தமிழகத்தின் பெருமை ⭐

⚡ஈரோடு மாவட்டம் ⚡

����தமிழகத்திலேயே இருக்கும் பேருந்து
நிலையங்களில்  முதல் பெரிய  பேருந்துநிலையம் ஈரோடு இருக்கும் மத்திய பேருந்துநிலையம் இப்பொழுதுதான் சென்னை

��இந்தியாவிலேயே மிகவும் சுத்தமான முன்றாவது ரயில் நிலையம் எங்கள் ஈரோடு ரயில் நிலையம்.

��தொடர்ந்து 10 ஆண்டுகளாக எஙகள் மாவட்டம் மாநில அளவில் ( state rank )  பெற்று தமிழ்நாட்டில் சாதனை செய்துள்ளோம்.

����உலகிலேயே மகாத்மா காந்தியடிகளுக்கு உயிருடன் இருக்கும் போதே சிலை வைத்து பெருமை செய்த முதல் மாவட்டம். எங்கள் ஈரோடு

��தென் இந்தியாவில் அதிக நிலபரப்பு கொன்ட மாவட்டம் எங்கள் ஈரோடு (2010 வரை)

��மேற்கு தமிழ்நாட்டின் தலைநகரமாம் பவானி
இருப்பதும் எங்கள் ஈரோடுதான்

��நிலபரப்பில் முன்று பக்கமும் மலைகளால் சூழப்பட்ட மாபெரும் நகரம் மற்றும் தென் இந்தியாவில் மத்தியில் அமைந்துள்ளது எங்கள்
ஈரோடு( south india's centre point )

��இரண்டு ஆறுகள் சேரும் கூடுதுறையும்
( காவிரி+ பவானி)
முன்று ஆறுகள் சேறும் கொடுமுடியும்
(காவரி+ அமராவதி+நொய்யல்)
அமைய பெற்றது எங்கள் மாநகரம்

இந்தியாவிலேயே மலேசிய முருகன்  சிலை எங்கள் ஊரில்தான் உள்ளது.
(இடம் : காசிபாளையம் முருகன் கோவில்)

����பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார், கனித மேதை ராமனுஜம்,திரன் சின்னமலை,நடிகை கே.பி.சுந்தராம்பாள் , இந்தியாவின் தலைமை நிதிபதி தற்போது கேரள மாநில கவர்னர் பி.சதாசிவம் பிறந்த ஊரும் எங்கள் ஈரோடு.

����மகாகவி பாரதியார் கடைசி சொற்பொழிவும் எங்கள் மண்னில்தான் அமைந்து

✏��எஙகள் ஊரில் நடக்கும் ஈரோடு புத்தக திருவிழாவிற்கு அப்துல்கலாம் ( முன்று முறை),
சாலமன் பாப்பையா, நடிகர் சிவகுமார், இளையராஜா, கவிஞர் வைரமுத்து, கோபிநாத்,  போன்றவர்கள்  புத்தகங்கள் வாங்கி சென்றூள்ளனர்.

��������������இந்தியாவிலேயே மிக பெரிய ஒருங்கினைந்த ஜவுளி வர்த்தக வளாகம் ஈரோட்டில் உள்ளது.
( TEXVALLEY, Erode textile mall )

��������������பல பெருமை வாய்ந்த கல்வி நிறுவனங்கள் எங்கள் ஊரில் ஊள்ளது.
எ டு க
Institute of road & transport technology
kongu institutions
Chikkaya nayakkar college
Sengunthar institutions
Surya engineering college

������தென்இந்தியாவில் அதிக கட்டுமான நிறுவனங்கள் உள்ள மாவட்டம் ஈரோடு

��தமிழகத்தின் மிக பழமையான & பெரிய பெருந்துறை சிப்காட் தொழிற்பூங்கா  எங்கள் ஊரின் மற்றோரு பெருமை

����1980 முதல் தற்போது வரை ஈரோடு சிறந்த படபிடிப்பு தளமாக விளங்கியுள்ளது.
எ டு க :
சின்னதம்பி
மசாலா கபே ஹோட்டல்
நாடோடிகள்
முன்டாசுபட்டி
இன்னும் பல பல !!

����உலக அளவில் முதலீடு செய்யும் பல நிறுவனங்கள் எங்கள் ஈரோட்டில் தோன்றியவை.
எ டு க:
��சக்தி மசாலா
��அக்னி இரும்பு கம்பிகள்
��MCR வேஷ்டிகள் சட்டைகள்
��Skm மாட்டு தீவனம் & முட்டைகள்
��URC Constructions india's pvt ltd
��RPP Constructions india's pvt ltd
இன்னும் பல பல!!

����எங்கள் ஊரில் நடக்கும்  பன்னாரி மாரியம்மன் கோவில் குன்டம்  திருவிழாவிற்கு கர்நாடக, கேரள மாநிலத்தில் இருந்து பல பேர் குவிகின்றனர்.

����������������தமிழகத்தின் பச்சை இதயமாம்
சத்தியமங்கலம் அமைய பெற்றது எங்கள் ஈரோடு . 

மஞ்சளை உலகிற்கு கொடுப்பதும் நாங்கள் தான்

" ஈரோடு"

இந்திய ராணுவத்தை பற்றிய வியக்கவைக்கும் தகவல்கள்!!!

இந்திய ராணுவத்தை பற்றிய வியக்கவைக்கும்
தகவல்கள்!!!

1)  உயரமான போர்களத்தை கட்டுபாட்டில்
வைத்திருக்கிறது::

உலகிலேயே உயரமான போர்க்களம் என்று கருதப்படும் சியாச்சென் கிளேசியர் (Siachen Glacier) இந்திய இராணுவத்தின்
கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. இதன் உயரம்
கடல் மட்டத்தில் இருந்து 5,000 மீட்டர்களுக்கும்
மேலாகும். கடந்த 1984 ஆம் ஆண்டு முதல்
இந்தியா பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இங்கு
போரிட்டதுக் குறிப்பிடத்தக்கது.

2)  தன்னார்வம் அதிகம்::

உலகிலேயே அதிகமான தன்னார்வ வீரர்கள் கொண்ட ராணுவப்படை இந்தியாவுடையது என்பது
பெருமைக்குரிய விஷயமாகும்.

3)  மலை பகுதிகளிலும், உயரமான பகுதிகளிலும்
செயல்படுவதில் நமது இந்திய ராணுவ
வீரர்கள் உலகளவில் சிறந்து விளங்குகின்றனர்.

4)  கடந்த 2013 ஆம் ஆண்டு உலகிலேயே
மிகப்பெரிய மீட்புப் பணியாகக் கருதப்படும்
ஆப்ரேஷன் ராஹத்தை வெற்றிகரமாக நடத்தி
முடித்தவர்கள் நமது இந்திய ராணுவப்படை வீரர்கள்.
இது, உத்தரகாண்ட் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக் காரணமாக நடந்தது.

5)  கேரளத்தில் இருக்கும் எழிமலாக் கப்பற்படை
(Ezhimala Naval Academy) தான் இதன் பிரிவில்
ஆசியாவிலேயே பெரியது ஆகும்.

6)  உலகிலேயே மிகவும் பழையப் படையாக கருதப்படும் மூன்றில் ஒன்றான குதிரைப்படை இன்னமும் நமது இந்திய ராணுவத்தில் செயல்பட்டு வருவது பெருமைக்குரிய விஷயமாகும்.

7)  இந்திய ராணுவம் கட்டமைத்த பெய்லி
பாலம் தான் உலகிலேயே ராணுவ வீரர்களால்
மிக உயரத்தில் கட்டப்பட்ட பாலம் ஆகும். இது
கடந்த 1982ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்
கட்டமைக்கப்பட்டது ஆகும்.

9) கடந்த 1971ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போரில் 93,000 எதிர் நாட்டு (பாகிஸ்தான்) வீரர்கள் சரணடைன்ததே, ஓர் போரில் சரணடைந்த வீரர்களின் அதிகப்படியான எண்ணிக்கை ஆகும்.

10) உலகிலேயே பெரிய ராணுவ பிரிவுகளில்
இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது. முதல்
இரண்டு இடங்களில் முறையே அமெரிக்காவும்,
சீனாவும் இருக்கின்றன. நமது நாட்டில் 13,25,000
பட்டாளங்களும், 9,60,000 ரிசர்வ் படைகளும்
இருக்கின்றன.

11) அக்னி ஏவுகணை உலகிலேயே சிறந்த ஏவுகணைகளில் இந்தியாவின் அக்னி எவுகனைவும்
ஒன்றென்பதுக் குறிப்பிடத்தக்கது.

12) வேகமான ஏவுகணை ப்ராஹ் மோஸ் 2
(BrahMos-2) என்ற நமது ஏவுகணை தான் உலகிலேயே வேகமான ஹைப்பர்சோனிக் ஏவுகணை ஆகும்.

13) இந்திய ராணுவப்படை கடந்த 1776ஆம் ஆண்டு
கிழக்கிந்திய நிறுவனத்தினால் கொல்கத்தாவில் துவங்கப்பட்டது.

14) உலக அமைதிகாக ஐ.நாவிற்கு பங்களிப்பு தரும்
பட்டாளங்களில் இந்திய பட்டாளம் தான் பெரியது என்பது பெருமைக்குரியது.

"வந்தே மாதரம்"

Jun 2, 2015

WHY INSURANCE










என் அன்பு நண்பர்களுக்கு........

என் அன்பு நண்பர்களுக்கு........
 
என் சகோதரன் என் சட்டையை
பயன்படுத்தினால் கூட
எனக்கு பிடிக்காது. ஆனால் நட்பிலோ
எச்சில் செய்த உணவு கூட இனிக்கிறது.

காதலியோடு பேசுகையில் கூட
முகமூடி அணிந்து பேசுகிறேன்.
ஆனால் என் நட்பின் முன்னாலோ
எவ்வித முகமூடியுமின்றி
நான் நானே இயல்பாய் இருக்கிறேன்.

கடற்கரையில் ஒன்றாய் குளித்த நாட்கள்..
பேருந்தில் செய்த குறும்புகள்...
மொட்டை மாடி அரட்டைகள்..
பள்ளி மைதான விளையாட்டுகள்...
என அத்தனை நினைவுகளும்
இன்னமும் பசுமையாய் இதயத்தில்....

நண்பனின் கை அருகில் இருக்கையில்
நம்பிக்கையும் கூடவே...

வீட்டில் பெற்றோர் இல்லா நேரங்கள் சொர்க்கம்..
நண்பர்கள் மட்டுமே சுற்றி இருந்து,
ஒருவர் மீது ஒருவர் படுத்து,
அடித்து விளையாடி,
கண்ட கண்ட சேனல் மாற்றி,
பக்கத்து வீட்டில் திட்டு வாங்கி,
சமைக்க தெரியாமல் சமைத்து,
காஃபி என்ற பெயரில் ஏதோ அருந்தி,
என சந்தோஷங்களோடே
வாழ்ந்த காலங்கள் வரம்..

இன்று வித விதமான பைக்கில்
பயணம் செய்தாலும் கிடைப்பதில்லை
நண்பனின் பின்னால் அமர்ந்து
சைக்கிளில் டபுள்ஸ் போன சுகம்..

ஒன்றாய் அமர்ந்து படிக்கிறோம்
என்ற பெயரில் பாடத்தை தவிர
அனைத்தை பற்றியும்
பேசிக்கொண்டு இருப்போம்..

அப்பாவிற்கு மட்டுமே
கடிதம் வரும் காலங்களில்
எனக்கும் கடிதம் வந்திருக்கிறது என
பெருமைப்பட்ட நேரங்கள்..
ஆம் நண்பனிடமிருந்து வந்த
ஒற்றை கிரீட்டிங் கொடுத்த மகிழ்ச்சி..

பள்ளி நாட்களில் உணவு கொண்டு வராத
சமயங்களில் நண்பர்களிடமிருந்து
பகிர்ந்து உணவு உண்ட சமயங்கள்
மீண்டும் எப்போது கிடைக்கும்?

நண்பர்களிடம் சண்டை போட்டு
பேசாமல் இருந்த காலங்களை நினைத்து
பார்க்கையில் இப்போது சிரிப்பாய் இருக்கிறது.

பள்ளி முடிந்ததும்
சீருடை தொலைக்கிறோம்.
வளரத்தொடங்கியதும்
நட்பை தொலைக்கிறோம்.

எத்தனை எத்தனை சந்தோஷமான
தருணங்கள் நட்பில்..
அத்தனையும் தொலைக்கிறோம்
இயந்திரத்தனமான வாழ்க்கையின் இடையே...

வாழ்க்கை வேகத்தில் நண்பர்கள்
எங்கெங்கோ சிதறி போகிறோம்.
என்றேனும் ஒரு நாள்
நாம் அனைவரும் ஒன்றாய் எடுத்து கொண்ட
புகைப்படத்தை பார்க்க நேர்கையில்
விழியின் ஓரமாய் கசியும் கண்ணீருக்கு
என்ன பதில் சொல்ல போகிறோம்?

கடவுள்
சங்கடத்தை அனுபவிக்க
காதலை அனுப்புகிறார்...
சந்தோஷத்தை அனுபவிக்க
நட்பை அனுப்புகிறார்...

என் இதயத்தின் அத்தனை
அறைகளிலும் நிறைந்து இருக்கும்
என் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.......

D.SELVAN
Chief Advisor-LIC

சிறப்பான வாழ்க்கைக்கு 20 சிந்தனைகள்

சிறப்பான வாழ்க்கைக்கு 20 சிந்தனைகள்..!!

1. நாணயமாக இருப்பவனிடம் எப்போதும் குழந்தைத்தனம் காணப்படும்

2. உன் தகுதி பிறருக்குத் தெரியவேண்டுமானால் பிறர் தகுதியை நீ தெரிந்துகொள்.

3. திருட்டுப் பொருளை விலைக்கு வாங்குபவன் திருடனை விட மோசமானவன்.

4. தூக்கம் எப்போது குறைய ஆரம்பிக்கிறதோ அப்போதுதான் வாழ்க்கை ஆரம்பிக்கிறது.

5. அறிவுக்காக செய்யப்படும் முதலீடு எப்போதுமே கொழுத்த வட்டியையே தரும்.

6. நல்ல மனைவியை விட உயர்ந்த வரமும் இல்லை. கெட்ட மனைவியை விட மோசமான சாபமும் இல்லை.

7. முதலில் மனிதன் மதுவைக் குடிக்கிறான். பின்பு மது மனிதனை குடிக்கிறது.

8. ஆயிரம் பேர் சேர்ந்து ஒரு தொழிற்சாலையைக் கட்டி விடலாம். ஒரு வீட்டைக் கட்ட ஒழுக்கமான ஒரு பெண் வேண்டும்.

9. இரண்டு கால் உள்ள எல்லோரும் நடந்து விடலாம். ஆனால் இரண்டு கை உள்ள எல்லோருமே எழுதிவிட முடியாது.

10. உழைப்பு உடலை வலிமையாக்கும். துன்பங்களே மனதை வலிமையாக்கும்.

11.ஒருவன் தான் செய்த தவறை ஒத்துக்கொள்ள வெட்கப்படக் கூடாது. ஒப்புக்கொள்வதன் பொருள் என்ன? அவன் நேற்றைவிட இன்று அதிக அறிவு
பெற்று விட்டான் என்பதே.

12. வாழ்க்கை சுவையானது. உங்கள் அறியாமையினால் அதை நரகமாக்கி விடாதீர்கள்.

13. பிறரைப் பாராட்டுங்கள். பாராட்டு கிடைக்கும். பிறரை மதியுங்கள். மதிப்புக் கிடைக்கும். அன்பு செலுத்துங்கள். அன்பு தேடி வரும். இவை ஒற்றைவழிப் பாதைகள் அல்ல. இரட்டை வழிப் பாதைகள். அன்பில் வணிகத்திற்கு இடமில்லை. வணிகத்தில் அன்புக்கு இடமில்லை.

14. தனக்கென வாழ்ந்தவன் தாழ்ந்தவன் ஆகிறான். பிறருக்கென வாழ்பவன் பெருவாழ்வு வாழ்கிறான். அடக்கம் அணிகலன் மட்டுமல்ல. அறத்தின் காவலன்.

15. சொற்கள் நம் சிந்தனையின் ஆடைகள். அவற்றைக் கந்தல்களாகவும்,கிழிசல்களாகவும், அழுக்காகவும் உடுத்தக் கூடாது.

16. சோம்பேறிக்கு எல்லாமே கடினமாகத் தோன்றும். ஊக்கமுள்ளவனுக்கு எல்லாமே எளிதாகத் தோன்றும்.

17. எந்தவிதக் கொள்கையும், நோக்கமும் இல்லாத வாழ்க்கை திசைகாட்டும் கருவி இல்லாத கப்பல் நடுக்கடலில் நிற்பதற்கு ஒப்பாகும்.

18.எந்த மனிதன் தீவிரமாகவும், திடமாகவும், சிந்திக்கிறானோ அந்த சிந்தனைகளின் வளர்ச்சி கலையாகும். அவ்வாறு சிந்திக்கிறவனே கலைஞன் ஆவான்.

19. பல அறிஞர்களுடன் பழகினால் நீ அறிவாளி ஆவாய். ஆனால் பல பணக்காரர்களுடன் பழகினாலும் பணக்காரன் ஆக மாட்டாய்.

20. இன்பத்தின் இரகசியம் எதில் அடங்கியிருக்கிறது தெரியுமா? நீ விரும்பியதைச் செய்வதில் அல்ல. நீ செய்வதை விரும்புவதில்தான்

Free call

இந்த செய்தியை அதிகம் ஷேர் செய்யவும்...!
சில நேரங்களில் முக்கியமான நபர்களுக்கு நாம் போன் செய்ய வேண்டியிருக்கும் ஆனால் நமது போனில் பேலன்ஸ் இருக்காது. ஆள்பேர் இல்லாத இடத்தில் மாட்டிக் கொண்டிருப்போம்.இன்டர்நெட் வசதியும் இருக்காது.. போன் செய்ய முடியாமல் போய், நமக்கு அதனால் இழப்பு ஏற்படும் இல்லை எனில் யாரிடமாவது திட்டுவாங்குவோம்...
இனி அந்த நிலை ஏற்படாது. பெங்களுரை சேர்ந்த 3 மாணவர்கள் சேர்ந்து FREEKALL என்ற சேவை அறிமுகம் செய்துள்ளனர்.
இதன் மூலம் நமது போனிலிருந்தே இலவசமாக கால் செய்து கொள்ளலாம்.
இதற்கு இன்டர்நெட் தேவையில்லை. சாதாரண black & white Nokia போன் போதும்..
ஐபோன் (iphone) முதல் சாதாரண சைனா போன் வரை அனைத்திலும் இது வேலை செய்யும்.
ஆச்சரியமாக உள்ளதா ஆம் இது உண்மை தான்!. இந்த சேவையை பயன்படுத்தி எப்படி இலவசமாக போன் செய்வது என்பதை பார்ப்போம்.
முதலில் நாம் நமது போனில் இருந்து ”1800 108 4444” என்ற Toll Free நம்பருக்கு போன் செய்ய வேண்டும்(இந்தியஎண்ணிலிருந்து).இதற்கு நமது போனில் பேலன்ஸ் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அப்படியே பேலன்ஸ் இருந்தாலும் பணம் எடுக்கப்படமாட்டாது.
நாம் இந்த நம்பருக்கு கால் செய்ததும் கால் தானாக கட் ஆகிவிடும். கட் ஆன அடுத்த நொடியில் ”8067915000” என்ற எண்ணில் இருந்து நமது போனிற்கு (mobile) கால் வரும். அதை நாம் attend செய்து நாம் யாருக்கு போன் செய்ய வேண்டுமோ அவர்களது நம்பரை (phone number) dial செய்து அவர்களுடன் இலவசமாக பேசிக் கொல்லாம்.
வித்தியாசமான சேவைாக இருக்கின்றதல்லவா ? ஆம் இந்த சேவையை கடந்த மார்ச் மாதம் தான் பெங்களுர் மாணவர்கள் ஆரம்பித்துள்ளார்கள்..
இப்பொழுதே பயன்படுத்தி பயன் அடையுங்கள் உங்கள் நண்பர்களுக்கும்இந்த தகவலை share செய்யுங்கள். ்
இந்த செய்தியை அதிகம் ஷேர் செய்யவும்...!

“சீ மிருகமே!” என்று மனிதனைத் திட்டாதே

ஐந்து பெரிது, ஆறு சிறிது – கவிஞர் வைரமுத்து

“சீ மிருகமே!”
என்று
மனிதனைத் திட்டாதே
மனிதனே

எந்த விலங்கும்
இரைப்பைக்கு மேலே
இன்னொரு வயிறு வளர்ப்பதில்லை

எங்கேனும்
தொப்பைக் கிளியோ
தொப்பை முயலோ
பார்த்ததுண்டா ?
**
எந்த விலங்குக்கும்
சர்க்கரை வியாதியில்லை தெரியுமோ?
**
இன்னொன்று :
பறவைக்கு வேர்ப்பதில்லை
**
எந்த பறவையும்
கூடுகட்டி
வாடகைக்கு விடுவதில்லை
**
எந்த விலங்கும்
தேவையற்ற நிலம்
திருடுவதில்லை
**
கவனி மனிதனே

கூட்டு வாழ்க்கை இன்னும்
குலையாதிருப்பது
காட்டுக்குள்தான்
**
அறிந்தால்
ஆச்சரியம் கொள்வாய்
உடம்பை உடம்புக்குள் புதைக்கும்
தொழு நோய்
விலங்குகளுக்கில்லை
**
மனிதா
இதை
மனங்கொள்

கர்ப்பவாசனை
கண்டு கொண்டால்
காளை பசுவைச்
சேர்வதில்லை
**
ஒருவனுக்கொருத்தி
உனக்கு வார்த்தை
புறாவுக்கு வாழ்க்கை

எந்த புறாவும்
தன் ஜோடியன்றி
பிறஜோடி தொடுவதில்லை
**
பூகம்பம் வருகுது எனில்
அலைபாயும் விலங்குகள்

அடிவயிற்றில் சிறகடிக்கும்
பறவைகள்

இப்போது சொல்
அறிவில்
ஆறு பெரிதா ?
ஐந்து பெரிதா ?
**
மரணம் நிஜம்
மரணம் வாழ்வின் பரிசு

மாண்டால் -
மானின் தோல் ஆசனம்
மயிலின் தோஅகை விசிறி

யானையின் பல் அலங்காரம்
ஒட்டகத்தின் எலும்பு ஆபாரணம்
**
நீ மாண்டால் …

சிலரை
நெருப்பே நிராகரிக்கும்
என்பதால்தானே
புதைக்கவே பழகினோம்
**
“சீ மிருகமே !”
என்று
மனிதனைத் திட்டாதே
மனிதனே
**
கொஞ்சம் பொறு
காட்டுக்குள் என்ன சத்தம் …

ஏதோ ஒரு மிருகம்
இன்னொரு மிருகத்தை
ஏசுகிறது
” சீ மனிதனே !”
**

-கவிஞர் வைரமுத்து

மனிதன் இறந்து 36 மணி நேரத்தில் நடப்பது என்ன ?

மனிதன் இறந்து 36 மணி நேரத்தில் நடப்பது என்ன ?
==============================================

மனிதன் இறந்து 36 மணி நேரத்தில் ஈக்கள் முட்டை இடுகின்றன உடலில்

60 மணி நேரத்தில் லார்வாக்கள் தோன்றுகின்றன.

3 நாட்களில் நகங்கள் கழன்று விடுகின்றன.

4 நாட்களில் ஈறுகள் தொலைகின்றன.

5 நாட்களில் திரவமாய் உருகுகிறது மூளை.

6 நாட்களில் வாயுக்களால் வெடிக்கிறது வயிறு.

2 மாதங்களில் உடல் உருகி திரவமாகின்றது.

இறந்த பிறகு இப்படி மனிதனின் உடல் பாகங்கள் சிதைந்து போக,
எதற்கு இந்த தலைகணம், கோபம், ஆணவம், ஆடம்பரம், கொலை வெறி,கௌரவம், ஜாதி மத சண்டைகள் …???
மனித பிறப்பு மிக .அறியப் பிறப்பு ..அதை வாழும் காலத்தில் அனைவரிடமும் அன்புடனும் பண்புடனும் ஆதரவுடனும் நடந்து கொள்வோமே.....

பணம் என்றால் என்ன...? - கற்றுக்கொடுங்கள் குழந்தைகளுக்கு

பணம் என்றால் என்ன...? - கற்றுக்கொடுங்கள் குழந்தைகளுக்கு!

அப்பாக்கள் பணி ஓய்வு பெற்றபோது வாங்கிய சம்பளத் தைவிட இருமடங்கு, ஆரம்ப சம்பளமாகப் பெறும் தலை முறை இது. ஆனாலும், பெற்றோர்கள் அளவுக்கு அவர்க ளால் குடும்பப் பொருளாதாரத்தை சாமர்த்தியமாக, சமர்த் தாக நிர்வகிக்க முடிவதில்லை.

மாதம் லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கினாலும், பல இளம் தம்பதிகளுக்கு 30ம் தேதி அக்கவுண்ட் பேலன்ஸ் ‘நில்’(nil) என்பதே இன்றைய நிலைமை. காரணம் சிக்கனம், சேமிப்பு பழக்கங்களில் இருந்து அவர்கள் வெகுதூரம் சென்றுவிட்டதே!

உங்கள் வீட்டு குழந்தைகளும், நாளை மாதம் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் நிலை வரலாம். அப்போதும் அவர்களின் அக்கவுண்ட் பேலன்ஸ் 30ம் தேதி ‘நில்’ என்றில்லாமல் இருக்க, இப்போதிலிருந்தே அவர்களுக்குப் பணம் பற்றிய பாடங்களை புரிய வைப்பது அவசியம்.

அதை முன்னெடுப்பதற்கான முக்கிய ஐந்து ஆலோசனைகள் இங்கே...

பொறுமை... பணம்!

குழந்தைகள் கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுக்கும் வசதி உங்களுக்கு இருக்கலாம். ஆனாலும், அவர்கள் ஒரு பொருளை வேண்டும் எனக் கேட்கும்போது, ‘நிச்சயம் அடுத்த வாரம் வாங்கலாம்’, ‘எக்ஸாம் லீவ்ல அதை உனக்கு வாங்கித் தர்றேன்’ என்று அந்தப் பொருளுக்காக அவர்களை காத்திருக்க வைத்து, பின் வாங்கிக் கொடுங்கள்.

அப்போதுதான் அந்தப் பொருளின் மதிப்பும், பணத்தின் மதிப்பும் அவர்களுக்குப் புரியும். இன்றிரவு கேட்கும் ஸ்கேட்டிங் ஸ்கூட்டி, இரண்டு நாட்களில் அவர்களுக்கு கிடைக்கும் என்றால், மூவாயிரம் ரூபாய் மதிப்புள்ள அந்த விளையாட்டுப் பொருள் அவர்களுக்கு மலிவாகவே தோன்றும். அதை பத்திரமாக வைத்துக்கொள்ளும் பொறுப்பும் வராது.
அத்தியாவசியமா, ஆடம்பரமா..?

அத்தியாவசியத்திற்கும், ஆடம்பரத்திற்கும் உள்ள வித்தியாசத்தை அவர்களுக்குப் புரிய வையுங்கள். வேக்ஸ் கிரையான்ஸ் வாங்கித் தரச்சொல்லி உங்களை கடைக்குச் கூட்டிச் சென்று, ‘அப்படியே வாட்டர் கலரும், கார் பொம்மையும் வாங்கிக்கறேன்’ என்று கேட்டால், தலையாட்டாதீர்கள். ஒரே சமயத்தில் பல பொருட்களின் மேல் ஆசை கொள்வது குழந்தைகளின் இயல்பு. இருந்தாலும், அந்தப் பொருட்களில் முதன்மைத் தேவை எது என்பதை அவர்களைப் பரிசீலிக்கச் சொல்லி, ஒன்றை மட்டும் தேர்ந்தெடுக்கச் சொல்லுங்கள்.

பின்நாளிலும், பார்ப்பதை எல்லாம் வாங்கும் மனோபாவத்திற்கு இந்தப் பழக்கம் அணை போடும். பல பொருட்களுக்கு மத்தியில் சிறந்தது மற்றும் தேவையானதைத் தேர்ந்தெடுத்து வாங்கும் திறனையும் அவர்களுக்கு வளர்க்கும்.

பட்ஜெட் கற்றுக் கொடுங்கள்!

வீட்டுக்கான மாத பட்ஜெட் போடும்போதும், அது தொடர்பான விஷயங்களைப் பேசும்போதும் குழந்தை களையும் அங்கு இருக்கச் செய்யுங்கள்.  செலவைக் குறைக்க அவர்களை ஐடியா சொல்லச் சொல்லுங்கள். அவர்களுக்கு வாங்கிக் கொடுக்கும் ஒவ்வொரு பொருளின் ‘பிரைஸ் டாக்’ஐயும் அவர்களுக்குக்  காட்டுங் கள்.

அவர்களுக்கு வாங்கிய புது ஸ்போர்ட்ஸ் ஷூவின் விலையானது, ஒரு மூடை அரிசி/இரண்டு பெட் ஸ்ப்ரெட்கள்/ஐந்து லன்ச் பாக்ஸ்கள்/ஆயிரம் சாக்லெட்டுகள் வாங்கும் விலைக்குச் சமமானது என, ஒரு பொருளின் விலையோடு, மற்றொரு பொருளின் விலையை ஒப்பிடக் கற்றுக்கொடுங்கள். இது, பொருட்களின்விலை பற்றிய தெளிவான புரிதலை உண்டு பண்ணும்.

குடும்பத்தின் பொருளாதார நிலைமையை குழந்தைகள் அறிய வேண்டும்! தன் நண்பன், தோழி வைத்திருக்கும் விலை உயர்ந்த ஒரு பொருளைக் குறிப்பிட்டு, அது தனக் கும் வேண்டும் என்று உங்கள் குழந்தைகள் கேட்கலாம். ‘என் புள்ளை கேட்டதை எப்பாடுபட்டாவது வாங்கிக் கொ டுப்பேன்’ என்று எமோஷனலாக இருக்கத் தேவையில் லை. அது உங்கள் பட்ஜெட்டிற்கு அடக்கமானது இல்லை எனில், அதை வெளிப்படையாக அவர்களிடம் கூறிவிடுங் கள். அப்போதுதான், குடும்பத்தின் பொருளாதாரத்திற்கு உட்பட்டு நடக்கும் பொறுப்பு அவர்களுக்குக் கிடைக்கும்.

நாளடைவில், ‘அம்மா என் ஃப்ரெண்ட் வீட்டுல ஹோம் தியேட்டர் இருக்காம். நம்ம வீட்டுல அதெல்லாம் முடி யாதுனு எனக்குத் தெரியும். இந்தப் பழைய டிவியை மாத்தும் போது எல்சிடி டிவியா வாங்கிக்கலாமா ப்ளீஸ்..?’ என்று பிராக்டிக்கலாக அட்ஜஸ்ட் செய்துகொள்ளும் பாசிட்டிவ் ஆட்டிட்யூட் அவர்களுக்கு வளரும்.

பாக்கெட் மணி கொடுங்கள்!

குழந்தைகளுக்குப் பாக்கெட் மணி கொடுப்பது தவறு என்று சிலர் நினைக்கக்கூடும். உண்மையில் அது மிகச் சிறந்த சிக்கனப் பாடம். ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி அந்த மாதம் முழுவதற்குமான பாக்கெட் மணியை அவர்களிடம் மொத்தமாகக் கொடுத்துவிடுங்கள். 30ம் தேதி வரை அது தவிர்த்து ஒரு ரூபாய் கூட கொடுக்காதீர்கள். வரவுக்குள் செலவழிக்கப் பழக்க, அது சிறந்த வாய்ப்பாக அமையும்; ‘மாதக் கடைசி வரை இந்தக் காசுதான் நமக்கு’ என்ற கடிவாளம், அவர்களை அனாவசியமாகச் செலவழிக்க விடாது.

சேமிக்கக் கற்றுக் கொடுங்கள்!

குழந்தைகளுக்கு சேமிப்புப் பழக்கத்தை கற்றுக் கொடுங்கள். உண்டியல் முதல், போஸ்ட் ஆஃபீஸ் ஆர்.டி அக்கவுண்ட், வங்கிகளில் ஜூனியர் அக்கவுண்ட் என அவர்கள் சேமிப்பதற்கான வழிகளை ஏற்படுத்திக் கொடுங்கள். அவர்களின் சேமிப்புத் தொகையில், அவர்களுக்குத் தேவைப்படும் ஒரு முக்கியமான பொருளை வாங்கிக் கொடுங்கள்.
மீண்டும் சேமிப்பைத் தொடர வைத்து, அந்த சேமிப்புப் பணத்தில், அடுத்து அவர்களுக்காக அவர்களே வாங்கிக்கொள்ளப் போகும் பொருள் பற்றி அவ்வப்போது பேசி ஆர்வத்தை அதிகப்படுத்துங்கள். சேமிப்பின் ருசியை அவர்களை அறியவைத்துவிட்டால், அது ஆயுளுக்கும் தொடரும்.

சில வருடங்களுக்கு முன் ஏற்பட்ட உலகப் பொருளாதார மந்த நிலையால் அமெரிக்கா உட்பட பல நாடுகளும் ஆட்டம் கண்டபோதும் இந்தியா தலை தப்பிக்கக் காரணம், நம் மக்களின் சேமிப்புப் பழக்கமே! அதைப் பரிசளிப்போம் அடுத்த தலைமுறைக்கும்!

��������������