Powered By Blogger

Jun 2, 2015

படித்ததில்  பிடித்தது

படித்ததில்  பிடித்தது

உங்களிடம் எது கொடுக்கப்பட்டாலும்  அதிலிருந்து அழகான ஒன்றை உங்களால் உருவாக்க முடிந்தால் அதுதான் புத்திசாலித்தனம்.

எவரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள். அப்படி எதிர்பார்த்தால் இறுதிவரை எதையும் சாதிக்காமல் போய்விடுவீர்கள்.

தோல்விைய ஒப்புக்கொள்ள தயங்காதே, தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.

மறக்க வேண்டியவைகளை நினைத்து வருந்துவதும்,நினைக்க வேண்டியவைகளை மறந்துவிடுவதும்தான் துன்பங்கள் அனைத்திற்கும்  காரணம்.

தேவையில்லாதவர்களிடம் உண்மைகளை சொல்லாதீர்கள், அவசியமானவர்களிடம் பொய்களைச் சொல்லாதீர்கள் . இரண்டுமே உங்களை காயப்படுத்தும்.

ஒரு தாய் தன் பிள்ளைகளை பெறுவதற்காக அழலாம், பெற்றதற்காக அழக்கூடாது.

நம்பிக்கை என்பது ஒரு நாள் உதிர்ந்துவிடும் பூவாக இருக்கக்கூடாது. மேலும் மேலும் மலரை உருவாக்கும் செடியாக இருக்கவேண்டும்.

ஓடும்போது விழுந்துவிடுவோம் என்று நினைப்பவனைவிட விழுந்தாலும் எழுந்து ஓடுவோம் என்று நினைப்பவனே ஜெயிப்பான்.

முடியாது என்று நீங்கள் சொல்வதையெல்லாம் யாரோ ஒருவன் எங்கோ செய்துகொண்டுதான் இருக்கிறான்.

ஒரு பறவை மரத்தின் கிளையில் அமரும்போது அது எந்த நேரத்திலும் முறிந்துவிடும் என்ற பயத்தில் அமருவதில்லை. ஏனென்றால் பறவை நம்புவது அந்த கிளையை அல்ல. தன் சிறகுகளை!

நட்புக்காக உயிரைத்தருவது எளிது! அதற்குத் தகுதியான நட்பு கிடைப்பது அரித.

No comments:

Post a Comment