Powered By Blogger

Jun 2, 2015

நம்ம கோவை

நம்ம கோவை

கோயம்புத்தூர் மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் முப்பதிரண்டு மாவட்டங்களில் ஒன்றாகும். பொருளாதாரத்திலும், தொழிற்றுறையிலும் முன்னேற்றமடைந்த தமிழக மாவட்டங்களில் இதுவும் ஒன்று. கோயம்புத்தூர் தமிழ் நாட்டில் சிறந்த தொழில் வளர்ச்சி அடைந்த ஒரு நகரம் ஆகும். இது தென்னிந்தியாவின் நெசவுத் தொழிலின் தலைநகரம் அல்லது தென்னிந்தியாவின் துணி உற்பத்தியின் தலைநகரம் என்றழைக்கப்படுகிறது. இந்நகரம் நொய்யலாற்றின் கரையில் அமைந்துள்ளது. தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரமான கோயம்புத்தூர் நகரம் இம்மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இது சுருக்கமாக கோவை என்று அழைக்கப்படுகிறது. தொழில் துறை வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் முக்கிய காரணமாக இருப்பது இங்கு தடையின்றிப் பெறப்படும் குடிநீரும் மின்சாரமும் ஆகும்.

பழைமை வாய்ந்த கொங்கு நாட்டின் ஒரு பகுதியாய் திகழ்ந்த இம்மாவட்டத்தில் கோசர் இன மக்கள் கோசம்புத்துர் என்னும் இடத்தை தலைமையிடமாக கொண்டு வசித்து வந்தனர். இவர்கள் வாழ்ந்த இடமான கோசம்புத்தூர் காலப்போக்கில் பெயர் மருவி கோயம்புத்தூர் என்றே அழைக்கப்படுகிறது. கோயம்புத்தூர் முற்காலச் சோழனாகிய கரிகாலனின் ஆட்சிக் காலமான இரண்டாம் அல்லது மூன்றாம் நூற்றாண்டிலிருந்தே இருந்து வந்துள்ளது[சான்று தேவை]. இதனை இராட்டிரகூடர்கள், சாளுக்கியர்கள், பாண்டியர்கள், ஹோசைளர்கள், விஜய நகரப் பேரரசு ஆகிய பேரரசுகள் ஆட்சி புரிந்துள்ளன.

பரப்பளவு 7469 கி.மீ² (வது)
மக்கள் தொகை
(2001
வருடம்
அடர்த்தி 42,71,856 (22வது)
572/கி.மீ²

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இம்மாவட்டத்தில் 42,71,856 மக்கள் வசிக்கின்றார்கள்.[1] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். கோயம்புத்தூர் மாவட்ட மக்களின் சராசரி கல்வியறிவு 77% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 85%, பெண்களின் கல்வியறிவு 69% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. இம்மாவட்ட மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

No comments:

Post a Comment