Powered By Blogger

Apr 18, 2019

*LICயின் மதிப்புமிக்க பாலிசிதார்ர்கள் அவசியம்* *தெரிந்து கொள்ளவேண்டிய,* *தவறாமல் கடைப்பிடிக்க வேண்டிய* *சில முக்கியமான தகவல்கள்.*

செலுத்த வேண்டிய  பிரீமிய
தவணைத் தொகைகளை
காலம் தவறாமல் சலுகை நாட்களான *30 நாட்களுக்குள்* கட்டாயம்
செலுத்திவிட வேண்டும். அப்போதுதான் பாலிசி பலன்கள் அனைத்தும் தொடர்ந்து கிடைக்கும்.

பிரீமியம் செலுத்த  தவறிய முதல் தவணை தேதியிலிருந்து *இரண்டு ஆண்டு முடிவிற்குள்* பாலிசியைப் புதுப்பித்துக் கொள்ளவேண்டும். இல்லாவிட்டால், ஒருபோதும் புதுப்பிக்க முடியாது என்பதோடு, இதுவரை கட்டிய பிரீமியங்களையும் இழக்க நேரிடும்.

*விபத்துக்காப்புச்சலுகை* பலன் தொடர்ந்து கிடைக்க
தவணைப்பணத்தை சலுகை நாட்களான 30 நாட்களுக்குள்
(“Days of Grace”க்குள்)
கட்டியாகவேண்டிய
கட்டாயத்தையும் தவறாது
தெரிந்து கொண்டு, தவணையை 30 நாட்களுக்குள் செலுத்த வேண்டும்.

ஏற்கனவே நியமிக்கப்பட்ட நாமினிதார்ர் இயற்கை எய்தி இருந்தால், அவருக்குப் பதிலாக புதிய நாமினிதார்ரை விரைவில் நியமிக்க வேண்டும்.

மைனராக இருக்கும்போது பாலிசி எடுத்திருந்து, இப்போது மேஜர் ஆகியிருந்தால், உடனடியாக புது நாமினிதாரை நியமிக்க வேண்டும்.  அத்துடன் விபத்து பாதுகாப்பு சலுகையை பாலிசியில் சேர்ப்பிக்க விண்ணப்பித்து, சற்று கூடுதல் பிரிமியம் செலுத்தி தாமதமில்லாமல் பெறவேண்டும்.

திருமணத்திற்கு முன்பு பாலிசி எடுத்திருந்து, இப்போது திருமணம் ஆகியிருந்தால்,  நாமினேசனை மனைவின் பெயருக்கு உடனடியாக மாற்றம் செய்யவேண்டும். ஆனால், அது பாலிசிதார்ரின் தனிப்பட்ட விருப்பம்.

பாலிசியின் மீது கடன் வாங்கியிருந்தால், ஆறு மாதத்திற்கு ஒருமுறை அவசியம் வட்டி கட்டவேண்டும்.  அப்போது தான் கூட்டுவட்டியை தவிர்க்க முடியும்.

செலுத்த வேண்டிய வருமானவரியில் ஒவ்வொரு ஆண்டும் சலுகை பெற *(80-C செக்சன்படி)* அதிகபட்சமாக  ரூ. 1,50,000/- வரை பிரீமியம் செலத்தலாம்.
*அத்துடன் LICயின் ஜீவன் ஆரோக்யா மற்றும் கேன்சர் கவர் பாலிசிகளுக்கு பிரீமியம் செலுத்தி, 'ஆரோக்கிய பாதுகாப்பு' பெறுவதன் மூலம் சீனியர் சிட்டிசன்கள் ரூ. 30,000/-, மற்றவர்கள் ரூ. 25,000/- வரையிலும் மேலும் அதிகமாக வருமானவரி சலுகை (80-D செக்சன்படி) பெறலாம்.*
அனைத்து தகவல்களும்  தாமதமில்லாமல் உரிய நேரத்தில் உங்களுக்கு வந்து சேர, உங்கள் முகவரி, செல் போன் எண், ஈமெயில் முகவரி மற்றும் வங்கிக்கணக்கு எண் ஆகியவற்றில் மாற்றம் இருந்தால், உடனுக்குடன்
LICக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

அத்துடன் தங்கள் பாலிசிகள் குறித்த
அனைத்து விபரங்களையும்
தெளிவாக தெரிந்து கொண்டு, அதன்படி நடந்து கொண்டால் பின்னாளில்
எந்த சிக்கலும் வராது.

மேற்கண்ட தகவல்கள் அனைத்தும் உங்கள் உயரிய நலன்களைக் கருத்தில் கொண்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

*விரைந்து பிரீமியம் செலுத்துங்கள்!*
**தொடர்ந்து பாதுகாப்பு பெறுங்கள்**.

D.SELVAN
Chief Advisor-LIC of India
98430-49474

எல்ஐசி: வெற்றிக்கு ஒரு உதாரணம்! - தி இந்து -

பொதுத்துறை நிறுவனத்தைத் திறம்பட நடத்தினால், அது நாட்டுக்கும், மக்களுக்கும் எவ்வளவு உதவியாக இருக்கும் என்பதற்கு எல்.ஐ.சி. என்ற ஒரு நிறுவனத்தின் உதாரணம் போதும்.

இந்தியாவில் ஆயுள் காப்பீட்டு பாலிசி எடுத்திருக்கிறீர்களா என்று யாரையாவது விசாரிக்க வேண்டுமென்றால், “எல்.ஐ.சி. போட்டுருக்கீங்களா?” என்று கேட்கிறார்கள். அந்த அளவுக்கு ஆயுள் காப்பீடு என்றாலே ‘எல்.ஐ.சி’என்று மக்கள் மனதில் பதிந்திருப்பதற்குக் காரணங்கள், அது சமூகத்தின் கடைசி மனிதனையும் தொட்டிருப்பது, மக்களுக்கான உரிமங்களை நேர்மையாகத் தருவது, இந்தியப் பொருளாதாரத்துக்கான அமுதசுரபியாய்த் திகழ்வது போன்றவையே ஆகும்.

1956-க்கு முன்பாக நூற்றுக்கணக்கான தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இருந்தன. முறைகேடுகள், மோசடிகள், திவால்களின் உறைவிடங்களாக அவை திகழ்ந்தன என்பதே வரலாறு. அப்போது நாடாளுமன்றத்தில் ஃபெரோஸ் காந்தி பேசும்போது சாணக்கியர் அர்த்தசாஸ்திரத்தில் பட்டியலிட்ட 42 மோசடிகளையும்விட அதிகமான பித்தலாட்டங்களைத் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கண்டுபிடித்துவிட்டன எனச் சாடினார். இந்தப் பின்புலத்தில்தான் 245 தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களைத் தேசியமயமாக்குகிற முடிவு 1956 ஜனவரி 19-ல் எடுக்கப்பட்டது.

‘மூலை முடுக்கெல்லாம் காப்பீட்டைப் பரவலாக்குவதே’ தேசிய மயத்தின் லட்சியம் என அறிவிக்கப்பட்டது. இன்று 40 கோடி பாலிசிகளைக் கொண்ட நிறுவனமாக எல்.ஐ.சி உள்ளது. உலகில் வேறு எந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனத்திலும் இவ்வளவு பாலிசிகள் இல்லை. 2015-ல்கூட எல்.ஐ.சி.யின் சந்தைப் பங்கு பாலிசிகளில் 78%, பிரிமியத்தில் 69 %.

இதன் பொருள் என்ன? 2000-ல் மீண்டும் தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்ட பின்பும் சாதாரண மக்களுக்கு இன்சூரன்ஸ் பாதுகாப்பைத் தருவது எல்.ஐ.சி.தான். அரசு நிறுவனங்கள் லாபத்தை மட்டும் பார்க்காது, மக்களையும் பார்க்கும் என்பதன் நிரூபணம்.

‘நம்பகத்தன்மையே மிக முக்கியமான மூலதனம்’ என்பது இன்சூரன்ஸ் தொழிலின் கோட்பாடு. அந்தக் காலத்து சினிமாக்களில் ரெங்கா ராவ் நடிக்கிற எல்லாப் படங்களிலும் நெஞ்சுவலி வருகிற காட்சி வரும். கப்பல் கவிழ்ந்தாலே இன்சூரன்ஸ் நிறுவனங்கள் திவாலாகி விடும் என்பதால், தொலைபேசி செய்தி வந்தவுடன் சாய்ந்துவிடுவார். 1970-களுக்குப் பிறகு இந்த நெஞ்சுவலிக் காட்சிகள் இருப்பதில்லை.

காரணம் 1971, மே 30 அன்று பொதுக் காப்பீட்டுத் துறையில் 106 தனியார் நிறுவனங்களும் தேசிய மயமாக்கப்பட்டுவிட்டதுதான். 2015-ல்கூட எல்.ஐ.சி.யின் உரிமப்பட்டுவாடா 99.75%. அதே ஆண்டில் தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் உரிமப்பட்டுவாடா 89% தான். சில தனியார் நிறுவனங்களில் 50% உரிமங்கள்கூடச் சிக்கலாகியுள்ளன. இதனால்தான் 24 தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் - உலகின் பெரிய பெரிய நிறுவனங்களும், இந்தியாவின் மிகப்பெரும் தொழிலகங்களும் கூட்டு சேர்ந்து வந்த பிறகும், எல்.ஐ.சி.யின் சந்தைப் பங்கு பாலிசிகளில் 70% ஆக உள்ளது. இது கருத்துக் கணிப்பு அல்ல, வணிகக் களத்தின் நம்பிக்கை வாக்கெடுப்பு. அறுதிப் பெரும்பான்மை வாக்குகளை எல்.ஐ.சி. பெற்றிருப்பது அமோக வெற்றி!

‘ஆதாரத் தொழில் வளர்ச்சியின் அடித்தளம் ஆயுள் இன்சூரன்ஸ் துறை’ என்பது பொருளாதாரத்தில் அதன் தனிச்சிறப்பு. 7-வது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் எல்.ஐ.சி. வழங்கியிருக்கிற நிதியாதாரங்கள் ரூ.7,04,151 கோடிகள். 8-வது திட்டக் காலத்தில் இதுவரையிலான முதல் மூன்று ஆண்டுகளில் மட்டுமே ரூ.7,52,633 கோடிகள் மின்சாரம், குடிநீர் அடிப்படை வசதிகளுக்காக இத்தொகை பயன்பட்டுள்ளது.

ரயில்வே பட்ஜெட்டில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ரூ.1,50,000 கோடிகள் தேவை என அறிவித்தால், உடனடியாக எல்.ஐ.சி. ஆண்டுக்கு ரூ.30,000 கோடி வீதம் 5 ஆண்டுகளுக்கு ரூ.1,50,000 கோடி தருவதாகப் புரிந்துணர்வு உடன்பாட்டில் கையெழுத்திட்டது. மேலும் 11,63,604 முகவர்களுக்கு நாடு முழுவதும் வேலைவாய்ப்புகளைத் தந்துள்ளது. இப்படியொரு அமுதசுரபி எங்கு கிடைக்கும்? அந்நிய முதலீடுகள் வாயிலாகவே ஆதாரத் தொழில் வளர்ச்சி நடந்தேறும் என்கிற உலகமயவாதம் பொய்யாக்கப்பட்டுள்ளது. ஆனால், ஓர் அரசு நிறுவனம் திறம்படச் செயல்பட்டால் தேச நிர்மாணத்துக்குப் பயன்படும் என்பது மெய்ப்பிக்கப்பட்டுள்ளது!
நன்றி.
இந்து (தின இதழ் தமிழ்)