Powered By Blogger

Jan 3, 2011

31000 புள்ளிகளை நோக்கி சென்செக்ஸ் !!!!!

தலைப்பை பார்த்தவுடனே அடேங்கப்பா !!!!!


என்று பெருமூச்சு விடுகிறீர்களா ?.

ஆம், சென்செக்ஸ் 31000 புள்ளிகளை தொட வாய்ப்புள்ளது என்கிறார்கள்

சில பங்குசந்தை ஜாம்பவான்கள்.

31000 புள்ளிகளை சென்செக்ஸ் தொடும் என்றால் நாம் சும்மா காதுல பூ சுத்தாதீங்க என்றுதான் நி்னைப்போம். நீங்கள் நினைப்பது தவறு, சென்செக்ஸ் 31000 புள்ளிகள் தொடுவதற்கான காரணங்கள் இதோ என்று நிபுணர்கள் எடுத்து வைத்து வாதம் வருமாறு.......



இந்திய பங்குச்சந்தை வலுவான நிலையில் இருக்கிறது.

சென்செக்ஸ் நிறுவனங்களின் வருமான வளர்ச்சி இந்த நிதியாண்டில் குறைந்தபட்சம் 23% சதவிகிதமான இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே வளர்ச்சி அடுத்த நிதியாண்டில் 20% ஆக இருக்கும். நாட்டின் ஜி.டி.பி (GDP) வளர்ச்சி இந்த நிதியாண்டில் 9% ஆகவும் , அடுத்த நிதியாண்டில் 8.6% ஆகவும் இருக்கும் என மதிப்பிட்ப்பட்டுள்ளது.

மேலும் இந்தியாவின் நிதி பற்றாக்குறை 3-G ஏலத்தின் மூலம் அரசு எளிதில் சமாளித்து வருகிறது. இது போன்ற காரணங்களால் பங்குசந்தை 2011 மார்ச் மாதத்துக்குள் புதிய உச்சமான 22000 புள்ளிகளை தொடும்.



இன்னும் சில நிபுணர்கள்.....சென்செக்ஸ் 2012 மார்ச் மாதத்தில் 31000 புள்ளிகளை தாண்டும் என்று கணக்கிட்டுள்ளனர். இதற்கான காரணங்களையும் அவர்கள் கூறாமலில்லை....



* இந்த வருடத்தில் சிறப்பான பருவமழை இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

* பணவீக்க விகிதம் கட்டுக்குள் இருப்பது.

* அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பொருளாதார வளர்ச்சி காரணமாக...

* கடனுக்கான வட்டி விகிதம் குறைதல்.

* எஃப்.ஐ.ஐ முதலீடு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

* ரூபாயின் மதிப்பு கூடும் என்ற எதிர்பார்ப்பு

* 25% மேல் இருக்கும் நிறுவனங்களின் வளர்ச்சி விகிதம்.



இது போன்ற காரங்களால் சென்செக்ஸ் 31000 புள்ளிகள் என்ற மைல்கல்லை தொடும் என்பதே பங்குசந்தை பழம் தின்று கொட்டை போட்ட சில நிபுணர்களின் கணிப்பு. இது எவ்வாறு சாத்தியமாகும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

No comments:

Post a Comment