Powered By Blogger

Oct 18, 2015

தத்துவமஸ்் -20

தத்துவம்-1:என்னதான் கருணாநிதி திமுக தலைவராய் இருந்தாலும், அவர் வீட்டுப் பசுமாடு "அம்மா" னு தானே கத்தும்.

தத்துவம்-2:என்னதான் ஏரோபிளேன் மேலே பறந்தாலும் பெட்ரோல் போட கீழேதான வரனும்.

தத்துவம்-3:உள்ளே போற வரைக்கும்தான் பிராந்தி, அது வெளியில வந்தா அதுக்குப்பேர் வாந்தி.

தத்துவம்-4: என்னதான் நாய் நன்றி உள்ளதுதான் என்றாலும் அதால "தேங்க் யூ" னு சொல்ல முடியாது.

தத்துவம்-5: ஆயிரம் தான் இருந்தாலும் ஆயிரத்து ஒன்றுதான் பெரிசு.

தத்துவம்-6: லஞ்ச் பாக்ஸ்ல லஞ்ச் எடுத்துப் போகலாம் ஆனால் ஸ்கூல் பாக்ஸ்ல ஸ்கூல் எடுத்துட்டுப் போகமுடியுமா?

தத்துவம்-7: நீ எவ்வளவு பெரிய பருப்பா இருந்தாலும் உங்க வீட்டு சமையலுக்கு பருப்பு கடையிலதான் வாங்கனும்.

தத்துவம்-8: பஸ் போய்ட்டாலும் பஸ் ஸ்டாண்ட் அங்கேயேதான் இருக்கும்,ஆனா சைக்கிள் போய்ட்டா சைக்கிள் ஸ்டாண்ட் கூடவே வரும்.

தத்துவம்-9: டிக்கட் வாங்கிட்டு உள்ளே போறது சினிமா தியேட்டர். ஆனா உள்ள போய்ட்டு டிக்கட் வாங்கிறது ஆப்பரேஷன் தியேட்டர்.

தத்துவம்-10: க்ரீம் பிஸ்கட்ல கிரீம் இருக்கும் ஆனா நாய் பிஸ்கட்ல நாய் இருக்காது.

தத்துவம்-11: பஸ்ல நீ ஏறினாலும் பஸ் உன் மேல ஏறினாலும் டிக்கட் வாங்கப் போறது நீதான்.

தத்துவம்-12: செல்போனில் பேலன்ஸ் இல்லேனா கால் பண்ண முடியாது,ஆனா மனுசனுக்கு கால் இல்லேனா,பேலன்ஸ் பண்ண முடியாது.

தத்துவம்-13: ஏர்டெல் மொபைல் வச்சிருந்தாலும் ஏர்செல் மொபைல் வச்சிருந்தாலும் தும்மும்போது  HUTCH-னு தான் சத்தம் வரும்.

தத்துவம்-14: ஊருக்கே கேட்கற மாதிரி சத்தமா குறட்டை விட்டாலும், உன் குறட்டையை உன்னால கேட்க முடியாது.

தத்துவம்-15: கோல்டு வச்சு கோல்டு செய்ன் செய்யலாம் ஆனா சைக்கிள் வச்சு சைக்கிள் செய்ன் பண்ண முடியுமா?

தத்துவம்-16: அயர்ன் பாக்ஸ் வச்சு அயர்ன் பண்ணலாம் ஆனா பென்சில் பாக்ஸ் வச்சு பென்சில் பண்ணமுடியுமா ?

தத்துவம்-17: ஷாம்ப்புக்கும் பாம்புக்கும் என்ன வித்தியாசம்? ஷாம்ப்பு போட்டா தலையில் நுரை வரும், பாம்பு போட்டா வாயில நுரை வரும்.

தத்துவம்-18: நீ எவ்வளவு பெரிய டான்ஸ் மாஸ்டரா இருந்தாலும் உன் சாவுக்கு நீ டான்ஸ் ஆடமுடியாது.

தத்துவம்-19: என்னதான் நாய்க்கு நாலுகால் இருந்தாலும், அதால கால் மேல கால் போட்டு உட்கார முடியாது.

தத்துவம்-20: போலிசுக்கும் பொறுக்கிக்கும் என்ன வித்தியாசம் அடி-தடி செஞ்சா பொறுக்கி, 'தடி-அடி' செஞ்சா போலிஸ்.

No comments:

Post a Comment