Powered By Blogger

Sep 4, 2013

ஆயுள் காப்பீட்டுத் திட்டம் - செலவா?

ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் சேருவதற்கு முன்பாக, அதற்கு எவ்வளவு செலவாகும் என்ற கேள்வி எல்லோர் மனதிலும் பொதுவாகவே வந்து செல்கிறது.
ஆனால் அந்த செலவைப் பற்றி நினைத்துப் பார்ப்பதற்கு முன்பாக, ஆயுள் காப்பீட்டுத் திட்டம் எவ்வளவு முக்கியமானது என்பதை எண்ணிப் பார்ப்பது முக்கியமானது.
முதலீடு செய்ய வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தைப் பார்க்கக்கூடாது. ஏனெனில் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் என்பது ஒரு முதலீட்டுத் திட்டம் அல்ல.
இந்த திட்டதில் இருந்து போதுமான வருமானம் கிடைப்பது இல்லை. ஆனால் ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடக்கும் போது, குடும்பத்தையும் மற்றும் பிள்ளைகளையும் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் தாங்கிப் பிடித்து அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும்.
அதாவது துன்ப காலத்தை இன்பமாகக்குவதற்காக ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்து சேமிக்கிறீர்கள் என்பதைப் புரிந்து வைத்திருக்க வேண்டும்.
நீங்கள் செலுத்தும் பிரிமியத் தொகை சில குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பின்பு மிகப் பெரியத் தொகையாக வந்து நிற்கும். பிரிமியத் தொகையோடு உங்களின் இறப்பின் போது வழங்கப்படும் பெனிபிட்டும் சேர்ந்து, இறப்பு நேரத்தில் குடும்பத்தை பொருளாதார நெருக்கடியிலிருந்து காப்பாற்றும்.

இந்த கண்ணோட்டத்தில்தான் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தைப் பார்க்க வேண்டும்.
கவரேஜைப் பொருத்து ஆகும் செலவு எந்தந்த தேவைகளை பாலிசி கவர் செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அதற்கு தகுந்தார் போல நீங்கள் பிரீமியத் தொகையச் செலுத்த வேண்டும். ஆண்டிற்கு எவ்வளவு பிரிமியத் தொகையைச் செலுத்த வேண்டும் என்று சிந்திப்பதைவிட, நீங்கள் இறந்த பின்பு, உங்களுடைய குடும்பத்தின் எந்த தேவைகளையெல்லாம் பாலிசி கவர் செய்ய வேண்டும் என்று சிந்தித்த்துப் பார்க்க வேண்டும்
முக்கியமாக பாலிசி தொகை, இறந்த பின்பு குடும்பத்திற்கு தேவையான அன்றாட செலவுகள், ஏற்கனவே வாங்கியிருக்கும் கடன்கள் மற்றும் நிதி பொறுப்புகள் ஆகியவற்றைக் கவர் செய்ய வேண்டும். மேலும் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் ஏற்பட்ட மருத்துவச் செலவுகள் ஆகியவற்றையும் பாலிசித் தொகைக் கவர் செய்வதாக இருத்தல் வேண்டும்

எந்த அளவிற்கு உங்களின் நிதி பொறுப்பு அதிகமாக இருக்கிறதோ அந்த அளவிற்கு உங்களின் பாலிசி தொகையும் அதிகமாக இருக்கும்
நீங்கள் தேர்ந்தெடுக்கும் இன்சூரன்ஸ் பாலிசி, இன்சூரன்ஸ் செலவைக் கண்டிப்பாகப் பாதிக்கும்.
உதாரணமாக, குறிப்பிட்ட கால ஆயுள் காப்பீட்டுத் திட்டம், முழு ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தைவிட மலிவானது. ஏனெனில் பாலிசி காலத்தின் போது மரணமடைந்தால், இறப்பு பெனிபிட்டை மட்டுமே, குறிப்பிட்ட கால ஆயுள் காப்பீட்டுத் திட்டம் வழங்குகிறது. ஆனால் முழு ஆயுள் காப்பீட்டுத் திட்டம் இறந்த பின்பு பல பெனபிட்டுகளை வழங்குகிறது.

அதற்காக அதிக பிரீமியத் தொகையைச் செலுத்த வேண்டியிருக்கும். பிரீமியத் தொகைய முடிவு செய்யும் தனிநபர் காரியங்கள் பொதுவாக வயதானவர்களைவிட இளைஞர்கள் குறைவான பிரீமியத் தொகையைச் செலுத்துகின்றனர். அதற்கு காரணம் என்னவென்றால், பாலிசிதாரர் இறக்கும் போது ஆயுள் காப்பீட்டு திட்டம் பணம் வழங்குகிறது.

ஒரு இளைஞர் இறப்பதற்கு குறைவான வாய்ப்பே இருக்கிறது. அதனால் அவர் நீண்ட காலத்திற்கு பிரீமியம் செலுத்த முடியும். அதனால் வயதானவர்களைவிட குறைந்த பிரீமியத் தொகையை அவர் செலுத்தலாம். ஆனால் வயதானவர்களுக்கு அப்படியில்லை. அவர்களுக்கு நோய்கள் ஏற்படுவது மிகவும் எளிது. எனவே அவர்கள் குறந்த காலத்திற்கு அதிக பிரீமியத் தொகையைச் செலுத்த வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.
எனவே உடல் ஆரோக்கியமும், பாலிசித் தொகையைத் தீர்மானிக்கும் ஒரு முக்கியக் கருவியாக இருக்கிறது. ஆகவே ஆரோக்கியமான உடற்பயிற்சிகளை எப்போதும் கடைபிடித்து வருவது பயனுள்ளதாக இருக்கும்
உதாரணமாக, புகைப் பிடிக்காதவர்களைவிட புகைப் பிடிப்பவர்களுக்கு உடல் ஆரோக்கியம் குறைய அதிக வாய்ப்பிருக்கிறது. ஆகவே உங்கள் பிரீமியத் தொகையைக் குறைக்க வேண்டும் என்றால் புகைப் பிடிப்பதை நிறுத்துங்கள்.
மேலும் அதிக உடல் எடையுடன் குண்டாக இருந்தாலும், அது பிரீமியத் தொகையை அதிகரிக்கச் செய்துவிடும். அதனால் முறையான உடற்பயிற்சிகளைச் செய்து, உடலை கட்டுக்கோப்பாக ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால், அது பிரீமியத் தொகையைக் கண்டிப்பாகக் குறைக்ககும்.
இதர காரணங்கள் ஆயுள் காப்பீட்டு திட்டத்தில் செலுத்தும் தொகை ஆண்டு இறுதி பிரீமியத் தொகையைக் கண்டிப்பாகப் பாதிக்கும். 
ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்டத் தொகையை பிரீமியமாகச் செலுத்துவது மிக எளிதாகத் தெரியலாம். ஆனால் அதற்காக ஒவ்வொரு மாதமும் நீங்கள் அதிக பிரீமியத் தொகையைச் செலுத்த வேண்டும். ஆனால் நீங்கள் பிரீமியத் தொகையைக் குறைக்க விரும்பினால், அரையாண்டு பிரீமியத் தொகை செலுத்துதல் அல்லது ஆண்டுக்கு ஒரு முறை பிரீமியத் தொகையைச் செலுத்துதல் போன்றவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
ஏனெனில் ஒரு நெகிழ்வு தன்மை கொண்ட பாலிசி, நீண்ட காலத்திற்கு தொடரும் போது அதில் நன்மை உண்டு. உதாரணமாக புதுப்பிக்கக்கூடி ஆயுள் காப்பீட்டு பாலிசியை வைத்திருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இந்த நிலையில் பாலிசியை புதுப்பிக்கிறீர்கள் என்று எடுத்துக் கொள்வோம்.
பாலிசி நீண்ட காலத்தைக் கொண்டதாக இருந்தால், எந்த ஒரு மருத்துவ பரிசோதனையும் செய்யாமல் பாலிசியை புதுப்பிக்க முடியும். அதனால் புதிதாக ஏற்பட்டிருக்கும் உடல் நலக் குறைவை அதில் குறிப்பிட வேண்டிய அவசியம் இருக்காது. ஆனால் குறைந்த கால பாலிசியை புதுப்பிக்கும் போது, மருத்துவ பரிசோதனை செய்து, புதிதாக ஏதாவது உடல் நலக் குறைவு ஏற்பட்டிருந்தால் அதை பாலிசியில் குறிப்பிட வேண்டும்.
அப்போது செலுத்த வேண்டிய பிரீமியத் தொகை அதிகமாகும். நல்ல பாலிசிகள் இருக்கும் போது, செலவைக் குறைக்க வேண்டும் என்பதற்காக அந்த பாலிசியை தவறவிடக்கூடாது. எனவே குறைந்த பிரீமியம் கொண்ட பாலிசியைத் தேர்ந்தெடுக்காமல், செலுத்த முடியக்கூடிய அதிக பிரீமியத் தொகை கொண்ட பாலிசியைத் தேர்ந்தெடுப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

No comments:

Post a Comment