Powered By Blogger

Sep 9, 2013

எல்.ஐ.சி. ஹவுசிங் ஃபைனான்ஸ் : சராசரி வீட்டுக் கடன் ரூ. 16 லட்சம்...!



சென்னையில் அண்மையில் எல்..சி. ஹவுசிங் ஃபைனான்ஸ் (எல்..சி ஹெச்.எஃப்.எல்) நிறுவனம் சார்பில் உங்கள் இல்லம் - 2013 என்கிற பெயரில் சொத்துக் கண்காட்சி நடந்தது.


இதனை தொடங்கி வைக்க எல்..சி ஹெச்.எஃப்.எல் நிர்வாக இயக்குநர் வி.கே.சர்மா வந்தார். அப்போது அவர் நிருபர்களை சந்தித்து பேசினார்.

'' எங்களின் பெண்களுக்கான பிரத்யேக பாக்யலஷ்மி வீட்டுக் கடன் திட்டத்துக்கு (வட்டி விகிதம் 10%) அமோக ஆதரவு கிடைத்துள்ளது.
 மொத்த வீட்டுக் கடனில் இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள கடன் 17% ஆக உள்ளது. இது வரும் காலாண்டில் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.
எங்கள் நிறுவனம் வழங்கும் கடனில் 93% சிறு கடன் ஆகும். சராசரியாக தனிநபர் ஒருவர் 16 லட்ச ரூபாய் கடன் வாங்குகிறார். வீட்டுக் கடனுக்கான வட்டி என்கிற போது 35% மாறுபடும் ஃப்ளோட்டிங் வட்டியிலும், மீதி 65% பேர் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு வட்டி மாறாத ஃபிக்ஸட் வட்டியிலும் வாங்கப்பட்டிக்கிறது.
 பொதுவாக கடனை பத்தாண்டுக்குள் சராசரியாக கட்டி முடித்துவிடுகிறார்கள். வழங்கப்பட்ட வீட்டுக் கடனில் 60 சதவிகிதம் நகர்புறங்களிலும் 40 சதவிகிதம் கிராமப் புறங்களிலும் இருக்கின்றன" என்றார்.



No comments:

Post a Comment