Powered By Blogger

Sep 9, 2013

எல்.ஐ.சி. தென்மண்டலத்தில் 43,53,466 பாலிசிகள் விற்பனை..!




எல்..சிதென்மண்டலத்தின் மேலாளர் டி.சித்தார்த்தன் சென்னையில் நிருபர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் எல்..சி. ஆஃப் இந்தியாதென்மண்டலத்தின் செயல்பாடுகள் பற்றி விளக்கி பேசினார்.

''
தென்மண்டலத்தில் தமிழ்நாடு, கேரளா, மற்றும் பாண்டிச்சேரி அடங்கும். இதில் 13 கோட்டங்கள், 261 கிளைகள், 247 துணை அலுவலங்கள், மற்றும் 73 சிறு (மினி) அலுவலகங்கள் உள்ளன.

சென்னை வணிக ஆண்டில் தென்மண்டலத்தில் 2013, மார்ச் 31-ம் தேதி வரையில் மொத்தம் 43,53,466 பாலிசிகள் விற்பனை செய்யப்பட்டு பிரீமிய வருமானமாக ரூ. 2,95,981 லட்சம் திரட்டப்பட்டுள்ளது. நடப்பு வணிக ஆண்டில் ஜூலை 15 வரையில் மொத்தம் 6,32,279 பாலிசிகள் விற்பனை செய்யப்பட்டு பிரீமிய வருமானமாக ரூ. 47,283 லட்சம் திரட்டப்பட்டுள்ளது.

பல தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் காப்பீட்டு துறையில் நுழைந்தும் எல்..சி பங்குச் சந்தையில் ஒரு குறிப்பிடத்தக்க பங்கை தக்க வைத்து வருகிறது


பாலிசி எண்ணிக்கையில் சந்தை பங்களிப்பு 83.24%,
பிரீமியம் அடிப்படையில் சந்தை பங்களிப்பு 71%

எல்..சி. விஷன் 2020 என்கிற திட்டத்தை அமல்படுத்தி வருகிறது. இதன்படி 2020 ஆண்டுக்குள் அனைவருக்கும் காப்பீடு அளிக்க வேண்டும் எனபது எல்..சியின் குறிக்கோள். தென்மண்டலத்தில் சுமார் 2.25 கோடி குடும்பத்தினர் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்காமல் இருக்கிறார்கள். இதில் 5 லட்சம் பேருக்கு இந்த ஆண்டில் பாலிசி விற்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. " என்றார். டி.சித்தார்த்தன்.

பேட்டியின் போது எல்..சி. தென்மண்டல மேலாளர் (கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ்) கெம்பா பெர்லி உடன் இருந்தார்.

No comments:

Post a Comment