Powered By Blogger

Sep 4, 2013

இன்சூரன்ஸ் பாலிசியும் நீங்கள் அறிய வேண்டிய சில உண்மைகளும்!


என்னுடைய நண்பர் ஒருவர் அவரது எல்.ஐ.சி. ஏஜெண்ட்டிடம் தொடர்ந்தும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பார்

பிரச்சனை என்னவெனில் நண்பர் செலுத்திய பணம் முழுவதுமே அவருடைய பாலிசிலியில் முதலீடு செய்யப்படவில்லை என்பதுதான்!

அவர் செலுத்திய கட்டணத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை ஏதோ ஒன்றின் பெயரில் கழிக்கப்பட்டிருப்பது மட்டும் அவருக்குப் புரியவில்லை.
இன்சூரன்ஸ் கணக்கீடு எப்படி?

வாழ்நாள் பாலிசி எடுத்துக் கொண்டவர் நீங்கள் எனில் "Mortality Charge" என்பது உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும்

பெருமளவு ஒரு பிரிமீயத்தை நீங்கள் செலுத்தும் போது இந்த Mortality Charge என்பது கணக்கிடப்பட்டு அது தனியே வைக்கப்படும். இந்தத் தொகையானது பாலிசிதாரர் காப்பீட்டு காலத்தில் உயிரிழக்க நேரிட்டால் அவரது நாமினிக்கு அந்தத் தொகை வழங்கப்படும்.

இன்னொரு வகையில் சொல்ல வேண்டுமானால் Mortality Charge என்பதுதான் உண்மையான பாலிசி கட்டணமாகும். பிரிமீயம் கட்டணம் என்பது பாலிசிதாரரின் வயது. பாலிசி கட்டணம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கொண்டு கணக்கிடப்படுகிறது.

Mortality Charge என்பது பல்வேறு கட்டணங்களுடன் சேர்த்து வரவு வைக்கப்படுகிறது. அதனால் நீங்கள் செலுத்துகிற பிரிமீயத் தொகை முழுவதுமே முதலீடாக இருக்காது.
நிர்வாக கட்டணங்கள் மற்றும் Mortality Charge ஆகியவும் கழிக்கப்படும்.

Mortality Charge என்பது அனைவருக்கும் ஒரே மாதிரியானதாக இருக்காது.

உதாரணமாக பார்த்தோம் என்றால் இளைஞர் ஒருவர் குறைவான கட்டணத்தை செலுத்த நேரிடும். அதே நேரத்தில் முதியவர்கள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இது அவர்களின் வயதைக் கணக்கில் கொண்டு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல்தான் பெண்களுக்கும் குறைவான கட்டணம் நிர்ணயிக்கப்படும்
அதேபோல் நீங்கள் என்ன மாதிரியான பணி செய்கிறீர்கள் என்பதும் முக்கியத்துவம் வாய்ந்தது. பாலிசிதாரர் ஒரு ஸ்டண்ட் மேன் என்றால் அவரிடம் "Mortality Charge" கூடுதலாக வசூலிக்கப்படும்.

எல்.ஐ.சி என்பது நாட்டில் நீண்டகாலமாக செயல்பட்டு வரும் காப்பீட்டு நிறுவனம். வாழ்நாளைப் பொறுத்தே Mortality Charge கணக்கிடப்படுகிறது. அனேகமாக அனைத்து இன்சூரன்ஸ் நிறுவனங்களுமே எல்.ஐ.சி.யின் கணக்கீட்டைத்தான் பின்பற்றுகின்றன

அதனால் பிரிமீயம் செலுத்துவோர் பொதுவான கட்டண மாற்றங்களை கவனத்தில் கொண்டிருக்க வேண்டும்.
ஆயுள் காப்பீடு என்பது உங்களையும் உங்களது குடும்பத்தையும் காப்பாற்றக் கூடிய ஒன்று.

இந்த Mortality Chargeதான் உண்மயான இன்சூரன்ஸ் விலை.
இதுவே உங்களுக்குப் பாதுகாப்பானதும்கூட என்பதை அவசியம் புரிந்து கொள்ள வேண்டும்.


No comments:

Post a Comment