Powered By Blogger

Sep 9, 2013

ஐந்து நிறுவனங்களின் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை விநியோகிக்க வங்கிகளுக்கு அனுமதி


வங்கிகள் இதுவரை ஒரே இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் லைஃப் மற்றும் லைஃப் அல்லாத இன்ஷூரன்ஸ் பாலிசிகளை விற்க அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது. 

 இந்த விதிமுறையை கொஞ்சம் தளர்த்தி ஐந்து இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் பாலிசிகளை விற்கலாம் என அனுமதி வழங்கியுள்ளது, 
 லைஃப் இன்ஷூரன்ஸ் கவுன்சில்.
இதில் ஒரு இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் 25 சதவிகித பங்கு மட்டுமே வங்கி கொண்டிருக்க வேண்டும். டாடா ஏ.ஐ.ஏ., அவிவா,  ரிலையன்ஸ்,  பஜாஜ்,  டி.எல்.எஃப் உள்ளிட்ட இன்ஷூரன்ஸ் நிறுவனம் இந்த விதிமுறைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. 
தற்போது வங்கிகள் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் ஏஜென்ட்டாகவும், புரோக்கராகவும் செயல்பட்டு வருகின்றன. வங்கிகள் நேரடியாக இன்ஷூரன்ஸ் புராடக்டுகளை விற்பனை செய்வதற்கான இறுதி வடிவமைப்பு பணிகளை ஐ.ஆர்.டி.ஏ.  மேற்கொண்டு வருகிறது.





No comments:

Post a Comment