Powered By Blogger

Dec 6, 2016

அடிமைப்பெண் #அம்மா!!

ஜெயலலிதா, தன் சுய சரிதையில் தனது வாழ் நாளில் சுதந்திரமாக தனக்குப் பிடித்த விசயம் எதையும் செய்ய முடிந்ததில்லை என்று குறிப்பிட்டிருப்பார்.

கான்வென்டில் படித்துக் கொண்டிருந்த சமயம் படிப்பை முடிப்பதற்கு முன்னரே நடிக்கும் வாய்ப்பு வந்தது. நடிக்கப் பிடிக்காத போது அம்மாவின் வற்புறுத்தலால் நடிக்க வந்ததையும், அரசியல் பிடிக்காதபோது எம் ஜி ஆரின் வற்புறுத்தலால் அரசியலுக்கு வந்ததையும்  அந்த சுயசரிதையில் ஜெயலலிதா குறிப்பிட்டிருக்கிறார்.

இப்படி அடுத்தவர் விருப்பத்திற்காக அடிமைப் பெண்ணாகவே வாழும் வாழ்க்கை குறித்து அதில் விசனப்பட்டிருப்பார்.

குமுதம் பத்திரிக்கையில் தொடராக வந்த அந்த ஜெயலலிதாவின் சுய சரிதை யாருடைய வற்புறுத்தலோ தெரியவில்லை.... பாதியிலேயே நிறுத்தப்பட்டதாக ஞாபகம்.

அப்படியே அவருடைய இறுதிக்கால வாழ்வும்  அடிமை வாழ்வாகவே, சிறைப்பறவையாகவே கழிந்தது.

இத்தனை ஆண்டுகால வாழ்வில் தான் பழகிய, ஒருவரைக் கூடவா அவர் தன் இறுதிக்காலத்தில்  பார்க்க ஆசைப்படாமல் இருந்திருப்பார்?

கூட இருந்தவர்களிடம் அதைக் கேட்காமலா இருந்திருப்பார்?

தூக்குத் தண்டனைக் கைதிக்கு கூட கடைசி ஆசை என்ன என்று கேட்டு அதை நிறைவேற்றுவார்கள்.

இங்கு அது கூட நடந்ததா என்பது சந்தேகமே.

ஒருவரையும் அவர் கண்ணுக்கு காட்டாமல், ஒருவருக்கும் அவரைக் கண்ணில் காட்டாமல்... இப்படி ஒரு ஜீவனை அடைத்து வைத்து அனுப்பி வைத்துவிட்டார்களே.

மரணத்தில் கூட கண்ணியத்தைக் காட்டாமல் எப்போது இறந்தார் என்பதில் கூட குளறுபடி செய்யவேண்டிய சுய நல மனிதர்கள் தான் அவரைச் சுற்றிலும் இருந்திருக்கிறார்கள் போலும்.

மொத்தத்தில்,  ஜெயலலிதா என்னும் " அடிமைப் பெண்", ஐந்துமுறை நாட்டை ஆண்டாலும், இறுதி வரை தனக்கு விருப்பம் இல்லாத வாழ்வைத்தான் பாவம் வாழ்ந்து விட்டுப் போயிருக்கிறார்.

மரணத்தின் மூலம், விட்டு விடுதலையாகி....

#ஜெயலலிதா, தன் சுய சரிதையில் தனது வாழ் நாளில் சுதந்திரமாக தனக்குப் பிடித்த விசயம் எதையும் செய்ய முடிந்ததில்லை என்று குறிப்பிட்டிருப்பார்.

#அடிமைப்பெண்
#அம்மா!!

#மனம்_வலித்தது!!

#மனம்_வலித்தது!!

No comments:

Post a Comment