Powered By Blogger

Dec 22, 2016

*நான்... நான்... நான்...*

*நான்* சம்பாதித்தேன்,

*நான்* காப்பாற்றினேன்,

*நான்* தான் வீடு கட்டினேன்,

*நான்* தான் உதவி  செய்தேன்,

*நான்* உதவி  செய்யலனா? அவர்  என்ன ஆகுறது!!!!!

*நான்* பெரியவன்,

*நான்* தான்  வேலை  வாங்கி  கொடுத்தேன்,

*நான்  நான்  நான்  நான்*  என்று  மார்தட்டி  கொள்ளும் மனிதர்களே!!!

*நான்* தான்  என் இதயத்தை இயக்குகிறேன்  என்று  உங்களால் சொல்ல முடியுமா?

*நான்* தான்  என் மூளையை  இயக்குகிறேன் என்று  உங்களால் சொல்ல முடியுமா?

*நான்* தான்  என் இரண்டு  கிட்னியையும்  இயக்குகிறேன்  என்று  உங்களால்  சொல்ல முடியுமா?

*நான்* தான் என் வயிற்றில்  சாப்பிட்ட உணவில்  இருந்து சத்துக்களை  தனியாக  பிரித்து  இரத்தத்தில்  கலக்குகிறேன் என்று  உங்களால்  சொல்ல முடியுமா??

*நான்* தான்  பூக்களை  மலர  வைக்கிறேன்  என்று  உங்களால்  சொல்ல முடியுமா ?

*நான்* தான்  காய்களை பழமாக மாற்றுகிறேன் என்று  உங்களால் சொல்ல முடியுமா ?

*நான்* தான் கடலில்  மீன்  பிடிக்கிறவனுடைய வலையில்  மீனை சிக்க  வைக்கிறேன்  என்று  உங்களால்  சொல்ல முடியுமா? 

இவைகள் அனைத்தையும்  எவன்  செய்கிறானோ இயக்குகிறானோ அந்த இறைவன் ஒருவனுக்கே *"நான்"* என்று  சொல்வதற்கு அதிகாரமும்  உரிமையும்  உண்டு..

ஆகையால் *நான்* என்ற அகந்தையை விட்டு அனைவரிடமும் *அன்பாக* இருங்கள்.
*உலகைப்பற்றிக் கவலைப்படாதே ஏனெனில் அது இறைவனுக்குரியது.*

*உணவைப்பற்றி கவலைப்படாதே !அது இறைவனிடமிருந்தே கிடைக்கிறது.*

No comments:

Post a Comment