Powered By Blogger

Dec 6, 2016

கவிஞர் சினேகனின் உருக்கமான கவி வரிகள்

அம்மா முதல்வரின் நலன் வேண்டி கவிஞர் சினேகனின் உருக்கமான கவி வரிகள்...

கண்ணுறங்க
நேரமின்றி
கனப்பொழுதும்
உழைச்சிங்க....

எங்க தேவை
என்னானு
கேட்காமல்
செஞ்சிங்க....

எப்போதும்
மக்களத்தான்
மனசுக்குள்
நினைச்சிங்க...

உடல் நலம்
பார்க்காமல்
ஏம்மா இப்படி
களச்சிங்க...

அம்மா
என்னமா ஆச்சு
உங்களுக்கு...

பொது வாழ்வு
போதுமுன்னு
சுய வாழ்வ
துறந்திங்க...

தமிழக
நலனுக்கே
தன்னையே
இழந்திங்க...

எத்தனையோ
போராட்டம்
எல்லாத்தையும்
வென்றிங்க...

காலத்தின்
வெல்லத்தில்
கரை ஏறி
நின்றிங்க...

அம்மா
என்னமா ஆச்சு
உங்களுக்கு...

துஞ்சாமல்
அஞ்சாமல்
துணிவோட
நின்றிங்க...

துஷ்டர்கள்
கூட்டத்தை
தூசிபோல
கடந்திங்க...

அரசியல்
போர்களத்தில்
அரசியாய்
நின்றிங்க...

அகிலமே
எதிர்த்தாலும்
நீங்கதானே
வென்றிங்க...

அம்மா
என்னமா ஆச்சு
உங்களுக்கு...

அறத்தோடும்
திறத்தோடும்
அடி எடுத்து
வச்சிங்க...

அன்பு என்னும்
மந்திரத்தால்
அனைவரையும்
ஜெய்ச்சிங்க...

பாரதியின்
பெண் உருவாய்
பார் புகழ
பிறந்திங்க...

உங்கள் நலம்
பாதுக்காக்க
ஏம்மா நீங்க
மறந்திங்க...

அம்மா
என்னம்மா ஆச்சு
உங்களுக்கு...

யார்யாரோ
ஏதேதோ
தகவல்கள்
தாராங்க...

இருதயம்
வெடிப்பதுபோல்
பயமுறுத்தி
போறாங்க...

நன்றி கெட்ட
உலகந்தான்
நக்கலா
சிரிக்குதும்மா...

ஒவ்வொரு
நாளிகையும்
உதிரந்தான்
கொதிக்குதும்மா...

அம்மா
என்னம்மா ஆச்சு
உங்களுக்கு...

தலைக்கோதி
தட்டித்தர
சந்தியா
அம்மா இல்ல...

எத்தனையோ
தெய்வங்கள்
எதுக்குமே
கண்ணு இல்ல...

யாரு கண்ணு
பட்டுடுச்சோ
யார நானும்
குத்தம் சொல்ல...

ஆறுதலா
ஒரு வார்த்தை
சொல்ல இங்க
யாரும் இல்ல...

அம்மா
என்னம்மா ஆச்சு
உங்களுக்கு....

நீங்க செஞ்ச
புண்ணியங்கள்
உங்களுக்கு
உதவலையா...

நாங்க படும்
பாடு அந்த
கடவுளுக்கு
தெரியலையா....

நீங்க மட்டும்
எங்களுக்கு
பத்திரமா
வேணும் அம்மா...

நீங்க இல்லா
உலகத்துல
எதுக்கு நாங்க
வாழனும்மா....

அம்மா
என்னம்மா ஆச்சு
உங்களுக்கு...

அம்மா
நீங்க வேணும்மா
எங்களுக்கு...

அம்மா
பயமா
இருக்குமா...

அம்மா
என்னமா ஆச்சு
உங்களுக்கு....

சீக்கிரம்
வாங்கமா
வீட்டுக்கு...
▂ ▃ ▅ ▆ ▇ █ PvS █ ▇ ▆ ▅ ▃ ▂

No comments:

Post a Comment