Powered By Blogger

Dec 6, 2016

அம்மா அம்மா

போய் வா நதியலையே..

கள்ளமில்லை
கபடில்லை
பயமில்லை

சொன்னால் சொன்னதுதான்..

சொன்ன வார்த்தையில்
மாற்றமில்லை..

முன் வைத்த காலைப்
பின் வைத்ததுமில்லை..

எவர் வீட்டு வாசலிலும்
இறைஞ்சி நின்றதில்லை..

எவருக்காகவும்
எதற்காகவும்
எங்கேயும்
காத்திருந்ததுமில்லை..

ஜெ.ஜெயலலிதா
என்னும் நான்..
எனும் வார்த்தைகள்
இனி வரப் போவதுமில்லை..

போ..

போய் வா நதியலையே..

நீ
இருக்கும் பொழுது
தெரியாத
அருமையை
இனி..
நீ
இல்லாத
இடத்தில்
உணரும்
தமிழகம்..

ஒவ்வொரு
செயலின் பொழுதும்
நிச்சயம்
ஒரு கேள்வி வரும்..

அந்த அம்மா மட்டும்
இப்ப இருந்துதுன்னா?

அந்தக் கேள்விதான்
உன் சாதனை..

அந்தக் கேள்விதான்
உன் வாழ்க்கை..

போ..

போய் வா நதியலையே..

7 கோடி பேர் இருந்தும்
அனாதையாய்
உணர்கிறது
தமிழகம்..

ஒற்றை விரல்
சொடுக்கி
எவர் எம்மை
இனி
ஆட்சி செய்வர்?

இனி
எவர் வந்து
நிற்பர்
அந்த
வெள்ளைப் பால்கனியில்?

நீ
சரித்திரம்தான்..

காலம்
அதை நிச்சயம்
நிருபிக்கும்..

போ..

இனியாகிலும்
அமைதியாய்..

உன்னைச் சுற்றிலும்

இனி..

கயவர்கள் இல்லை..
வேடதாரிகள் இல்லை..
கபட நாடகங்கள் இல்லை..
வழக்குகள் இல்லை..

நிம்மதியாய்
கண்ணுறங்கு
வங்கக் கடலோரமாய்..

போ..

போய் வா நதியலையே..

No comments:

Post a Comment