Powered By Blogger

Dec 6, 2016

ஆழ்ந்த இரங்கல்கள்

ஒரு தி மு க நண்பரின் எழுத்து...

எதிரியாகவே இருந்தாலும் எதிரில் நிற்பது சிங்கம் என்றல்லவா பெருமை கொண்டிருந்தோம்...  நீங்கள் ஆளக் கூடாது என்றுதானே நினைத்தோம்.  வாழக்கூடாது என ஒரு போதும் நினைக்கவில்லையே தாயே..!!

[06/12 10:52 am] ‪+91 81221 53895‬: Reality.... NO one can deny this.

உறக்கம் வர மறுக்கிறது.
இத்தனைக்கும் அவர் எனக்குப் பிடித்த தலைவரில்லைதான்.
அப்படியிருந்தும் மனம் கசிகிறது.

பாவம் ...
ஒரு பெண்

தனித்து நின்று அரசியலில் வென்று காட்டியவர்.
எதிரிகளை தயவு தாட்சண்யமின்றி பந்தாடியவர்.
தனது பிடிவாத குணத்தை யாருக்காகவும்
தளர்த்திக் கொள்ளாதவர்.

இந்த குணங்கள் அவரிடம் இல்லாதிருந்தால்
ஒருவேளை எனக்கும் அவர் பிடித்த தலைவராக இருந்திருக்கலாம்.

ஆனால் ...
அந்த குணங்கள் அவரிடம் இல்லாதிருந்தால்
அரசியலில் இருந்து அவரை எப்போதோ ஒழித்துக் கட்டியிருப்பார்கள்.
அவரது ஆட்சியில் மதக் கலவரங்கள் இல்லை. மனதுக்கு பெரும் நிம்மதி தந்த விஷயம் அது.

அவரைப் பாராட்டவோ
பரிகசிக்கவோ பல விஷயங்கள் நம்மிடம் இருக்கலாம். அதையெல்லாம் மீறிய ஒரு பரிவு அவர்மீது நமக்கு ஏற்படுகிறதென்றால்
அது எதனால் ஏற்படுகிறதென்று விளக்கம் சொல்லத் தெரியவில்லை.

நம்மோடு இத்தனை காலம் நெருக்கமாக வாழ்ந்த ஒரு பெண் மிகுந்த அவஸ்தைகளோடு
அரசியலோடு ரகசியங்களோடு தான் மோசமாக பாதிக்கப்பட்ட நிலையிலும் தன்னை நேசிக்கும் மக்களை பார்க்க முடியாமல் அவர்களுக்கு எந்த செய்தியும் சொல்லமுடியாமல் வாழ்க்கையோடு போராடியது மிகுந்த துயரத்தை தருகிறது.

அவர் ஆத்மா சாந்தியடையட்டும்  என்று பிரார்த்திப்பதைத் தவிர வேறொன்றும் சொல்லத் தெரியவில்லை.
[06/12 10:52 am] ‪+91 81221 53895‬: ஆயிரம் பேர் இருந்தும்
ஆயிரம் கோடி பணமிருந்தும் அத்தனை அதிகாரங்களும் விரல் நுனியில் இருந்தும்!

ஒரு கையளவு காற்றுக்காக
அந்த இதயமும் நுரையிரலும் எத்தனை எத்தனை ஏக்கங்களோடு
தவித்துக்கொண்டிருந்தது

நினைச்சுப்பார்த்தால்
இந்த வாழ்க்கையில்
எதுவுமே பெரிசில்லை கிடைத்த வாழ்க்கையை நிம்மதியாக, சந்தோஷமாக வாழுங்கள் - வாழ விடுங்கள்!!!

ஆழ்ந்த இரங்கல்கள்

No comments:

Post a Comment