Powered By Blogger

Dec 6, 2016

*தமிழக முதல்வர் அம்மா இரவு 11:30 மணிக்குஉயிரிழந்தார்

*தமிழக முதல்வர் அம்மா இரவு 11:30 மணிக்குஉயிரிழந்தார் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.*
*முதல்வரின் பூத உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்படும் என்று அறிவிப்பு.*
*3 நாட்களுக்கு அரசு விடுமுறை அறிவிப்பு*
*பள்ளிகள், கல்லூரிகள், அலுவலங்களுக்கு அரசு விடுமுறை*

*ஒரு மாநிலத்தின் முதல்வர் மரண அடைந்தால் அதை வெளியிடுவதற்கு என்று இந்திய அரசியல் சாசனத்தில் Indian constutional law சில அறிவுறுத்தல்கள் இருக்கின்றன...இது சட்டம் ஒழுங்கு சம்மந்த பட்ட விஷயம்...ஒரு மாநில முதல்வர் இறப்பு உறுதி செய்யப்பட்டவுடன் அந்த மாநில ஆளுனர் அதை உறுதி செய்ய வேண்டும், பின் அந்த தகவலை மத்திய உள்துறை அமைச்சர், பிரதமர் ஆகியோருக்கு தெரியப்படுத்த வேண்டும் , பிரதமர் அந்த தகவலை குடியரசு தலைவருக்கு தெரியப்படித்துவர், மத்திய அரசின் வழிகாட்டுதலோடு புதிய பொறுப்பு முதல்வரை தேர்ந்தடுத்து , மாநில சட்டம் ஒழுங்கை உறுதி செய்துக்கொண்ட பிறகு மத்திய அரசின் அனுமதியோடு நடு இரவு அல்லது வெடியற்காலை ஆளுநர் முறையாக தகவலை மக்களுக்கும் ஊடகத்திற்கும் சொல்லுவார்...இது தான் அண்ணாதுரை மற்றும் எம்.ஜி.ஆர் மறைவின் பொழுது நடந்தது...இதே விஷயத்தை தான் தற்பொழுதும் கடைபிடிப்பார்கள்..*

தமிழக மக்களுக்கும் அஇஅதிமுக தொண்டர்கள் அனைவருக்கும் அம்மாவின் தீவிர அபிமானியின் ஆழ்ந்த அனுதாபங்கள். இறைவன் திருவடியில் அவரது ஆன்மா சாந்தியடையட்டும்

[06/12 1:12 am] ‪+91 97882 28155‬: 🔴 *முக்கியத் தகவல்*

*புரட்சி தலைவர் எம்ஜிஆர் சமாதி அருகே "அம்மா" அவர்களின் உடல் நல்லடக்கம் செய்ய வாய்ப்பு!*

*மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்யபடுவதற்கான அரசாணை பிறப்பிக்கபட்டதாக தகவல்!*
[06/12 1:15 am] ‪+91 97882 28155‬: அரசியலை கடந்து, ஒரு பெண்ணாக பல சோதனைகளை கடந்த இரும்பு மங்கை.... சிலர் சரித்திரத்தில் இடம் பிடிக்கின்றனர்... சிலர் சரித்திரமாகவே மாறுகின்றனர்..." அம்மா" என்றும் ஒரு சரித்திரம்....

சாதிக்க வேண்டிய பல விஷயங்களை பாதியிலேயே விட்டு சென்று விட்டாயே சாதனைத் தாயே. கோடானு கோடி மக்கள் அம்மா என்றழைத்த உன் மக்களைத் தவிக்க விட்டு  மறைந்தாயே இதயத் தாயே. உலக சரித்திரத்தில் நீங்கா இடம் பெற்ற சரித்திர நாயகியே!  ஏழைகளின் தெய்வத் தாயே!! வாழ்க நின் புகழ்.

அம்மையாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வணங்குகிறேன்

[06/12 6:25 am] ‪+91 97883 37821‬: சென்னை, பொதுமக்கள் அஞ்சலிக்காக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் உடல் ராஜாஜி மண்டபத்தில் வைக்கப்பட்டு உள்ளதுமுதல்–அமைச்சர் ஜெயலலிதா நேற்று இரவு 11.30 மணி அளவில் மரணம் அடைந்தார். இதையொட்டி அப்பல்லோ ஆஸ்பத்திரி முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதுபற்றி அறிந்த அ.தி.மு.க. தொண்டர்கள் ஆஸ்பத்திரியில் திரளாக குவிந்தனர்.இதனிடையே ஆஸ்பத்திரியில் இருந்து ஜெயலலிதா உடல் வாகனத்தில் ஏற்றப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த தொண்டர்கள் ஜெயலலிதாவின் உடலை பார்த்து கதறி அழுதனர்.பின்னர் ஜெயலலிதா உடல் போயஸ் கார்டனில் உள்ள அவருடைய இல்லத்துக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது. அங்கு இறுதிச்சடங்குகள் நடைபெற்றது.  அதன்பிறகு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக ஜெயலலிதாவின் உடல் ராஜாஜி மண்டபத்திற்கு காலை 5.50 மணியளவில் போயஸ் கார்டனில் இருந்து எடுத்துச்செல்லப்பட்டது. ஆயுதம்  தாங்கிய போலீஸ் வாகனங்களுடன் ஜெயலலிதா உடல் எடுத்துச்செல்லப்பட்டது.  ஜெயலலிதா வழக்கமாக கோட்டைக்கு செல்லும் கடற்கரை சாலை வழியாகவே அவரது உடல் எடுத்துச்செல்லப்பட்டது.  காலை 6.10 மணியளவில் அவாது உடல் ராஜாஜி அரங்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அதிகாலை முதலே பொதுமக்கள் அதிமுக தொண்டர்கள் ராஜாஜி அரங்கில் குவிந்துள்ளனர். இன்னும் மக்கள் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், ராஜாஜி அரங்கில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.
[06/12 6:32 am] ‪+91 97883 37821‬:

தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் செவ்வாய்க்கிழமை (டிச. 6) அதிகாலை 1 மணி அளவில் பொறுப்பேற்றார்.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், மறைந்த ஜெயலலிதா அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அதே 31 பேர் மீண்டும் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.
முதல்வராக ஓ.பன்னீர்செல்வத்துக்கும், பிற அமைச்சர்களுக்கும் பதவியேற்பு உறுதிமொழியும், ரகசிய காப்பு பிரமாணத்தையும் தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் செய்து வைத்தார்.
சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவராக...:முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவி ஏற்ற பிறகு, 31 அமைச்சர்களும் ஒரே நேரத்தில் கூட்டாகப் பொறுப்பேற்றனர். முன்னதாக, அதிமுக தலைமை அலுவலகத்தில் அந்தக் கட்சியின் சட்டப் பேரவை உறுப்பினர்கள் அனைவரும் கூடினர். கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடந்த கூட்டத்தில் சட்டப் பேரவை அதிமுக குழுத் தலைவராக ஓ.பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, அதிமுக சட்டப் பேரவை உறுப்பினர்களும் ஆளுநர் மாளிகைக்கு புறப்பட்டுச் சென்றனர். பதவியேற்பு நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசின் பொதுத் துறை அதிகாரிகள் ஏற்கெனவே செய்திருந்தனர்.
மௌன அஞ்சலி: பதவியேற்பு நிகழ்வு தொடங்குவதற்கு முன்னதாக, ஜெயலலிதாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இரண்டு நிமிஷங்கள் மௌனம் கடைப்பிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, பதவியேற்பு நிகழ்வு நடந்தது. முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றுக் கொண்டார்.
அவரைத் தொடர்ந்து, திண்டுக்கல் சி.சீனிவாசன், செல்லூர் கே.ராஜூ, தங்கமணி, கே.பி.அன்பழகன் என ஜெயலலிதாவின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அனைத்து அமைச்சர்கள் கூட்டாக மொத்தமாக பதவியேற்றுக் கொண்டனர்.
மூன்றாவது முறையாக முதல்வர்:

No comments:

Post a Comment