Powered By Blogger

Nov 27, 2016

நம் மாநிலம் குறித்து நாம் தெரிந்து கொள்ள சில முக்கிய தகவல்கள்

1 ) இந்திய மக்கள் தொகையில் தமிழகம் எந்த இடத்தில் உள்ளது?
7வது இடம்
2 ) இந்திய மக்கள் வளர்ச்சியில் தமிழகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது?
23 வது இடம்
3 ) இந்தியாவின் கல்வியறிவில் தமிழக ஆண்கள் எந்த இடத்தில் உள்ளனர்?
16வது இடம்
4 ) இந்தியாவின் கல்வியறிவில் தமிழக பெண்கள் எந்த இடத்தில் உள்ளனர்?
15வது இடம்
5 ) இந்தியாவின்
கல்வியறிவில் தமிழகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது?
14வது இடம்
6 ) சென்னை உயர்நீதி மன்றத்தின் கிளை எங்குள்ளது?
மதுரை
7 ) சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைகிளை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
2004
8 ) தமிழக மக்களின் சராசரி தனிநபர் வருமானம் எவ்வளவு?
72993
9 ) தமிழக உயர்நீதி மன்றம் எங்குள்ளது?
சென்னை
10 ) தமிழக கடற்கரையின் மொத்த நீளம் எவ்வளவு?
1076 கி.மீ
11 ) தமிழக சட்டசபை எந்த ஆண்டு முதல் ஒரு அவையாக மாற்றப்பட்டது
1986
12 ) தமிழகத்தில் அதிக அளவு கல்வியறிவு பெற்ற மாவட்டம் எது?
கன்னியாக்குமரி (92.14 சதவீதம்)
13 ) தமிழகத்தில் அதிக அளவு பெண்கள் உள்ள மாவட்டம்?
சென்னை (23,23,454)
14 ) தமிழகத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது?
சென்னை (46,81,087)
15 ) தமிழகத்தில் உள்ள ஆண்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு?
68.45 ஆண்டுகள்
16 ) தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்கள் எத்தனை?
13 மாவட்டங்கள்
17 ) தமிழகத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை எவ்வளவு?
234
18 ) தமிழகத்தில் உள்ள சட்டமன்ற நியமன உறுப்பினர் எண்ணிக்கை எவ்வளவு?
1
19 ) தமிழகத்தில் உள்ள துறைமுகங்கள் எவ்வளவு?
12 துறைமுகங்கள்
தமிழகத்தில் உள்ளன
20 ) பன்னாட்டு விமான நிலையம் எங்குள்ளது?
சென்னை
21 ) தமிழகத்தில் உள்ள பெண்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு?
71.54 ஆண்டுகள்
22 ) தமிழகத்தில் உள்ள மொத்த கிராமங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
15979
23 ) தமிழகத்தில் உள்ள மொத்த நகர பஞ்சாயத்துக்களின் எண்ணிக்கை எவ்வளவு?
561
24 ) தமிழகத்தில் உள்ள மொத்த நகராட்சிகளின் எண்ணிக்கை எவ்வளவு?
146
25 ) தமிழகத்தில் உள்ள ராஜ்யசபாவின் எண்ணிக்கை எவ்வளவு?
18
26 ) தமிழகத்தில் உள்ள லோக்சபாவின் எண்ணிக்கை எவ்வளவு?
39
27 ) தமிழகத்தில் குறைந்த எழுத்தறிவு கொண்ட மாவட்டம் எது?
தர்மபுரி (64.71 சதவீதம்)
28 ) தமிழகத்தில் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது?
பெரம்பலூர் 5,64,511
29 ) தமிழகத்தில் மக்கள் நெருக்கம் கொண்ட மாவட்டம்?
சென்னை (26903பேர் ஒரு சதுர கி.மீட்டரில் வாழ்கின்றனர்)
30 ) தமிழகத்தில் மிகக்குறைந்த மக்கள் நெருக்கம் கொண்ட மாவட்டம் எது?
நீலகிரி (1சதுர கி.மீட்டரில் 288 மட்டுமே வாழ்கின்றனர்)
31 ) தமிழகத்தில் மிக்குறைந்த பெண்கள் கொண்ட மாவட்டம் எது?
தர்மபுரி
32 ) தமிழகத்திலுள்ள மொத்த மாவட்டங்கள் எத்தனை?
32
33 ) தமிழகத்தின் 31 வது மாவட்டம் எது?
அரியலூர்
34 ) தமிழகத்தின் 32 வது மாவட்டம் எது?
திருப்பூர்
35 ) தமிழகத்தின் கல்வியறிவு எவ்வளவு சதவீதம்
80.33 சதவீதம்
36 ) தமிழகத்தின் காடுகளின் பரப்பு எவ்வளவு?
17.58 சதவீதம்
37 ) தமிழகததின் மாநில விலங்கு எது?
வரையாடு
38 ) தமிழகத்தின் முக்கிய 3 துறைமுகங்கள் எது?
சென்னை, எண்ணூர், தூத்துக்குடி
39 ) தமிழகத்தின் முக்கிய ஆறுகள் எது?
காவேரி, வைகை, தாமிரபரணி, பாலாறு, பவானி
40 ) தமிழகத்தின் முக்கியமான 6 விமானநிலையங்கள் எங்குள்ளது?
1. சென்னை
2. கோவை
3. மதுரை
4. திருச்சி
5 தூத்துக்குடி
6 சேலம்
41 ) தமிழ்நாட்டில் 2011 கணக்கெடுப்பின்படி பாலின விகிதம் எவ்வளவு?
999பெண்கள்(1000 ஆண்கள்)
42 ) தமிழ்நாட்டில் காடுகள் அதிகமாக உள்ள மாவட்டங்கள் எவை?
1. நீலகிரி
2. சேலம்
3. வேலூர்
4. கன்னியாக்குமாரி
43 ) தமிழ்நாட்டில் காடுகள் குறைவாக உள்ள மாவட்டங்கள் எவை?
1. திருவாரூர்
2. இராமநாதபுரம்
3. தூத்துக்குடி
4. கடலூர்
44 ) தமிழ்நாட்டில் சமத்துவபுரம் தொடங்கப்பட்ட முதல் மாவட்டம் எது?
மதுரை (மேலக்கோட்டை - ஆண்டு 1997)
45 ) தமிழ்நாட்டின் இணைய தளம் எது?
www.tn.gov.in
46 ) தமிழ்நாட்டின் தலைநகரம் எது?
சென்னை
47 ) தமிழ்நாட்டின் மக்கள் தொகை அடர்த்தி எவ்வளவு?
ஒரு ச.கி.மீட்டருக்கு 555 பேர்
48 ) தமிழ்நாட்டின் மாநில அரசு சின்னம் எது?
திருவில்லிபுத்தூர் கோபுரம்
49 ) தமிழ்நாட்டின் மாநில எல்லையை குறிப்பிடுக?
கிழக்கே வங்காள விரிகுடா, மேற்கே கேரளா, வடக்கே ஆந்திரபிரதேசம், தெற்கே இந்தியபெருங்கடல்
50 ) தமிழ்நாட்டின் மாநில தமிழ்தாய் வாழ்த்து எது?
நீராடும் கடலுடுத்த
51 ) தமிழ்நாட்டின் மாநில நடனம் எது?
பரத நாட்டியம்
52 ) தமிழ்நாட்டின் மாநில பறவை எது?
மரகதப்புறா
53 ) தமிழ்நாட்டின் மாநில மரம் எது?
பனைமரம்
54 ) தமிழ்நாட்டின் மாநில மலர் எது?
செங்காந்தர் மலா்
55 ) தமிழ்நாட்டின் மாநில விளையாட்டு எது?
கபடி
56 ) தமிழ்நாட்டின் மொத்த பரப்பு எவ்வளவு?
1,30,058 ச.கி.மீ
57 ) தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகை எவ்வளவு?
7,21,38,958
ஆண் 36158871
பெண் 35980087

தமிழகத்தை சேர்ந்தவர்களே.

கல்லணையை கட்டிய கரிகாலனை தெரியாது.......

மிக பெரிய போர் வீரன் சோழனை தெரியாது........

முதல் சுதந்திர போராட்ட வீரன் புலித்தேவனை தெரியாது.......

முதல் சுதந்திர போராட்ட வீரமங்கை வேலுநாச்சியாரை தெரியாது.......

குல தெய்வ கோவிலை காக்க தூக்கு கயிறு ஏறிய மரு திருவரை தெரியாது .......

முதல் தற்கொலை படை தாக்குதல் நடத்திய வீரப்பெண் குயிலியை தெரியாது........

டச்சு படையை வென்ற குமரி வர்மக்கலை ஆசான் அனந்தபத்மனாபனை தெரியாது........

ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை முதன் முதலில் கூறிய செண்பகராமனை தெரியாது .......

ஜெர்மனியில் இருந்து வெடிகுண்டுகளை கப்பலில் கடத்தி வந்த நீலகண்டபிரமச்சாரியை தெரியாது.....

ஆங்கிலேய கலெக்டரை நேருக்கு நேர் நின்று சுட்டுக் கொன்ற வாஞ்சியை தெரியாது........

வெள்ளையனை எதிர்த்து வணிகம் செய்த ஒரே சுதந்திர போராட்ட தியாகி சிதம்பரனார் தெரியாது........

இவர்கள் அனைவரும் தமிழகத்தை சேர்ந்தவர்களே.

இவர்களை போல இன்னும் பல லட்சக் கணக்கான பெயர்கள் உள்ளன.

*1.வரலாற்றின் தந்தை?* ஹெரடோடஸ்
*2.. புவியலின் தந்தை?* தாலமி
*3..இயற்பியலின் தந்தை?* நியூட்டன்
*4..வேதியியலின் தந்தை?* இராபர்ட் பாயில்
*5..கணிப்பொறியின் தந்தை?*சார்லஸ் பேபேஜ்
*6..தாவரவியலின் தந்தை?* தியோபிராச்டஸ்
*7..விலங்கியலின் தந்தை?* அரிஸ்டாட்டில்
*8..பொருளாதாரத்தின் தந்தை?*ஆடம் ஸ்மித்
*9..சமூகவியலின் தந்தை?* அகஸ்டஸ் காம்தே
*10..அரசியல் அறிவியலின் தந்தை?* அரிஸ்டாட்டில்
*11..அரசியல் தத்துவத்தின் தந்தை?*பிளேட்டோ
*12..மரபியலின் தந்தை?* கிரிகர் கோகன் மெண்டல்
*13..நவீன மரபியலின் தந்தை?* T .H . மார்கன்
*14..வகைப்பாட்டியலின் தந்தை?* கார்ல் லின்னேயஸ்
*15..மருத்துவத்தின் தந்தை?* ஹிப்போகிறேட்டஸ்
*16..ஹோமியோபதியின் தந்தை?*சாமுவேல் ஹானிமன்
*17..ஆயுர்வேதத்தின் தந்தை?*தன்வந்திரி
*18..சட்டத்துறையின் தந்தை?*ஜெராமி பென்தம்
*19..ஜியோமிதியின் தந்தை?* யூக்லிட்
*20..நோய் தடுப்பியலின் தந்தை?* எட்வர்ட் ஜென்னர்
*21..தொல் உயரியியலின் தந்தை?*சார்லஸ் குவியர்
*22..சுற்றுச் சூழலியலின் தந்தை?* எர்னஸ்ட் ஹேக்கல்
*23..நுண் உயரியியலின் தந்தை?* ஆண்டன் வான் லூவன் ஹாக்
*24..அணுக்கரு இயற்பியலின் தந்தை?* எர்னஸ்ட் ரூதர்போர்ட்
*25..நவீன வேதியியலின் தந்தை?* லாவாயசியர்
*26..நவீன இயற்பியலின் தந்தை?* ஐன்ஸ்டீன்
*27..செல்போனின் தந்தை?* மார்டின் கூப்பர்
*28..ரயில்வேயின் தந்தை?* ஜார்ஜ் ஸ்டீவன்சன்
*29..தொலைபேசியின் தந்தை?*கிரகாம்ப்பெல்
*30..நகைச்சுவையின் தந்தை?*அறிச்டோபேனஸ்
*31..துப்பறியும் நாவல்களின் தந்தை?* எட்கர் ஆலன்போ
*32..இந்திய சினிமாவின் தந்தை?* தாத்தா சாகேப் பால்கே
*33..இந்திய அணுக்கருவியலின் தந்தை?* ஹோமி பாபா
*34..இந்திய விண்வெளியின் தந்தை?* விக்ரம் சாராபாய்
*35..இந்திய சிவில் விமானப் போக்குவரத்தின் தந்தை?* டாட்டா
*36..இந்திய ஏவுகணையின் தந்தை?* அப்துல் கலாம்
*36..இந்திய வெண்மைப் புரட்சியின் தந்தை?* வர்க்கீஸ் குரியன்
*37..இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை?* சுவாமிநாதன்
*38..இந்திய பட்ஜெட்டின் தந்தை?* ஜேம்ஸ் வில்சன்
*39..இந்திய திட்டவியலின் தந்தை?* விச்வேச்வரைய்யா
*40..இந்திய புள்ளியியலின் தந்தை?* மகலனோபிஸ்
*41..இந்திய தொழில்துறையின் தந்தை?* டாட்டா
*42..இந்தியப் பொருளாதாரத்தின் தந்தை?* தாதாபாய் நௌரோஜி
*43..இந்தியப் பத்திரிக்கையின் தந்தை?* ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி
*44..இந்திய மறுமலர்ச்சியின் தந்தை?* ராஜாராம் மோகன்ராய்
*45..இந்திய கூட்டுறவின் தந்தை?* பிரடெரிக் நிக்கல்சன்
*46..இந்திய ஓவியத்தின் தந்தை?* நந்தலால் போஸ்
*47..இந்திய கல்வெட்டியலின் தந்தை?* ஜேம்ஸ் பிரின்சப்
*48..இந்தியவியலின் தந்தை?* வில்லியம் ஜான்ஸ்
*49..இந்திய பறவையியலின் தந்தை?* எ.ஒ.ஹியூம்
*50..இந்திய உள்ளாட்சி அமைப்பின் தந்தை?* ரிப்பன் பிரபு
*51..இந்திய ரயில்வேயின் தந்தை?* டல்ஹௌசி பிரபு
*52..இந்திய சர்க்கஸின் தந்தை?* கீலெரி குஞ்சிக் கண்ணன்
*53..இந்திய வன மகோத்சவத்தின் தந்தை?* கே.எம் முன்ஷி
*54..ஜனநாயகத்தின் தந்தை?*பெரிக்ளிஸ்
*55..அட்சுக்கூடத்தின் தந்தை?* கூடன்பர்க்
*56..சுற்றுலாவின் தந்தை?* தாமஸ் குக்
*57..ஆசிய விளையாட்டின் தந்தை?* குருதத் சுவாதி
*58..இன்டர்நெட்டின் தந்தை?* விண்டேன் சர்ப்
*59..மின் அஞ்சலின் தந்தை?*ரே டொமில்சன்
*60..அறுவை சிகிச்சையின் தந்தை?* சுஸ்ருதர்
*61..தத்துவ சிந்தனையின் தந்தை?* சாக்ரடிஸ்
*62..கணித அறிவியலின் தந்தை?* பிதாகரஸ்
*63..மனோதத்துவத்தின் தந்தை?*சிக்மண்ட் பிரைடு
*64..கூட்டுறவு அமைப்பின் தந்தை?*இராபர்ட் ஓவன்
*65..குளோனிங்கின் தந்தை?*இயான் வில்முட்
*66..பசுமைப்புரட்சியின் தந்தை?* நார்மன் போர்லாக்
*67..உருது இலக்கியத்தின் தந்தை?* அமீர் குஸ்ரு
*68..ஆங்கிலக் கவிதையின் தந்தை?* ஜியாப்ரி சாசர்
*69..அறிவியல் நாவல்களின் தந்தை?* வெர்னே
*70..தமிழ்நாடு நூலக இயக்கத்தின் தந்தை?* அவினாசி மகாலிங்கம

தெய்வத்தால்* ஆகாது எனினும் முயற்சி தன் மெய்வருத்தக் *கூலி தரும் ”

ஒரு கிராமத்திற்கு
ஒரு முனிவர் வந்திருந்தார்.....

   ஊருக்கு மத்தியில் இருந்த
மரத்தடியில் அமர்திருந்தார்......

    யாருமே ஊரில் அவரைக்
கண்டு கொள்ளவில்லை.

முனிவர் அல்லவா ?
கோபத்தில் சாபமிட்டார் அந்த
ஊருக்கு ..”
     இன்னும் 50 வருடங்களுக்கு இந்த
ஊரில் மழையே பெய்யாது.வானம் பொய்த்துவிடும் ”

இந்த சாபம் பற்றி கேள்விப்பட்ட அனைவரும் என்ன
செய்வது என்றே தெரியாமல்
கவலையோடு அவரின்
காலடியில் அமர்ந்து
மன்னிப்பு கேட்டனர்.

சாபத்திற்கு விமோசனம்
கிடையாது என்று
கூறிவிட்டார் முனிவர்..

வேறு வழியின்றி
அனைவருமே அவரின்
காலடியில் அமர்ந்து இருந்தனர்..

மேலிருந்து
இதைக் கவனித்த பரந்தாமன்
தனது சங்கினை எடுத்து
தலைக்கு வைத்து
படுத்துவிட்டான்
( பரந்தாமன் சங்கு ஊதினால் மழை
வரும் என்பது
நம்பிக்கை ).

இன்னும் 50
வருடங்கள்மழை பெய்ய
வாய்ப்பில்லை என்பதால்
இனி சங்குக்கு ஓய்வு
என்றே வைத்து விட்டான் …)

அந்த ஊரில் ஒரு அதிசயம் நடந்தது..

ஒரே ஒரு உழவன்
மட்டும் கலப்பையைக்
கொண்டு தினமும்
வயலுக்குச் சென்று வந்து கொண்டு இருதான்.
அவனை அனைவரும் பரிதாபமாகவே
பார்த்தனர்.

மழையே பெய்யாது எனும்போது இவன் வயலுக்கு போய் என்ன
செய்யப் போகிறான் என்ற வருத்தம் அவர்களுக்கு..

அவனிடம் கேட்டே விட்டனர்.நீ செய்வது
முட்டாள்தனமாக
இல்லையா என்று.. அதற்கு அவனின் பதில்தான்
நம்பிக்கையின் உச்சம்

”’ 50 வருடங்கள் மழை பெய்யாது
என்பது எனக்கும் தெரியும்.

உங்களைப் போலவே நானும்
உழுதிடாமல் இருந்தால் 50
வருடங்கள் கழித்து உழுவது
எப்பிடி என்றே எனக்கு
மறந்து போயிருக்கும்..
அதனால்தான் தினமும் ஒருமுறை
உழுது கொண்டு இருக்கிறேன் ”
என்றான்.

இது வானத்தில் இருந்த
பரந்தாமனுக்கு கேட்டது.

அவரும் யோசிக்க ஆரம்பித்தார்..

"50 வருசம்
சங்கு ஊதமால் இருந்தால்
எப்பிடி ஊதுவது என்று
மறந்து போயிருமே"

என்றே நினைத்து சங்கை எடுத்து
ஊதிப் பார்க்க ஆரம்பித்தார்..
இடி இடித்தது..

மழை பெய்ய
ஆரம்பித்தது..

நம்பிக்கை
ஜெயித்து விட்டது..

   *"தெய்வத்தால்* ஆகாது
எனினும் முயற்சி தன்
மெய்வருத்தக் *கூலி தரும் ”*

"Self confident never fail"
வெற்றி  நிச்சயம் !!!

Proceed with confidence

ஜெயித்தவர்களிடம் அப்படி என்னதான் இருக்கிறது

* சாதிக்க வேண்டும் என்ற சபதம் இருக்கிறது;

* வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியம் இருக்கிறது;

* வென்று காட்ட வேண்டும் என்ற வீம்பு இருக்கிறது;

* அடைவதற்கு என்று ஒரு லட்சியம் இருக்கிறது;

* அந்த லட்சியத்தில் ஒரு தீவிரம் இருக்கிறது;

* வாய்ப்பு எங்கே எங்கே என்று தேடுகின்ற தாகம் இருக்கிறது;

* வாய்ப்பு வரவில்லை என்றால் அதை உருவாக்கும் திறமை இருக்கிறது;

* உணவு, உறக்கம் இவற்றைக்கூட ஒதுக்கி வைக்கும் உழைப்பு இருக்கிறது;

தடை, தாமதம், தோல்வி எது வந்தாலும் சமாளிக்கும் தாராள மனம் இருக்கிறது.
அடிமேல் அடிபட்டாலும் அடுத்த அடியை எடுத்து வைக்கும் துணிச்சல் இருக்கிறது.
தங்கள் தகுதிக்கும், திறமைக்கும் சரியான தீனி எங்கே எங்கே என்கிற தேடல் இருக்கிறது.
சூழ்நிலைக்குத் தகுந்தபடி அனுசரித்துப்போகும் அடக்கம் இருக்கிறது.
விமர்சனத்தைச் சரியான விதத்தில் எடுத்துக்கொள்ளும் விவேகம் இருக்கிறது.
அறிவு, ஆற்றல், ஆதரவுகள் அனைத்தையும் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளும் மூளை இருக்கிறது.
குறிக்கோள் நோக்கிய வேலைகளுக்கு மட்டுமே நேரத்தை அதிகமாய் ஒதுக்கும் அக்கறை இருக்கிறது.
கடமைகள் காத்துக் கிடக்க, பொழுதுபோக்குகளில் புத்தியை செலுத்தாத பொறுப்பு இருக்கிறது.
நேற்றைவிட இன்று எவ்வளவு வளர்ந்தோம் எனஅளந்து அறியும் ஆர்வம் இருக்கிறது.
அத்தனைக்கும் அடிப்படையாய் அசைக்க முடியாத
தன்னம்பிக்கை இருக்கிறது.

கோபத்தின் கதை!*

__________________
ஒரு இளைஞனுக்கு👦🏻 அதிகமாக கோபம்😡 வந்து கொண்டே இருந்தது.

ஒரு நாள் அவன் அப்பா👨🏼 அவனிடம் சுத்தியலும்🔨 நிறைய ஆணிகளையும்🔩 கொடுத்தார்.

”இனிமேல் கோபம்😡 வரும் போது எல்லாம் 🏡வீட்டின் பின் சுவரில் ஆணி 🔩அடிக்குமாறு கூறினார்”.

முதல்நாள் 10 ஆணி,மறுநாள் 7,பின்பு 5,2 என படிப்படியாக ஆணி அடிக்க கோபம் குறைந்தது😔.

ஒரு நாள் ஒரே ஒரு ஆணி அடித்தான், மொத்தமாக 45 ஆணிகள் அடித்து உள்ளேன்.
இனி கோபம் வராது🤗 என அவன்👦🏻 அப்பாவிடம்👨🏼 கூறினான்.

இனிமேல் கோபம் வராத நாளில்😌 ஒவ்வொரு ஆணியாகப் பிடுங்கி விடு என்றார்.

45 நாளில் அடித்த ஆணிகள்🛠 பிடுங்கப்பட்டு விட்டன என பெருமையுடன் 😇அப்பாவை 👨🏼அழைத்து காட்டினான்🏢👈🏽.

உடனே அப்பா சொன்னார் ஆணிகளை🔩 பிடுங்கிவிட்டாய்,சுவற்றில் உள்ள ஒட்டைகளை🏢 என்ன செய்வாய்?🤕

உன் கோபம்😖 இது போல பலரை👩‍👩‍👧‍👦 காயப்படுத்தி இருக்கும்😒 அல்லவா?

The Power of Positive Thinking

தோல்வி மேல் தோல்வி அடைந்து விரக்தியின் விளிம்பில் இருந்த ஒருவர் பீலேவை சந்தித்தார். புலம்பினார்.

தனது வாழ்க்கையில் நல்ல விஷயங்களே நடக்கவில்லை என்றும், தான் செய்யும் செயல்கள் அனைத்தும் துன்பமாகவே முடிகிறது என்றும் பீலேவிடம் சொல்லி வருந்தினார்.

பீலே அவரிடம் ஒரு துண்டுக் காகிதத்தை எடுத்து அதன் நடுவே கோடு ஒன்றைப் போட்டுக் கொடுத்தார். கோட்டுக்கு வலது பக்கம் அவருடைய வாழ்வில் நடந்த மகிழ்ச்சியான நிகழ்வுகளையும், கோட்டுக்கு இடது பக்கம் துன்பமயமான நிகழ்வுகளையும் ஒவ்வொன்றாக நினைவுகூர்ந்து, வரிசைப்படுத்தி அதில் எழுதச்சொன்னார்.

வந்தவரோ “என் வாழ்க்கையைப் பொறுத்த வரையில் வலது பக்கம் எழுதுவதற்கு என்று ஒன்றுமே இல்லை, வலது பக்கம் காலியாகவே இருக்கப் போகிறது” என்று புலம்பிக் கொண்டே அந்த துண்டுக் காகிதத்தை வாங்கினார்.

சிறிது நேரம் கழித்து பீலே காகிதத்தை அவரிடமிருந்து வாங்கிப் பார்த்த போது அந்த மனிதர் சற்று முன்பாக சொன்னது போலவே அக்காகிதத்தின் வலது பக்கம் முழுவதும் காலியாகவே இருந்தது.

இப்போது பீலே அவரிடம் சில கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார்.

அந்தக் கேள்விகளும் பதில்களும் இதோ;-

“உங்களுடைய மகன் எப்போது ஜெயிலில் இருந்து வந்தான்?”
"எனது மகன் இதுவரை ஜெயிலுக்கே போனதே இல்லையே"

“உங்களுடைய மனைவி உங்களை எப்போது விவாகரத்து செய்தார்?”
"இல்லையே, என் மனைவி என்னுடன் தான் இருக்கிறாள்"

“எத்தனை நாள் சாப்பிடாமல் இருந்தீர்கள்?”
"சாப்பிடாமல் நான் ஒரு நாளும் இருந்ததில்லை"

“உங்கள் வீடு வெள்ளத்தில் இழுத்து சென்றபோது என்ன செய்தீர்கள்?”
"என் வீடு பத்திரமாகத்தான் இருக்கிறது"

" உங்களுக்கு சாலைவிபத்தில் கால் உடைந்ததே, எலும்பு சேர்ந்து விட்டதா?"
"எனக்கா? விபத்தா? அப்படி ஏதும் எனக்கு நேரவில்லையே?"

இப்படி பீலே ஒவ்வொரு கேள்வியாக கேட்கக் கேட்க அந்தக் கோட்டின் வலது புறம் நிரம்பிக் கொண்டே வந்தது. காகிதத்தின் இடது பக்கத்தில் எழுத இன்னும் நிறைய இடமிருந்தது.

தற்போது பீலே கேட்டார்;-

“இவை எல்லாம் மகிழ்ச்சிக்குரிய விஷயம் தானே. ஏன் வலது பக்கம் நீங்கள்  எழுதவில்லை? ”.

நாமும் பீலேயைச் சந்திக்க வந்த நபரைப் போலத்தான் நடந்து கொள்கிறோம், இல்லையா?

கடந்த காலத்தில் முழுக்க முழுக்க மகிழ்ச்சியான நிகழ்வுகளை மட்டுமே கொண்ட மனிதர் என்று இந்த உலகில் யாரும் இல்லை. இருக்கவும் முடியாது.

அதே போல முழுக்க முழுக்க துன்ப மயமான நிகழ்ச்சிகளை மட்டும் கொண்ட மனிதர் என்று இவ்வுலகில் யாரும் இல்லை. இருக்கவும் முடியாது.

இரண்டும் கலந்தது தான் வாழ்க்கை. ஆனால் வாழ்வின் துன்பமான நிகழ்வுகளை மட்டுமே கணக்கில்
எடுத்துக் கொண்டு பலர் தங்களுடைய
வாழ்க்கையை தாங்களாகவே வீணடித்துக் கொள்கிறார்கள்.

வாழ்க்கையில் ஒரு ஜன்னல் சார்த்தப்படும் போது சோர்வடைய வேண்டாம். மற்றொரு கதவு உங்களுக்காக வேறு இடத்தில் திறந்தபடி காத்திருக்கும்.

கடந்த காலம் நமக்கு ஒருபோதும் நம் தலையை உடைக்கும் சுத்தியலாக இருக்கக்கூடாது. மாறாக அது நம்மை முன்னோக்கி உந்தித் தள்ளும் ஒரு தள்ளு பலகையாக மட்டுமே இருக்க வேண்டும்.

என்ன நடந்தாலும் சரி, வாழ்க்கையை நான் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ்வேன் என்று உறுதியோடு இன்றே துணிந்து முடிவெடுங்கள். மகிழ்ச்சியே உங்கள் வாழ்க்கையின் குறிக்கோளாக என்றும் இருக்கட்டும்.

மகிழ்ச்சியாய் எழுதத் தொடங்குங்கள்.

வலது பக்கம் முழுவதும் நிரம்பட்டும்.
இடது பக்கம் எப்போதும் காலியாக இருக்கட்டும்.

வாழ்க வளமுடன்.
வாழ்க நலமுடன்.

90:10

இதைப் படியுங்கள்.... உங்கள் வாழ்க்கையே மாறலாம்...

குப்பை வண்டி விதி’ தெரியுமா? - The Law of the Garbage Truck

ஒரு கம்பெனியின் அதிகாரி ஒருவர் அவசரமாக வெளியூர் செல்ல வேண்டியிருந்தது. ஆகையால் ரயில் நிலையத்துக்கு உடனே செல்ல வேண்டி டாக்ஸி ஒன்றை பிடித்து உடனே ரயில்வே ஸ்டேஷன் போகுமாறு டிரைவரிடம் சொன்னார்.

இவர்கள் வேகமாக சென்று கொண்டிருக்கும்போது, இவர்களுக்கு முன்னாள் சென்ற கார் ஒன்று திரும்புவதற்கான சிக்னல் எதுவும் கொடுக்காமல் திடீரென்று திரும்பிவிட ஒரு கணம் நிலை தடுமாறிய டாக்ஸி டிரைவர் உடனே பிரேக்கை அப்ளை செய்து சரியாக முன் சென்ற காரை இடிப்பதற்கு ஒரு இன்ச் முன்னதாக நிறுத்தினார்.

அந்த காரிலிருந்து எட்டிப் பார்த்த அதன் ஓட்டுனர் இவர்களை கன்னா பின்னாவென்று நா கூசும் வார்த்தைகளை பயன்படுத்தி திட்ட ஆரம்பிக்கிறான்.இந்த டாக்சி டிரைவரோ பதிலுக்கு எதுவும் சொல்லாமல் ஜஸ்ட் ஒரு புன்னகையை மட்டும் சிந்திவிட்டு டாட்டா காட்டுவது போல கைகளை காட்டுகிறார்.

அவர் அப்படி செய்தது ஏதோ நண்பரை பார்த்து செய்வது போல இருந்ததே தவிர தவறாக வண்டி ஒட்டிய ஒரு டிரைவரிடம் செய்வது போல இல்லை.“ஏன் அவனை சும்மா விட்டீங்க? நாலு வாங்கு வாங்கியிருக்கலாம் இல்ல… அவன் மேல தப்பு வெச்சிகிட்டு நம்ம மேல எகிர்றான்..?” என்று அதிகாரி டாக்சி டிரைவரிடம் கேட்கிறார்.அதற்கு டாக்சி டிரைவர் சொன்னது தான் ‘குப்பை வண்டி விதி’ எனப்படுவது.

ஆங்கிலத்தில் ‘The Law of the Garbage Truck’ என்பார்கள்.“இப்படிப்பட்ட மனிதர்களுக்கு ‘குப்பை வண்டி’ என்று பெயர் ஸார். பல மனிதர்கள் இப்படித்தான் குப்பை வண்டிகள் போல இருக்கிறார்கள். மனம் நிறைய குப்பைகளையும் அழுக்குகளையும், வைத்திருப்பார்கள். விரக்தி, ஏமாற்றம், கோபம் அவர்களிடம் நிறைந்திருக்குக்ம்.
அது போன்ற குப்பைகள் சேரச் சேர அதை இறக்கி வைக்க அவர்களுக்கு ஓரிடம் தேவை. சில நேரங்களில் அதை நம்மிடம் அவர்கள் இறக்கி வைப்பார்கள். அதை நாம் பர்சனலாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ஜஸ்ட் அவர்களை பார்த்து ஒரு புன்னகை சிந்தி, கைகளை ஆட்டிவிட்டு நாம் போய்கொண்டே இருக்க வேண்டும்.
அவர்கள் நம் மீது கொட்டும் குப்பைகளை நாம் சுமந்து கொண்டு போய் நம் பணிபுரியும் இடத்திலோ அல்லது வீட்டிலோ தெருவில் மற்றவர்களிடமோ நாம் கொட்டக்கூடாது சார். நம்ம பேர் தான் நாறிப்போகும்…!!” என்று சொல்ல, அதிகாரி அதில் உள்ள நுணக்கத்தை அறிந்து வியந்துவிட்டார்.

இதில் நாம் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயம் என்னவென்றால் வாழ்க்கையில் வெற்றி பெற்ற சாதனையாளர்கள் எவரும் இந்த குப்பைவண்டிகள் தங்கள் அன்றைய நாளை ஆக்கிரமித்துக்கொள்ள அனுமதிக்கவே மாட்டார்கள் என்பது தான்.
அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ, வெளியிலோ காரணமின்றி உங்கள் மீது யாரேனும் எரிந்து விழுந்தாலோ, அல்லது வன்சொற்கள் வீசினாலோ பதிலுக்கு நீங்களும் வார்த்தை யுத்தத்தில் இறங்காது ஜஸ்ட் ஒரு புன்னைகையை மட்டும் பதிலாக தந்துவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றுவிடுங்கள்.

நம்மை சரியாக நடத்துகிறவர்களை நேசிப்போம். அப்படி நடத்தாதவர்களுக்காக பிரார்த்திப்போம். இது ஒன்றே நாம் செய்யவேண்டியது.

வாழ்க்கை என்பது 10% நாம் எப்படி உருவாக்குகிறோம் என்பதை பொருத்தது. 90% நாம் எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பதையே பொருத்தது.