Powered By Blogger

Apr 11, 2017

வெற்றி

வெற்றி கிடைக்குமோ என்ற அச்சம், கண்டிப்பாக தோல்வியை நோக்கியே கொண்டு செல்லும்.
- நெப்போலியன்

வெறும் நம்பிக்கை வைத்து ஒன்றும் செய்ய முடியாது , அதற்கான முயற்சிகள் எடுத்தால் தான் வெற்றி பெற முடியும் !!! ‪

Successful people can't relax on chair.
They relax by *WORK.*
They sleep with a *DREAM.*
Awake with *COMMITMENT*
&
Work towards *GOALS.*
That's the *SPIRIT* of life.

சில சமயங்களில் முடிவுகளை விட......... முயற்சிகள் அழகானவை.....

உலகத்திலேயே மிகப் பெரிய பாவம்
இருக்கும் நேரத்தை
இயக்காமல் வீணடிப்பதுதான்!

ரசிக்கப்பழகு
நீயும் ரசிக்கப்படுவாய்.

முயல் ஆமையிடம் தோற்றதற்கு
என்ன காரணம்
முயலாமை.

அறிவுரை இரண்டுவிதம்.
ஒன்று பழம் கள்;
அடுத்தது புதுப்பால்
ருசி அறிந்து
தேர்வு செய்.

களத்தில் இறங்கியவனுக்குக்
கால்களில் குத்தியது
கண்ணாடித்துண்டா?
கருவேல முள்ளா?
என்று தெரியக்கூடாது.

சூரியனைப்போல்
ஓய்வின்றி ஒழிச்சலின்றி
உழைத்து உழைத்து உழை.
பிரகாசமாவாய்!

விமர்சனங்களைப்பற்றி
ஒரு சதவிகிதம் கூட அஞ்சாதே;
அவை சும்மா கிடப்பவனின் சோம்பேறிச் சுருதிகள்.

சஞ்சரித்துக்கொண்டே இரு
உன் திட்டங்களுக்குள்.

என் தோழனே
துணிந்து நில்.!
நம்பிக்கை என்பது நூறாவது படி என்றால்
துணிச்சல் என்பதுதான்
99வது படி.

வெற்றி என்பது
101 வது படி என்றால்
முயற்சி என்பதே
முதல் படி.

21-03-2017 (11 நாட்கள்)*

சிரமங்களை கடந்தால்தான் சிகரங்களைத் தொட முடியும்!

உழைப்பை அதிகரியுங்கள்!

நம்பிக்கையுடன் செயல்படுங்கள்!

உங்களால் முடியும்

*எந்த நிலையிலும்*
சலிக்காத நம்பிக்கையோடு *போராடுங்கள்.*

நம்மால் இயலாவிட்டாலும் நம்மோடு இருக்கும் *நல்லவர்களை*
*அங்கீகரியுங்கள். *

ஒவ்வொரு முயற்சியையும் புதிய *உற்சாகத்தோடு தொடங்குங்கள்.*

அங்கீகாரத்தை எதிர்பார்த்து உழைக்க வேண்டாம்.
ஆனால் உழைப்பவர்களுக்கான அங்கீகாரங்களை நீங்கள் *வழங்குபவர்களாக இருங்கள்.*

உங்களுக்கான அங்கீகாரம் தேடி வரும்.

அனைவரையும் நண்பர்களாகப் பார்க்க கற்றுக்கொள்ளுங்கள்.....
நல்ல விசயங்கள் வாழ்வில் பல்புகளாய் ஒளிர ஆரம்பிக்கும்....

சாதனையும் தவிர்ப்பும் இணைந்து நடப்பதில்லை!!நீங்கள் தவிர்க்க எண்ணினால் சாதனை பற்றி மறந்துவிடுங்கள்!                    நீங்கள் சாதிக்க விரும்பினால் தவிர்த்தலை மறந்து விடுங்கள்!

BMW வாங்க எவ்வளவு நாட்களாகும்?

டாக்டர்: குறைஞ்சது மூணு மாசம் தேவை

இஞ்சினீயர்: ஒரு ஆறு மாசமாகும்

வக்கீல்: ஐய்யோ, ஒரு வருஷமாவது ஆயிடும்

அரசியல்வாதி: அஞ்சு வருஷம் முழுசா
பதவியிலிருந்தாத் தான் வாங்க முடியும், அவ்வளவு பெரிய கார் கம்பெனியாச்சே!!!!

-எண்ணுவதைப் பெரியதாக எண்ண வேண்டும்.

தோல்வியின் அடையாளம் தயக்கம்!
வெற்றியின் அடையாளம் துணிச்சல் துணிந்தவர்தோற்றதில்லை. தயங்கியவர்வென்றதில்லை..
ம‌ன‌ம் த‌ள‌ராம‌ல் உழைப்போம்..வ‌ள‌ர்வோம்..வான‌ம் நோக்கி...

போராட முடிந்தால் தான் ஜெயிக்க முடியும்!

முயற்சிக்க முடிந்தால் தான் முன்னேற முடியும்!

சிந்திக்க முடிந்தால் தான் எதையும் சாதிக்க முடியும்!

உங்கள் செயல்களைக் கடினமாக்குவது சோம்பேறிதனம், அதை எளிதாக்குவது உழைப்பு  -பிராங்க்ளின்

நேற்று ஜெயித்தவர் இன்றும் ஜெயிக்கலாம்... ஆனால், நேற்று தோற்றவர் தினமும் தோற்றதில்லை.....

நீ என்ன செய்தாய் என்பது உனக்கு தெரியும், என்ன செய்கிறாய் என்றும் உனக்கு தெரியும், இனி என்ன செய்ய போகிறாய் என்றும் உனக்கு தெரியும் !
ஏனென்றால் நீயே வெற்றியாளன் !

நாளை சாதனை செய்வேன் என்று சொல்பவர்கள் முயற்சி செய்யாதவர்கள்!

நேற்றே சாதனையை செய்து முடித்தவர்கள் நம்பிக்கையுடன் முயற்சி செய்தவர்கள்!

*நீங்கள் நம்பிக்கையுடன் முயற்சி செய்பவர்கள்*

எனது வெற்றிகளின் மூலம் என்னை மதிப்பிடாதீர்கள், எத்தனை முறை நான் கீழே விழுந்து மீண்டும் எழுந்தேன் என்பதன் மூலம் மதிப்பிடுங்கள்.   -  நெல்சன் மண்டேலா.

நம்பிக்கை இல்லா முயற்சியில் சாதனைகளும் இல்லை!
சரித்திரங்களும் இல்லை!
நம்பிக்கையோடு முயற்சி செய்யுங்கள்,

வெற்றியை தேடி நீங்கள் செல்லாதீர்கள்!
உங்கள் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்!
வெற்றி உங்களைத் தேடி வரும்!

யாராலும் சாதிக்க முடியாததை உங்களால் சாதிக்க முடியும்,       
அதற்கு அடிப்படை தேவை நம்பிக்கையும், விடாமுயற்சியும்!

தடைகள் நம்மை தடுப்பதற்க்கு அல்ல
நாம் தாண்டும் உயரத்தை கூட்டுவதற்கே
*சவால்* என்ற வார்த்தைக்குள்ளே *வாசல்* என்ற வார்த்தை மறைந்திருக்கிறது
நீ எதிர்கொள்ளும் சவால்களிலேதான் திறக்கின்றன உன்  எதிர்காலத்திற்கான  வாசல்கள்.

திட்டமிடு!
செயல்படு!
சாதனை செய்!

வெற்றி என்பது என்ன?
ஒரு சதவிகிதம் சிந்தனையும், தொண்ணூற்றோன்பது சதவிகித உழைப்பும் சேர்ந்ததுதான் - தாமஸ் ஆல்வா எடிசன்

*வாழ்வில் உயர்வு பெற,*
*உழைத்திடு தோழா..*

No comments:

Post a Comment