Powered By Blogger

Dec 17, 2015

தன்மானத் தமிழனும், தன்னிகரில்லா தலைவனும்

காமராசர், குடிநீர் பஞ்சம் தீர்க்க வேலூர் சென்றார். ஆம்பூர் அருகே இருந்து தண்ணீர் கொண்டு வர முடிவு செய்தார்.
பொறியாளர் சொன்னார், " ஐயா ஆம்பூர் பள்ளம், வேலூர் மேடு. தண்ணீர்   வராது" என்று சொன்னார்.

காமராசர் சொன்னார், "பள்ளத்துல இருந்து மேட்டுக்கு தண்ணீர் வராதுன்னு சொல்லறதுக்கா உன்னைய வைச்சிருக்கேன்.
நீ ஒரு திட்டம் போட்டு என் வீட்ல கொடுத்துட்டு தான் ஊரை விட்டு கிளம்பணும். அப்படின்னுட்டு அவர் சென்னை போய்ட்டார்.
4 நாள் கழிச்சு ராத்திரி
2 மணிக்கு அவர் வீட்ல திட்ட வரைவை கொடுத்துட்டு. ஐயாவ எழுப்ப வேண்டாம் ஐயாவ காலைல பார்க்கிறேன்
அப்டின்னுட்டு வீட்டுக்குப் போய் நிம்மதியா தூங்கினார் பொறியாளர். மறு நாள்
காலையில் 8 மணிக்கு எழுந்தார்,
வாசலில் அமர்ந்திருந்தார் காமராசர்.

பதறி போய் விட்டார் பொறியாளர்.

"என் தூக்கத்த நீ கெடுக்கல. அதே மாதிரி நானும் " என்றார்..

"அற்புதமான திட்டம்..
நன்றி.. பாராட்டுக்கள்.."
என்றார்.
திட்டத்தை நிறை வேற்றினார்.
இன்றளவும் திட்டம் செயல்படுகிறது..

அந்தப் பொறியாளர்
வேறு யாருமல்ல..
நமது மாமனிதர்
A.P.J அப்துல்கலாம் தான் அவர்..

தன்மானத் தமிழனும்,
தன்னிகரில்லா  தலைவனும்.
இனி வருவார்களா...!!!!

No comments:

Post a Comment