Powered By Blogger

Aug 31, 2015

இந்திய விமானப்படையின் தகவல்கள்.

✈இந்திய விமானப்படையின் தகவல்கள்.

✈8/10/1922 அன்று வெறும் 25 வீரர்களுடன் ஆங்கிலேயர்களால் நிறுவப்பட்டது இந்திய விமானப்படை. ஆண்டுதோறும அக்டோர் 8 ம் தேதி விமானப்படை தினமாக கொண்டாடப்படுகிறது.

✈அமெரிக்கா,சீனா,ரஷ்யா விற்க்கு அடுத்தாக உலகில் மிகப்பெரிய விமானபபடை இந்திய விமானப்படை.

✈இந்திய விமானப்படையில் 1.70 லட்சம் வீரர்கள் உள்ளனர். 1130 போர் விமானங்கள், வானிலே போர் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் 7 டேங்கர் விமானங்கள், 133 சரக்கு விமானங்கள், 158 பயிற்சி விமானங்கள், 33 தாக்குதல் ஹெலிகாப்டர்கள், 156 சரக்கு ஹெலிகாப்டர்கள், 200 ஆளில்லா விமானங்கள் ஆகியவை பயன்பாட்டில் உள்ளன.

��டெல்லியில் இந்திய விமானப்படையின் மியூசியம் உள்ளது. அதில் விமானப்படையின் வரலற்றையும் சாதனைகளையும் பிரதிபலிக்கும் காட்சி பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன.

��இந்திய விமானப்படை வரலாற்றில் 1948 ம் ஆண்டுமுதல் கார்கில் போர் வரை சரித்திரததில் அணைத்து போர்களையும் வெற்றிகரமாக இந்திய விமானப்படை முடித்துள்ளது.

��இந்திய விமானப்படை பங்கெடுத்த முதல் போர் இந்தியாவுக்காக நடக்கவில்லை. 2 ம் உலகப்போரின்போது நேச நாட்டு படைகளுக்காக இங்கிலாந்து சார்பில் இந்திய விமானப்படை பங்குபெற்றது.

✈இந்திய பிரிவாக இயங்கிய இந்திய விமானப்படை 2ம் உலகப்போருக்காக 1945 முதல் 1950 வரை ராயல்இந்திய விமானப்படை என்று அழைக்கப்பட்டது. 1950 ல் இந்தியா குடியரசானபோது ராயல் நீக்கப்பட்டது.

����நாடு முழுவதும் 60 விமானப்படை தளங்கள் உள்ளன. இதில் 16 விமானப்படை தளங்களை  கொண்ட மேற்கு பிராந்தியமே பெரியது. அயல் நாட்டில் இந்தியாவுக்கு விமானப்படை தளம் 1 உள்ளது. அது தஜிகிஸ்தான் நாட்டில் பார்கோர் என்ற இடத்தில் உள்ளது.

✈இந்திய விமானப்படையின் மிக உயரமான இடத்தில் அமைந்திருக்கும் இடம் சியாச்சின் பனி சிகரத்தில் அமைந்துள்ளது.

��லாக்ஹீட் மார்டினா சி 130ஜே சூப்பர் ஹெர்குலிஸ் விமானத்தை லடாக்கில் உள்ள டவுலத் பெக் ஒல்டி விமான ஓடு பாதையில் தரையிறக்கி சாதனை படைத்தது. இது கடல் மட்டத்திலிருந்து 16,654 அடி உயரத்தில் உள்ளது. இது உலகில் அதிக உயரத்தில் தரயிரக்கிய விமானமாக சாதனை படைத்தது.

✈இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனம் தயாரித்த முதல் போர் விமானம் "எச் எஃப் 24 மருத். இதை ஜெர்மனியை சேர்ந்த இன்ஜினியர் கர்ட் டேங்க் என்பவர் வடிமைத்தார். 1961 முதல் 1985 வரை பயன்பாட்டில் இருந்தது. தற்போது தேஜஸ் என்ற இலகு ரக போர் விமானத்தை இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் நிறுனம் தயாரிக்கிறது.

✈உலகிலேயே சி 17 குளோப் மாஸ்டர் 3, லாக்ஹீட் மார்டின் சி 130ஜே சூப்பரா ஹெர்குலிஸ், 11 -  76 ஆகிய 3 வகை பெரிய விமானங்களை பயன்படுத்தும் ஒரே விமானப்படை இந்திய விமானப்படைதான்.

����1933 ம் ஆண்டுமுதல் இதுவரை இந்திய விமானப்படை விமானங்களில் பொறிக்கப்பட்டிருக்கும் வட்டவடிவ சின்ன்ம் 4 முறை மாற்றப்பட்டது. தற்போது தேசியகொடி வண்ணத்தில் வட்ட வடிவ சின்னம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

��உலகில் மிகப்பெரிய மீட்பு நடவடிக்கையை மேற்கொண்ட விமானப்படை என்ற பெருமையை இந்திய விமானப்படைக்கு உண்டு. 2013 ம் ஆண்டு வட இந்தியாவில் ஏற்பட்ட வெ ள்ளபெருக்கின் போது ஆபரேசன் ரஹத் என்ற பெயரில் நடத்தப்பட்ட மீட்பு நடவடிக்கையில் 19,600 பேர் மீட்கப்பட்டனர்.

No comments:

Post a Comment