Powered By Blogger

Mar 24, 2016

இந்தியாவில் அடுத்த நிதி ஆண்டில் தனிநபர் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்தை தாண்டும்: உலக வங்கி கணிப்ப

புதுடெல்லி, மார்ச் 24- இந்தியாவில், அடுத்த நிதி ஆண்டில் (2016-17) தனிநபர் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்தை தாண்டும் என உலக வங்கி தெரிவித்துள்ளது. உலக வங்கி ஆய்வறிக்கை கூறுவதாவது:- இந்தியாவில், அடுத்த நிதி ஆண்டில் தனிநபர் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்தை தாண்ட உள்ளது. 120 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் தனிநபர் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சம் (1,500 டாலர்) என்பது பெரிய தொகையாகும். இது முதல் முறையாக 6 இலக்கம் என்ற சாதனை அளவை தொட இருக்கிறது. கடந்த 2012-13-ஆம் நிதி ஆண்டில், இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் 12.40 சதவீதத்தினருக்கு தினசரி வருமானம் 1 டாலருக்கும் குறைவாகவே இருந்தது. நடப்பு 2015-16-ஆம் நிதி ஆண்டில், நடப்பு விலை அடிப்படையில் தனிநபர் ஆண்டு வருமானம் ரூ.93,231-ஆக இருக்கிறது. சென்ற நிதி ஆண்டில் அது ரூ.86,879-ஆக இருந்தது. ஆக, தனிநபர் வருமானம் 7.3 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 2012-13 மற்றும் 2013-14 நிதி ஆண்டுகளில் அது முறையே ரூ.71,050 மற்றும் ரூ.79,412-ஆக இருந்தது. மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, அடுத்த நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 11 சதவீதமாக இருக்கும் என தெரிவித்திருக்கிறார். அதன் அடிப்படையிலும், 1.2 சதவீத மக்கள்தொகை பெருக்கம் என்ற கணக்கீட்டின்படியும் அடுத்த நிதி ஆண்டில் தனிநபர் ஆண்டு வருமானம் 8 சதவீதம் உயர்ந்து ரூ.1 லட்சத்திற்கும் (1,500 டாலர்) அதிகமாக இருக்கும். சர்வதேச அளவில், 2014-ஆம் ஆண்டில், தனிநபர் வருமானம் 1,586 டாலராக இருந்தது. இந்தோனேஷியாவில் அது 3,492 டாலராக இருந்தது. சீனாவில் 7,590 டாலராகவும், அமெரிக்காவில் 54,630 டாலராகவும் இருந்தது என உலக வங்கியின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment