Powered By Blogger

Jan 5, 2014

வாடிக்கையாளர் சேவையில் எல்ஐசி முதலிடம்

                       
03 Jan 2014 12:01, 
(3 Jan) மும்பை: எல்ஐசி நிறுவனம், முதிர்ச்சி அடைந்த பாலிசிக்கான தொகைகளை பாலிசிதாரர்களுக்கு திரும்ப கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளால் வாடிக்கையாளர்களின் நன் மதிப்பை பெற்றுள்ளது.
 இந்த தகவலை, 'இன்சூரன்ஸ் ரெகுலேட்ரி அண்டு டெவலப்மென்ட் அத்தாரிட்டி' (ஐஆர்டிஏ) மும்பையில் புதனன்று வெளியிட்ட 2013ம் ஆண்டு ஆய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பாலிசி எடுத்த வாடிக்கையாளர்களுக்கு 2012ம் ஆண்டில் 97.42 சதவீதம் வரை செட்டில்மென்ட் செய்து பணத்தை வழங்கியுள்ளது.
 2013ம் ஆண்டில் இது 97.73 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதேபோல 2012ம் ஆண்டில் செட்டில்மென்ட் கேட்டு மனு செய்தவர்களில் 1.30 சதவீத பேரின் மனுக்கள் மட்டுமே பல்வேறு காரணங்களுக்காக தள்ளுபடி செய்யப்பட்டது.
 இது 2013ம் ஆண்டில் 1.12 சதவீதமாக குறைந்துள்ளது என்றும் ஐஆர்டிஏ சுட்டிகாட்டியுள்ளது
.தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு 2012ம் ஆண்டு 89.34 சதவீதம் மட்டுமே செட்டில்மென்ட் செய்தது. 2013ம் ஆண்டில் இந்த சதவீதம் 88.65 சதவீதமாக குறைந்துவிட்டது.
 தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களில் பாலிசி எடுத்து செட்டில்மென்ட் கோரி 2012ம் ஆண்டு மனுசெய்தவர்களில் 7.85 சதவீத பேரின் மனுக்களை தள்ளுபடி செய்துள்ளனர்.
 2013ல் 7.82 சதவீத மனுக்களை நிராகரித்துள்ளனர்
.எல்ஐசியில் பாலிசி எடுத்துவிட்டு இடையில் பல்வேறு காரணங்களுக்காக பிரீமியம் தொகையை கட்ட முடியாமல் விட்டுவிடுபவர்கள் 5.6 சதவீதம் தான்.
 தனியார் இன்சூரன்ஸ் கம்பெனியில் இது 17 முதல் 42 சதவீதமாக இருக்கிறது.
 தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகள் பல்வேறு காரணங்களுக்காக ரூ.5 லட்சம் முதல் ரூ.1.4கோடி வரை அபராத தொகையை 2013ம் ஆண்டில் கட்டியுள்ளது.

 ஆனால், எல்ஐசி இதுபோன்ற எந்தவிதமான நடவடிக்கைகளையும் எதிர்கொள்ளவில்லை என்று ஐஆர்டிஏ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment