Powered By Blogger

May 23, 2015

கண் குறைபாடுகள், கண்ணாடி அணிவதிலிருந்து விடுதலை – அமைதியாய் ஒரு புரட்சி

கண் குறைபாடுகள், கண்ணாடி
அணிவதிலிருந்து விடுதலை –
அமைதியாய் ஒரு புரட்சி

என் 9 வயது குழந்தைக்கு இடது கண்ணில்
பார்வை குறைபாடு இருப்பது சமீபத்தில் தான்
தெரிய வந்தது. வலது கண்ணை கைகளால்
மூடிக் கொண்டு மற்றொரு கண்ணால் 10 அடி
தூரத்தில் இருக்கும் எழுத்துக்களை
படிக்கவைத்துப் பார்த்த போது அவனால்
படிக்க முடியவில்லை. ஆனால் அதே இடது
கண்ணை கைகளால் மூடிக் கொண்டு வலது
கண்ணால் 20 அடி தூரத்தில் இருக்கும்
எழுத்துக்களை படிக்க முடிகிறது. இரண்டு
கண்களாலும் பார்க்கும் போது இந்த
குறைபாடு தெரியவதில்லை. ஆனால்
பள்ளியிலே கரும்பலகையில் எழுதும்
வரிகளைப் படிக்கும்போது சிரமப்படுகின்றனர்.
ஆனால் அதை அவர்கள் சொல்வதில்லை.
எல்லோருக்கும் இப்படித்தான் இருக்கும்
என்று நினைத்துவிடுகின்றனர்.

ஈரோட்டில் உள்ள மிகப் பெரிய கண்
மருத்துவமணையில் பரிசோதித்த போது,
நிரந்தரமாக கண்ணாடி அணிய வேண்டும்
என்று சொல்லிவிட்டனர். கண்ணாடியும்
வாங்கி கொடுத்துவிட்டேன்.

அடுத்த சில நாட்களில், என்னுடைய பள்ளித்
தோழர் ஒருவரை சந்தித்தேன். பள்ளி
நாட்களிலேயே பெரிய சோடாபுட்டிக்
கண்ணாடி அணிந்திருந்தார். -6 என்ற
அளவில் கண் பார்வைக் குறை அவருக்கு
இருந்தது. ஆனால் நான் சந்தித்த அன்று
கண் கண்ணாடி அணியாமல், பைக்
ஓட்டிவந்ததை பார்த்தவுடன் மிகவும்
ஆச்சரியமடைந்தேன்.

என்னப்பா, கண்ணாடி போடாத உன்னை
அடையாளமே தெரியவில்லை…
கண்களுக்கான அறுவைசிகிச்சை செய்து
கொண்டாயா? அல்லது காண்டாக்ட்
லென்ஸ்ஸா? என்று கேட்டேன்.

பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில்
கண்பார்வை குறை பாடுகளை நீக்க பயிற்சி
அளிக்கின்றனர். அதில் போய் பயிற்சி பெற்று
வந்தேன். கடந்த இரண்டு மூன்று
வருடங்களாக கண்ணாடி அணிவதில்லை
என்றதை கேட்டதும் ஆச்சரியப்பட்டுப்
போனேன்.

அவரிடம் மேலும் தகவல்களை வாங்கிக்
கொண்டு இளவலை அழைத்துக் கொண்டு
பாண்டிச்சேரி வந்து சேர்ந்தேன்.

பாண்டிச்சேரி, கடற்கரை சாலையின், வடக்கு
மூலையில், வட்டாட்சியர் அலுவலகத்திற்கு
எதிரில் இந்த பள்ளி அமைந்திருக்கிறது.

திங்கட்கிழமை மதியம் 12 மணியளவில்
அந்த பள்ளிக்குச் சென்றேன். அப்பள்ளிக்கு
ஒவ்வொரு திங்கட்கிழமையும் விடுமுறை.
ஞாயிற்றுக் கிழமை வேலை செய்கிறார்கள்.
எனவே மறுநாள் காலை 8 மணிக்கு
வரச்சொன்னார்கள். இந்த பயிற்சி
வகுப்பில் கலந்து கொண்டு பயிற்சி பெற
எந்த கட்டணமும் வசூலிப்பதில்லை, நாம்
விருப்பப்பட்டு கொடுக்கும் நன்கொடையை
மட்டும் ஏற்றுக் கொள்வதாகவும்
தெரிவிக்கப்பட்டது.

விடுமுறை தினமாக இருந்த போதும்,
அங்கிருந்த ஒரு உதவியாளர், எங்கே
தங்கியிருக்கிறீர்கள்? என்று கேட்டார்.
இனிதான், ஏதாவது ஹோட்டலில் அறை
எடுக்க வேண்டும் என்றேன். அவசியமில்லை,
ஆசிரமத்தின் விடுதியில் தங்கிக்
கொள்ளுங்கள் என்று கூறி ஆசிரம
விடுதியின் தொலைபேசி எண்ணை
கொடுத்தார்.

அழகான தனியறை. குளியலறை இணைந்த,
இரண்டு படுக்கைகள், கொண்ட அந்த
அறைக்கு வாடகை நாள் ஒன்றுக்கு
ரூ.70/- மட்டுமே.

செவ்வாய்கிழமை காலை 8 மணிக்கு அங்கு
சென்றேன். ஆரம்ப கட்ட பெயர் பதிவு,
பரிசோதனை ஆகியவற்றை முடித்து,
பயிற்சி தொடங்கப் பட்டது. சுமார் 2 மணி
நேரம் பயிற்சி அளித்தனர்.

கிட்டப் பார்வை, தூரப்பார்வை, போன்ற
அனைத்து கண் குறைபாடுகளுக்கும்
பயிற்சி அளிக்கின்றனர். நான் சென்ற
போது ஹைதராபாத்திலிருந்து ஒரு
தம்பதியினர் தங்கள் இரண்டு
பெண்குழந்தைகளை அழைத்து
வந்திருந்தனர். 8, 4 வயதுடைய அந்த
இரண்டு குழந்தைகளும் கண்ணாடி
அணிந்திருந்தனர். அக்குழந்தைகளின்
தந்தையும் கண்ணாடி அணிந்திருந்தார்.

அவரின் நண்பரின் ஆலோசனையின்
பேரில் குழந்தைகளை அழைத்து
வந்திருப்பதாக சொன்னார். நேரம் ஆக ஆக,
பல குழந்தைகள், நடுத்தரவயதினர்,
வயதானவர்கள் என்று சுமார் 30 அல்லது
40 பேர்கள் பயிற்ச்சிக்கு வந்திருந்ததை
பார்க்க முடிந்தது. இதில் பல
வெளிநாட்டவர்களும் அடக்கம்.

செய்வாய் முதல் ஞாயிறுவரை 6 நாட்கள்
இப்பயிற்சியை நடத்துகின்றனர்.
காலை 8 மணிமுதல் 10 மணிவரை,
மாலை 3 மணிமுதல் 5 மணிவரை. நாள்
ஒன்றுக்கு 4 மணிநேரம் பயிற்சி
கொடுக்கின்றனர். முறையான
கண் சிமிட்டுதல், தூரத்தில் இருப்பதை
படிப்பது, இருட்டு அறையில்
மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில்
சிறு எழுத்துக்களை படிப்பது போன்ற
பல பயிற்சிகள்.

ஆச்சரியப் படும் விதமாக, பயிற்சி முடிந்த
ஆறாவது நாள் அங்கேயே கண் பரிசோதனை
செய்து பார்த்ததில் பார்வையில் நல்ல
முன்னேற்றம் தெரிந்தது. தொடர்ந்து
ஆறுமாதம் பயிற்சியை தொடருங்கள்
பின் கண் பரிசோதனை செய்து பாருங்கள்.
கண்ணாடி அணிய வேண்டிய அவசியமே
வராது என்று பயிற்சியாளர் சொன்னார்.

கடந்த 40 ஆண்டுகளாக இந்த பள்ளி
நடப்பதாகவும், இதுவரை
ஆயிரக்கணக்கானோர்
பயன்பெற்றிருப்பதாகவும் அறிந்து
கொண்டேன். முன்கூட்டியே பதிவு
செய்து கொண்டு செல்வது நல்லது.
மார்ச் முதல் வாரம் முதல் ஜூன்
முதல்வாரம் வரையிலான பள்ளிக்கூட
விடுமுறை நாட்களில், அதிகமான கூட்டம்
வருவதால் அந்த காலகட்டத்தில் செல்ல
விரும்புபவர்கள் முன் கூட்டியே பதிவு
செய்தால் தான் இடம் கிடைக்கும்.

தங்கும் விடுதி குறித்த தகவல்கள்:
http://www.sriaurobindoashram.org/vi
use/ghlist.php

மேலும் அதிக தகவல்களுக்கு:
http://www.motherandsriaurobindo.org/Content.aspx

பயிற்சி குறித்த மேலும் விவரங்கள்:
SCHOOL FOR PERFECT SIGHT
PONDICHERRY

PHONE: 0413-2233659
EMAIL: auroeyesight@yahoo.com

May 22, 2015




INSURANCE IMPORTENT



தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் ”

அந்த அழகிய கிராமத்திற்கு
ஒரு முனிவர் வந்திருந்தார்
.ஊருக்கு மத்தியில் இருந்த
மரத்தடியில் அமர்திருந்தார்
.யாருமே ஊரில் அவரைக்
கண்டுகொள்ளவில்லை . முனிவர் அல்லவா ?
கோபத்தில் சாபமிட்டார் அந்த
ஊருக்கு ..” இன்னும்
50வருடங்களுக்கு இந்த
ஊரில் மழையே பெய்யாது
.வானம் பொய்த்துவிடும் ” … இந்த சாபம் பற்றி கேள்விப்
பட்ட அனைவரும் என்ன
செய்வது என்றே தெரியாமல்
கவலையோடு அவரின்
காலடியில் அமர்ந்து
மன்னிப்பு கேட்டனர் .. சாபத்திற்கு விமோசனம்
கிடையாது என்று
கூறிவிட்டார் முனிவர்
.வேறு வழியின்றி
அனைவருமே அவரின்
காலடியில் அமர்ந்து இருந்தனர் …மேலிருந்து
இதைக் கவனித்த பரந்தாமன்
தனது சங்கினை எடுத்து
தலைக்கு வைத்து
படுத்துவிட்டான்
( பரந்தாமன் சங்கு ஊதினால் மழை வரும் என்பது
நம்பிக்கை ). இன்னும் 50
வருடங்கள்மழை பெய்ய
வாய்ப்பில்லை என்பதால்
இனி சங்குக்கு ஓய்வு
என்றே வைத்து விட்டான் …) அந்த ஊரில் ஒரு அதிசயம்
நடந்தது …ஒரே ஒரு உழவன்
மட்டும் கலப்பையைக்
கொண்டு தினமும்
வயலுக்குச் சென்று வந்து
கொண்டிருந்தான் .அவனை அனைவரும் பரிதாபமாகவே
பார்த்தனர் .மழையே
பெய்யாது எனும்போது
இவன் வயலுக்கு போய் என்ன
செய்யப் போகிறான் என்ற
வருத்தம் அவர்களுக்கு … அவனிடம் கேட்டே விட்டனர் . நீ செய்வது முட்டாள்தனமாக
இல்லையா என்று ..அதற்கு
அவனின் பதில்தான்
நம்பிக்கையின் உச்சம் ”’ 50
வருடங்கள் மழை பெய்யாது
என்பது எனக்கும் தெரியும் . உங்களைப் போலவே நானும்
உழுதிடாமல் இருந்தால் 50
வருடங்கள் கழித்து உழுவது
எப்பிடி என்றே எனக்கு
மறந்து போயிருக்கும்
..அதனால்தான் தினமும் ஒருமுறை உழுது
கொண்டு இருக்கிறேன் ”
என்றான் .
இது வானத்தில் இருந்த
பரந்தாமனுக்கு கேட்டது
.அவரும் யோசிக்க ஆரம்பித்தார் ..”50 வருசம்
சங்கு ஊதமால் இருந்தால்
எப்பிடி ஊதுவது என்று
மறந்து போயிருமே ”.என்றே
நினைத்து சங்கை எடுத்து
ஊதிப் பார்க்க ஆரம்பித்தார் …. இடி இடித்தது …மழை பெய்ய
ஆரம்பித்தது …நம்பிக்கை
ஜெயித்து விட்டது .
” தெய்வத்தால் ஆகாது
எனினும் முயற்சி தன்
மெய்வருத்தக் கூலி தரும் ”

அன்புடன்
D.செல்வன் - LIC

SSLC Results 2014 - 15

����������10th result����������

��First mark  ��         =499/500  = 41members
��Second mark  ��   =498/500 =192members
��Third mark      ��  =497/500  =540members

SUBJECT                =CENTUM(100/100)
��Maths                      =  27,134
��Science                   =1,15,853
��Tamil                       =586
��English                    =644
��Social science      =51,629

OTHER SUBJECT
��First mark=500/500(sanskrit)

PERCENTAGE
��Female=95.4%,
��Male=90.5%,
��Total=92.5%

District Wise
��1.Erode                                        =98.04%
��2.Viruthunagar                         =97.98%
��3.Tiruchy                                    =97.62%
��4.Kanyakumari                         =97.27%
��5.Perampalur                            =97.25%
��6.Sivagangai                             =96.75%
��7.Thoothukudi                           =96.74%
��8.Ramanathapuram                =96.37%
��9.Namakkal                                =95.83%
��10.Karur                                       =95.76%
��11.Kovai                                      =95.65%
��12.Tirupur                                   =95.23%
��13.Nellai                                      =94.23%
��14.Madurai                                 =94.21%
��15.Tanjore                                  =94.18%
��16.Nelagiri                                  =94.09%
��17.Chennai                                 =94.04%
��18.Dharmapuri                          =94%
��19.Krishnagiri                            =93.99%
��20.Salem                                     =93.2%
��21.Dindukal                                =92.97%
��22.Kancheepuram                    =92.79%
��23.pudhukottai                          =91.76%
��24.Theni                                        =90.87%
��25.Ariyalur                                   =90.7%
��26.Thiruvallur                               =90.5%
��27.Nagai                                        =89.27%
☺28.Vellur                                        =88.68%
��29.Vilupuram                               =87.52%
��30.Kadalur                                     =86.65%
��31.Thiruvannamalai                   =85.42%
��32.Thiruvarur                                 =83.78%

வாழ்க கலாச்சாரம்

வாழ்க கலாச்சாரம்...

இரவை பகலாக்க நினைத்து பகலையும் இரவாக்கிவிட்டோம் சாளரங்களில்லா (window) அடுக்ககம் (apartment) அமைத்து...

பேஸ் புக்கில் ஆயிரம் நண்பர்கள் இருந்தும் பேசி பழகவில்லை பக்கத்து வீட்டாரிடம்...

விளைவுகள் தெரிந்தும் விளை நிலத்தை விற்பனை செய்கிறோம்   விதை நெல்லை வேக வைத்து தின்பது என்ற அறியாமை தெரியாமல்.....  

மக்கிபோவதை மட்டும் ‪உற்பத்தி செய்ய வேண்டும் என்ற உண்மை மக்கி போகாத மண்ணுக்கு தெரிந்திருந்தும்,மக்கி போகாததை உற்பத்தி செய்கிறோம் மண்ணோடு மண்ணாய் மக்கி போக இருக்கும் நாம்...

விவசாய வேலை செய்பவனை கேவலமாகவும்,கணினியில் வேலை செய்பவனை கவுரவமாகவும் நினைபவர்கலுக்கு எப்படி தெரியும் அரிசியை இண்டர்னெட்டில் download செய்ய முடியாது என்று...

அரை குறை ஆடை பழகி விட்டது நமக்கு, ஆடை இல்லாத மேனியையும் நியாயப் படுத்த விரும்புகிறோம்-உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த கலாச்சாரம் நம் தமிழ் இனம் என்பது கூட தெரியாமல்...

குக்கரில் வைத்த சர்க்கரை பொங்கல்,பொங்கி வெளி வர முடியாமல் அழுதுபுலம்புகிறது,விவசாயத்திற்கு மரியாதை செலுத்ததான் நம் முன்னோர்கள் விறகு அடுப்பில் பொங்கல் வைத்து விழா எடுத்தார்கள் என்பது தெரியவில்லை என்று....

மாட்டு பொங்கலுக்கே மாட்டை அடித்து சாப்பிடுகிறோம், மாட்டை நம் மதம் கடவுளாக வழிபடுகிறது என்பது தெரியாமால்.....

தாவணி என்றால் என்ன என்று google-ல் தேடுகிறாள் jeans போட்ட தமிழ் பெண்.

கற்பு என்றால் என்ன என்று கேட்கிறாள் ஐந்தாவது கணவனிடம் 5 விவாகரத்து செய்த தமிழ் பத்தினி...

சித்தப்பாவையும் மாமாவையும்-uncle என்று முறை கெட்டு அழைக்கும் ஆங்கிலத்துக்கு எப்படி தெரியும் எல்லா உறவையும் மதித்து பெயர் வைத்து அட்டவணை போட்டது நம் தமிழ் இனம் என்று...

அம்மாவை பிணம்(mummy) என்று சொல்லும் இவர்களுக்கு எப்படி தெரியும் தெய்வமாக கருதும் அம்மாவை மனதில் வைத்துதான் "அ" என தமிழை தொடங்கினோம் என்று...

உறவுகள் வாழ்க்கைக்கு முக்கியம் என்று உணர்த்ததான் கடவுளுக்கும் உருவம் கொடுத்து உறவு கொடுத்து வைத்தது நம் கலாச்சாரம்...

ஆணும் பெண்ணும் இல்லாமல் வாழ்க்கை இல்லை ,உலகமும் இல்லை என்ற அர்த்தம் உணர்த்ததான் "அர்த்தனாரீஸ்வரரை" படைத்தது நம் தமிழ் மதம்...

நீதியையும், தர்மத்தையும் எல்லா விதமான நியாயங்களையும் தாயை முன் வைத்தே தொடங்கி வைத்தார்கள் நம் தமிழ் இனத்தில்....

தாய் காட்டினால் தான் தகப்பன் யார் என்று தெரியும்,தகப்பன் காட்டினால் தான் குரு, குரு காட்டி தான் கடவுள்.

இந்த தர்மத்தை நெறி படுத்திதான் "மாதா-பிதா-குரு-தெய்வம்" என்று வரிசை படுத்தினார்கள்.

நம் நாடு பெண்ணிற்கு முக்கியத்துவம் தரும் நாடு...

காடுகலுக்கும் மலைகலுக்கும்,ஆறுக்கும் கடலுக்கும் பெண்ணை மனதில் வைத்து தான் பெயர் வைத்து வழிபட்டர்கள்.

கங்கை,காவிரி,கோதவரி என ஆறுக்கும்  குறிஞ்சி முல்லை மருதம் என நிலத்திற்கும்,  நியாயத்திற்கு "தர்ம தேவதை" என்றும் அநியாயத்திற்கு "பத்ர காளி" என்றும் பூமிக்கு பூமாதேவி என்றும் பெண்ணை மனதில் வைத்துதான் 
அழைத்தார்கள்.

5 வயது சிறுமி என்றாலும் 16 வயது குமரி என்றாலும் "தாயே பிச்சை போடு" அல்லது "அம்மா பிச்சை போடு" என்பான் நம் நாட்டு பிச்சைகாரன்.
சிறுமியே அல்லது குமரியே பிச்சை போடு என்பதில்லை.

5 என்றாலும் 16 என்றாலும் பெண்ணை தாயாகத்தான் பார்த்தார்கள் நம் முன்னோர்கள்.

இதிலிருந்தே தெரியும் தாயை முன் வைத்துதான் நாம் தர்மத்தை தொடங்கினோம் என்று...

குனிந்த தலை நிமிராதவள் தமிழ் பெண்,நிமிர்ந்த தலை குனியாதவன் தமிழ் ஆண்.

எதிரே வரும் பெண் திருமணம் ஆனவள் என தலை குனியா ஆணுக்கு உண்ர்த்ததான் பெண்ணுக்கு தாலி படைத்தார்கள்.

எதிரே வரும் ஆண் கல்யாணம் ஆனவன் என தலை நிமிரா பெண்ணுக்கு உணர்த்ததான் ஆணுக்கு மெட்டி போட்டார்கள்...

புது பெண்ணை அம்மி மிதித்து அருந்ததி பார்க்க சொன்னது ,கற்புக்கு அடயாளமாய் வானத்தில் நட்சத்திரமாய் மின்னும் அருந்ததியை (அருந்ததி ஒரு பெண்) போல் இவளும் மின்ன வேண்டும் என்ற அர்த்தம் உணர்த்ததான்.

அக்னியை சாட்சியாய் வைத்து திருமணம் செய்தது,ஒருவனுக்கு ஒருத்தி என்னும் நம் கலாச்சாரத்தை தாண்ட கூடாது,தாண்டினால் அக்னி எவ்வாறு சுட்டு சாம்பலாக்குமோ அது போல
பெண்ணையும் ஆணையும் மனசாட்சி சுட்டு கொல்லும் என்பதர்க்காகதான்..,

கல்யாணமான பெண்ணை நெற்றியில் குங்குமத்தை வைக்க சொன்னது தன் தலைமுறைக்கு மேல் தன் கணவனுக்கு ஆயுளை கொடு என்பதர்க்காகதான்....,,,

கல்யாணமாகாத பெண்ணை கழுத்தில் குங்குமத்தை வைக்க சொன்னது நல்ல தாலி பாக்கியத்தை தன் கழுத்தில் கொடு என்று இறைவனிடம் வேண்டிக்கொள்ளதான்...

இந்து தர்மப்படி ஆண் பலமானவன்,பெண் பலவீனமானவள்.பலவீனமான பெண்ணை பலமுள்ள ஆண் பாதுகாப்பது   கடமை என்று உணர்த்ததான் ஆணை குடும்ப தலைவனாக (initial) வைத்தார்கள்...

அப்போதெல்லாம் கல்யாணம் செய்ய என்ன படித்தாய் என்று ஆணை கேட்பதில்லை.அவனை ஆண் தானா என்று மட்டும் தான் சோதித்தார்கள்.
காளை அடக்குபவனுக்கும், இளவட்டக் கல்லை தூக்குபவனுக்கும் தான் பெண்ணை கட்டிக்கொடுத்தார்கள்.

இப்போது இந்த சோதனை வைத்தால் முக்கால் வாசி ஆணுக்கு கல்யாணம் என்பது கனவாகதான் இருக்கும்.

இருப்பினும் பலம்தான் ஆணுக்கு பலவீனம்.பலவீனம் தான் பெண்ணுக்கு பலம் என்று மறைமுக தர்மம் சொல்கிறது இந்து மதம்.

எவ்வளவு பெரிய (பலமான)ஆணாக இருந்தாலும் வளைத்து போடும் வல்லமை (பலவீனமான)பெண்ணுக்கு உண்டு.
அதனால் தான் ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்று சொல்லி வைத்தார்கள்...

நல்ல கற்புடைய பெண் பெய் என சொன்னால் பெய்யுமாம் மழை.
படி தாண்டா பத்தினி என்று சொன்னது வாசல் படியை அல்ல.
பெண்ணுக்கே உரிய "அச்சம்,மடம்,நாணம்,பயிர்ப்பு" எனும் படிதலை தாண்டா பத்தினி என்று உணர்த்ததான்...

உலகமே வலப்பக்கமாக சுழல்கிறது என்று உணர்த்ததான் புது பெண்ணை வலது கால் எடுத்து வைத்து நல்ல எண்ணங்கலோடு வாழ்க்கையை தொடங்க வைத்தது நம் கலாச்சாரம்...

பார்ப்பதற்கு நமக்கு முட்டாள்தனமாக தோன்றினாலும் எல்லா விதமான சடங்குகலும் சம்பிரதாயங்கலும்  நம் கலாச்சாரத்தில் அர்த்தங்கலோடுதான் உண்டாக்கப்பட்டது...

நேற்று கூவம் நதிக்கரையில் வயதான கிழவி ஒருத்தி அழுது புலம்பி கொண்டு இருந்தாள்.அருகே சென்று ஏன் அழுகிராய் என்றேன்.
என் பிள்ளைகள் என்னை கைவிட்டார்கள் என்றாள்.யார் உன் பிள்ளை என்றேன்.6 1/2 கோடி பேர் பிள்ளைகள் என்றாள். பைத்தியம் பிடித்து விட்டது என நினைத்தேன்.உன் பெயர் என்ன என்றேன் அந்த கிழவி சொன்னாள் "தமிழ்" என்று....
பிற்கு தான் புரிந்தது அந்த கிழவிக்கு நானும் பிள்ளை என்று...
மனதிற்குள் உறுதி கொண்டு கிழவியிடம் சொன்னேன் இனி நான் தமிழை மதிப்பேன், தமிழையே பேசுவேன், தமிழ் கலாச்சாரத்தை காப்பற்றுவேன் என்று சொல்லி அனுப்பி வைத்தேன்... என் நண்பர்களாகிய நீங்களும் ஆயிரக்கணக்கான வருடத்திற்கு மேல் மூத்த அந்த தமிழ் கிழவிக்கு பிள்ளைதானே...
தயவு செய்து நம் கலாச்சாரம் போற்றுங்கள், தமிழை காப்பாற்றுங்கள்...




உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு, இதை உரக்கச் சொல்வோம் உலகுக்கு.....

ஒரு குட்டி கதை

ஒரு குட்டி கதை
கடவுள்: கழுதையைப்படைத்து அதனிடம் சொன்னார். "நீகழுதையாகப் பிறந்து, நாள் முழுவதும்பொதி சுமப்பாய். உனக்கு சிந்திக்கும் திறனே கிடையாது. புல்லைத்தின்று 50 ஆண்டுகள் வாழ்வாய்."
கழுதை: கழுதையாகப் பிறந்து 50 ஆண்டுகள் வாழ விருப்பமில்லை. 20 ஆண்டுகளே போதும்.
கடவுள்: அப்படியே ஆகட்டும்.
கடவுள்: நாயைப் படைத்து அதனிடம்சொன்னார். "நீ மனிதனின்வீட்டை பாதுகாத்து அவனுக்கு நல்லநண்பனாய் இருப்பாய். மனிதன் தரும்மிச்ச மீதிகளை உண்டு 30 ஆண்டுகள் வாழ்வாய்."
நாய்: 30 ஆண்டுகள் எனக்கு அதிகம். 15 ஆண்டுகளே போதும்.
கடவுள்: அப்படியே ஆகட்டும்.
கடவுள்: குரங்கைப் படைத்து அதனிடம்சொன்னார். "நீ மரங்களில்
கிளைக்கு கிளை தாவி குழந்தைகளை மகிழ்விப்பாய். 20 ஆண்டுகள் உயிர் வாழ்வாய்."
குரங்கு: எனக்கு 10வருடங்களே போதும் சாமி.
கடவுள்: அப்படியே ஆகட்டும்.
கடவுள்: மனிதனைப் படைத்தார். "நீ✨✨சிந்திக்கும் ஆற்றலுடன் பிறப்பாய். உன்அறிவைப் பயன்படுத்தி எல்லா உயிர்களையும் உன் கட்டுப்பாட்டுக்குள்கொண்டுவருவாய். 20 ஆண்டுகள் உயிர் வாழ்வாய்."
மனிதன்: "சாமி. 20 வருடம் எனக்கு ரொம்ப குறைவு.
கழுதை வேண்டாமென்று சொன்ன 30 ⌛வருடங்களையும், நாயின் 15 வருடங்களையும், குரங்கின் 10 வருடங்களையும் எனக்குத் தாருங்கள்."
கடவுள்: அப்படியே ஆகட்டும்.
* அன்றிலிருந்து மனிதன் 20 வருடங்கள்மனிதனாகவும், * பின் திருமணம் செய்து 30 ஆண்டுகள் கழுதையைப்போல குடும்பப் பாரம் சுமந்தும்,* குழந்தைகள் வளர்ந்த பின் 15 ஆண்டுகள்நாயைப் போல வீட்டைப் பாதுகாத்தும்,* கடைசிப் பத்து வருடங்கள் குரங்கைப் போல தன் ஒவ்வொரு மகன் அல்லது மகள் வீடு சென்று பேரக் குழந்தைகளை மகிழ்விக்கிறான்...!!!

May 20, 2015

நகைச்சுவை நடிகர் நாகேஷ் அவர்களின் தன்னம்பிக்கை மிக்க அருமையான வார்த்தைகள்...

நகைச்சுவை நடிகர் நாகேஷ் அவர்களின் தன்னம்பிக்கை மிக்க அருமையான வார்த்தைகள்...

- வானொலிப் பேட்டியொன்றில் நாகேஷ்

வானொலி: நியாயமாக உங்களுக்கு வரவேண்டிய நல்ல பெயர் மற்றவர்களுக்குச் செல்லும் போது உங்களுக்கு எப்படி இருக்கும்?

நாகேஷ்: நான் கவலையே படமாட்டேன் சார்.
ஒரு கட்டடம் கட்டும் போது, சவுக்கு மரத்தை முக்கியமா வச்சு சாரம் கட்டி, குறுக்குப் பலகைகள் போட்டு, அதன் மேல பல சித்தாள்கள் நின்னு, கைக்குக் கை கல் மாறி கட்டடம் உயர்ந்து கொண்டே போய் பல ஆண்டுகளுக்குப் பிறகு அது முடிந்த பிறகு, அந்தக் கட்டிடத்துக்கு வர்ண ஜால வித்தைகள் எல்லாம் அடிச்சு, கீழ இறங்கும் போது ஒவ்வொரு சவுக்கு மரமாக அவிழ்த்துக் கொண்டே வருவார்கள்.

கட்டடம் முடிந்து கிரஹப் பிரவேசத்தன்று எந்தக் கட்டடம் கட்டுவதற்கு முக்கிய காரணமாக இருந்ததோ அந்தச் சவுக்கு மரத்தை யார் கண்ணிலும் படாமல் பின்னால் எங்கயோ மறைத்து வைத்துவிட்டு, வேறெங்கேயோ வளர்ந்த வாழை மரத்தை முன்னால் நட்டு கிரஹகப் பிரவேசம் நடத்தி அனைவரையும் வரவேற்பார்கள்.
அத்தனை பெருமையும் வாழை மரத்துக்குப் போய் விடும்.
இதில் உள்ள உண்மை என்ன தெரியுமா? அந்த வாழை மரம் மூன்று நாள் வாழ்க்கை தான் வாழும். ஆடுமாடுகள் மேயும். குழந்தைகள் பிய்த்தெடுப்பார்கள். பிறகு குப்பை வண்டியிலே போய்ச் சேரும்.

மறைந்து கிடக்கிறதே அந்தச் சவுக்கு மரம் கண்ணீர் விடுவதில்லை. அடுத்த கட்டடம் கட்டுவதற்கு தயார் நிலையில் என்றைக்கும் சிரித்துக;் கொண்டேயிருக்கும்.!!!

நான் வாழை அல்ல...! சவுக்கு மரம்....

Best Application for Plus 2 students

'கவுன்சிலிங்' செல்வதற்குள்  அசத்தலாக ஓர் 'ஆப்ஸ்' : கோவை மாணவியின் சேவை - 'கவுன்சிலிங்' செல்வதற்குள்  அசத்தலாக ஓர் 'ஆப்ஸ்' : கோவை மாணவியின் சேவை
http://newshunt.com/share/39633191
Source: Dinamalar

Bank - ம் ஒரு கடன்காரன் தான்

ராக்கேஷ் ஒரு பேங்க்-கின் கிராமத்து பிராஞ்ச் அதிகாரி.
அவனிடம் அன்று ஒரு ஆதிவாசி ஆள் லோன் கேட்டு வந்தார்.

ராக்கேஷ் லோன் அப்ளிகேஷனை எடுத்து கையில் வைத்துக் கொண்டு கேட்டான்.

“எதுக்காகப் பணம் வேணும்…?”

அந்த ஆதிவாசி ஆள் பதில் சொன்னார்.

“கொஞ்சம் மாடு வாங்கி பால் வியாபாரம் பண்ணலாம்னு இருக்கேன்…!”

“அடமானமாய் என்ன தருவீங்க…?”

ஆதிவாசி ஆள் லேசாய் குழப்பத்துடன் கேட்டார்.

“அடமானம்னா என்ன..?”.

“நீங்க கேக்கற பணத்தோட மதிப்புக்கு சமமா ஏதாவது சொத்து கொடுத்தாத் தான் பேங்க் பணம் கொடுக்கும்.அதைத்தான் அடமானம்னு சொல்லுவோம்…!”

ஆதிவாசி ஆள் சொன்னார்.

“கொஞ்சம் நிலம் இருக்கு… ரெண்டு குதிரை இருக்கு… எது வேணுமோ அதை நீங்க எடுத்துக்கலாம்…!”.

ராக்கேஷ் இன்னும் கொஞ்ச நேரம் பேசிவிட்டு, நிலத்தை அடமானமாக வைத்துக் கொண்டு அவருக்குப் பணத்தை லோனாகத் தர ஏற்பாடு செய்தான்.

சில மாதங்கள் கழிந்தது.

அந்த ஆதிவாசி மீண்டும் பேங்கிற்கு வந்தார்.

தன்னுடைய கணக்குப் புத்தகங்களை எடுக்கச் சொன்னார்.

பைசா பாக்கியில்லாமல் கடன், வட்டி எல்லாவற்றையும் கணக்குப் போட்டு செட்டில் செய்தார்.

ராக்கேஷ் ஆச்சர்யத்துடன் கேட்டான்.

“கடன் எல்லாவற்றையும் கட்டியாகிவிட்டது. லாபம் எதுவும் இல்லையா…?”

அந்த ஆதிவாசி உற்சாகமாய்ப் பதில் சொன்னார்.

“லாபம் இல்லாமலா…? அது கிடைச்சது நிறைய…!”.

ராக்கேஷ் ஆர்வத்துடன் கேட்டான்.

“அதை எல்லாம் என்ன செய்தீர்கள்..?”.

“என்ன செய்யறது… பொட்டில போட்டு வச்சிருக்கேன்…!”.

ராக்கேஷ் யோசித்தான்.

‘இந்த மாச டார்கெட்க்கு சரியான ஆளாக் கிடைச்சுட்டான்…!’ என்று நினைத்தபடியே,”ஏன் நீங்க பணத்தை எங்க பேங்க்ல டெபாசிட் பண்ணலாமே…?” என்றான்.

ஆதிவாசி கேட்டார்.

“டெபாசிட்னா என்ன…?”.

ராக்கேஷ் விளக்கமாய்ப் பதில் சொன்னான்.

“நீங்க உங்க பேர்ல ஒரு கணக்கை ஆரம்பிச்சு… அதில உங்க பணத்தை போட்டு வச்சா… உங்க சார்பா பேங்க் உங்க பணத்தப் பார்த்துக்கும். உங்களுக்கு எப்ப எப்ப பணம் தேவையோ அப்ப அப்ப நீங்க பணத்தை எடுத்துக்கலாம்…!”.

கேட்டுக் கொண்டிருந்த அந்த ஆதிவாசி நபர் சற்றே சேரில் சாய்ந்து உட்கார்ந்தபடி கேட்டார்.

“அடமானமாய் என்ன தருவீங்க…?”.

LIC JEEVAN TARUN NEW Childrain's plan